சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 கான்செப்ட் பைக், ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்

By Ravichandran

சுசுகி நிறுவனம், தங்களின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 கான்செப்ட் மோட்டார்சைக்கிளை ஈஐசிஎம்ஏ மோட்டார்கைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

இது வெரும் கான்செப்ட் மாடல் பைக் தான் என சுசுகி நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும், இது தயாரிப்புக்கு தயாராக உள்ள பைக் மாடல் போல் தெரிகிறது.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

இந்த ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 கான்செப்ட் மோட்டார்சைக்கிளின் கார்னரிங் மற்றும் பிரேக்கிங் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் நோக்கில், வடிவமைப்பாளர்கள் மற்றும் இஞ்ஜினியர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

பைக்கின் பாடி மற்றும் இஞ்ஜினுக்கும் இடையில் சரியான இணக்கம் உருவாக்கபட்டுள்ளது.

சுசுகியின் அடுத்த தலைமுறை ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக், "ஸ்போர்ட்ஸ் பைக்களின் ராஜா" போல் திகழ உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 கான்செப்ட் மோட்டார்சைக்கிள், 1000சிசி, இன்லைன் 4-சிலிண்டர்கள் கொண்ட இஞ்ஜின் கொண்டுள்ளது.

நடுத்தர அளவிலான ஆர்பிஎம்களில் இயக்கபடுவதன் மூலம், அதிக பவர் வெளியீடு கிடைக்கும் படி, சுசுகி இஞ்ஜினியர்கள் இதனை வடிவமைத்துள்ளனர்.

இது, சுசுகியின் புதிய பிராட் பவர் சிஸ்டம் மூலம் சாத்தியமாகிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

அடுத்த தலைமுறை ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக்கில், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ரேசிங் பிராஜக்ட்களில் உபயோகிக்கப்படும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

மேலும், லாஞ்ச் கண்ட்ரோல், க்விக் ஷிஃப்ட் சிஸ்டம் மற்றும் பைக் இயக்கத்தை செம்மைபடுத்தும் பல்வேறு விதமான எலக்ட்ரானிக் கருவிகளும் ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக்கில் உள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

அதிகப்படியான உறுதிதன்மைக்காக, ஸ்விங் ஆர்ம் மற்றும் சேஸியும் மறு வடிவமைக்கபட்டுள்ளது.

நல்ல காற்றோட்டம் மற்றும் குறைந்த அளவிலான இழுவை-க்கு (டிராக்), ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக்கின் பாடிவர்க் மற்றும் கௌளிங் மறுவடிவமைக்கபட்டுள்ளது.

மேலும், ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக்கின் எடையை குறைக்க அதிகப்படியான கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஈஐசிஎம்ஏ மோட்டார்கைக்கிள் ஷோவில் அறிமுகம்;

ஈஐசிஎம்ஏ மோட்டார்கைக்கிள் ஷோவில் அறிமுகம்;

இந்த ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000 பைக், ஈஐசிஎம்ஏ மோட்டார்கைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்யபடுகிறது.

ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோ 2015, இத்தாலியின் மிலானோ நகரத்தில், நவம்பர் 19 முதல் நவம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Most Read Articles
English summary
Suzuki unveiled the new GSX-R1000 concept model at EICMA Motorshow. Suzuki claims that, this would be concept model alone. But, this is expected to be a production model Bike. This Next-generation Suzuki GSX-R1000 is projected to be "The King of Sportbikes".
Story first published: Wednesday, November 18, 2015, 19:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X