ஜெனிவா கண்காட்சியில் மெக்லேரனின் 720S விலாசிட்டி கார் அறிமுகம்

Written by: Azhagar

ஜெனிவா மோட்டர் கண்காட்சியில் மெக்லேரன் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அடுத்த தயாரிப்பான 720S மாடல் காரை அறிமுகப்படுத்திய 24 மணிநேரத்தில் மீண்டும் ஒரு புதிய காரான 720S விலாசிட்டி என்ற மாடல் காரை அறிமுகப்படுத்தி ஆச்சர்யபடவைத்துள்ளது.

ஆட்டோமொபைல் உலகமே மெக்லேரனின் புதிய 720S விலாசிட்டி காரை பிரம்பிப்பாக பார்த்து வரும் சமயத்தில், முன்னர் மெக்லேரன் வெளியிட்ட 720S மாடல் காரிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதற்கான விவாதத்தை கார் ஆர்வலர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

மெக்லாரனின் சிறப்பு தயாரிப்பு பிரிவான MSOதான், புதிய 720S விலாசிட்டி காரை தயாரித்துள்ளது. இந்த கார் பார்க்க ஸ்போர்ட்ஸ் காரிற்கான அனைத்து அம்சங்களை கொண்டுயிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு காரை மாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகள் லிமிட்டாகத்தான் உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு மிரட்சி காட்டவேண்டும் என்ற நோக்குடன் 720S Velocity வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் முகப்பு மற்றும் மேற்பாகம் நெரல்லோ ரெட் என்ற வண்ணத்தைக் கொண்டும், காரின் பக்கவாட்டில், பின்புறம் ஆகியவை வால்கனோ ரெட் வண்ணத்தைக் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.

காரில் உலோகத்தாலான வெண்கல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் காரின் போனட், மேற்புறக் கூரை, சர்வீஸ் கவர் ஆகியவை கார்பன் நிறத்திலான ஃபைபர் ஆகியவற்றோடு தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் உட்புற வெப்பம் வெளியேறும் எய்ரோப்ரிட்ஜ் பாகம், பின்புறத்தில் கார்பன் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத் தோற்றம் மட்டுமின்றி உட்புறத்திலும் அதிகமாக கார்பன் கருப்பு நிறம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காரின் சீட்டுகளில் கார்பன் நிறத்துடன், அல்கேண்ட்ரா சிவப்பு மற்றும் ஹரிசா சிவப்பு வண்னங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதேநிறம் ஸ்டேரிங், மற்றும் கதவுக்கான அமைப்புகளிலுன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் முதலில் விற்பனை காணவுள்ள 720S விலாசிட்டி காரின் விலை அங்கு 3,35,000 பவுண்ட்ஸாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்திய மதிப்பில் தற்போது 720S விலாசிட்டி காரின் விலை ரூபாய். 2.72 கோடி. எனினும் ஐரோப்பியாவை தாண்டி உலகநாடுகளில் எப்போது இந்த கார் விற்பனைக்கு வரும் என்பது தொடர்பான அறிவிப்புகள் இல்லை.

மெக்லேரனின் சிறப்பு பிரிவில் தயாரிக்கப்பட்ட காராக மட்டுமல்லாமல், 720S விலாசிட்டி அந்நிறுவனத்தின் புதிய சூப்பர் சிரீஸ் மாடலில் வெளிவர்ந்திருக்கும் முதல் காராகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

மெக்லேரன் கார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள 720S காரின் புதிய புகைப்படங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் பாருங்கள்

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
McLaren has revealed the special edition 720S Velocity created by McLaren Special Operations (MSO) division. The model gets many upgrades compared to the regular model
Please Wait while comments are loading...

Latest Photos