பாரீஸ் மோட்டார் ஷோவில் புதிய நிசான் மைக்ரா கார் அறிமுகம்!

Written By:

பாரீஸ் நகரில் துவங்கியிருக்கும் மோட்டார் ஷோவில் புதிய தலைமுறை நிசான் மைக்ரா கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்பை படங்களின் மூலமாக வாடிக்கையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த புதிய கார் தற்போது பொது பார்வைக்கு வந்திருக்கிறது.

இப்போதுள்ள மைக்ரா காரைவிட மிக அசத்தலான டிசைன் மற்றும் வசதிகளுடன் புதிய மைக்ரா கார் மாறியிருக்கிறது. இந்த காரின் கூடுதல் படங்கள் மற்றும் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

தற்போது நிசான் மைக்ரா கார் 5-ஆம் தலைமுறை மாடலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்ட நிசான் ஸ்வே கான்செப்ட் மாடலின் அடிப்படையில்தான் இந்த புதிய தலைமுறை நிசான் மைக்ரா கார் உருவாக்கப்பட்டிருக்கிறது.

புதிய ரெனோ க்ளியோ கார் உருவாக்கப்பட்ட நிசான்- ரெனோ கூட்டணி நிறுவனத்தின் CMF-B பிளாட்ஃபார்மில் இந்த காரும் உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய நிசான் மைக்ரா கார் 3995 மிமீ நீளமும், 1,742மிமீ அகலமும், 1,452மிமீ உயரமும் கொண்டது. தற்போதைய மாடலுடன் ஒப்பிட்டால் நீளத்தில் 170மிமீ வரையிலும், அகலத்தில் 77மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உயரம் 69மிமீ குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் வீல் பேஸ் 2,525மிமீ ஆகும். அதாவது, 75மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் மிக தாராளமான இடவசதியை அளிக்கும்.

புதிய நிசான் மைக்ரா காரின் டிசைன் மிக சிறப்பாக இருக்கிறது. தற்போதைய மைக்ரா காருக்கும் புதிய மைக்ரா காருக்கும் தோற்றத்தில் துளியும் சம்பந்தமில்லை. குறிப்பாக, வி வடிவிலான முகப்பு க்ரில் அமைப்பும், ஹெட்லைட் டிசைனும் செம கிளாஸ். வர்ணிப்பதை அத்துடன் முடித்துக்கொள்ள முடியாது. வலிமையான பம்பரில் இருக்கும் செவ்வக வடிவிலான பனி விளக்குகள் முகப்பு கவர்ச்சிக்கு வலு சேர்க்கிறது. ஏன், பக்கவாட்டிலும் கூட அசத்துகிறது.

டெயில் லைட்டிலிருந்து பானட் வரை அழகாக வளைந்து நெளிந்து செல்லும் பாடி லைன்கள், மிக கவர்ச்சியான சி பில்லர், அதற்கு ஏற்றாற்போல் அசத்தலான 10 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் வசீகரிக்க செய்கின்றன. பின்புறத்திலும் மிக கவர்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக பூமராங் வடிவிலான டெயில் லைட் டிசைனும், நேர்த்தியான பம்பரும் அசத்தல். மொத்தத்தில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

வெளிப்புறத்தில் மட்டும் சிறப்பாக இருந்தால்போதுமா, உட்புறத்திலும் அசத்துகிறது புதிய நிசான் மைக்ரா. மேலும், மிகவும் பிரிமியமான உணர்வை தருகிறது. புதிய 7 இன்ச் டச்ஸ்கிரீன் டேஷ்போர்டுக்கு அலங்காரமாகவும், நவீன தொழில்நுட்ப வசதிகளை பெறும் சாதனமாகவும் அமையும். மல்டிமீடியா சிஸ்டத்தின் கன்ட்ரோல் சிஸ்டம் அதற்கு கீழே உள்ளது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்ப்ளே சாஃப்ட்வேரை சப்போர்ட் செய்யும்.

புதிய தலைமுறையாக வரும் நிசான் மைக்ரா காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினை தனது கூட்டணி நிறுவனமான ரெனோவிடமிருந்து நிசான் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 72 பிஎச்பி பவரை அளிக்கும். டீசல் மாடலில் புதிய 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும்.

புதிய தலைமுறை நிசான் மைக்ரா கார் பிரான்ஸ் நாட்டின் பிலின்ஸ் என்ற இடத்தில் உள்ள ரெனோ கார் நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. சென்னையிலுள்ள நிசான்- ரெனோ ஆலையிலும் இந்த கார் உற்பத்தி செய்யப்படும்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் புதிய நிசான் மைக்ரா கார் விற்பனை செல்கிறது. அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
New Nissan Micra Car Unvieled in Paris Motor Show. Read the complete details about new Nissan Micra car in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos