ஜெனிவா மோட்டர் கண்காட்சியில் உலகிலேயே விலையுயர்ந்த எஸ்.யூ.வி கார் அறிமுகம்

Written by: Azhagar

மேடு பள்ளம் நிறைந்த கடினமான சாலை பரப்புகளில் ஒருமுறையாவது காரை ஓட்டவேண்டும் என்பது அதி தீவிர கார் பிரியர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் அதுபோன்ற அனுபவத்தை பெறுவதற்கான தொழில்நுட்பம் கொண்ட கார் ஒன்று உள்ளதா என்பது பெரும்கேள்வி தான்.

கார் ரேஸ் வீடியோ கேம்ஸ்களிலும், ஹாலிவுட் படங்களிலும் மட்டுமே நாம் பார்த்து வந்த கடினமான, சவால் மற்றும் சாகசம் நிறைந்த கார் பயணங்களை விரைவில் நாமும் அனுபவிக்க தயாராகலாம். அதற்கான வாய்ப்பை விரைவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கயிருக்கிறது.

கடினமான சாலைகளில் பயணத்தை எளிதாக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் கார் தான் மேபேக் . எஸ்.யூ.வி மாடலில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரில், பயணிகள் சொகுசுகிற்கான பல்வேறு வடிவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தெர்மல் கப் ஹோல்டர், தனித்துவமான வடிவமைப்பு கொண்ட லெதர் சீட்ஸ் மற்றும் காரிலிருந்தே வெளிப்புறங்களை பயணத்தின் போது அனுபவிக்க சன்ரூஃப் என கார்களில் சொகுசான வழிமுறைகளை எதிர்பார்க்கும் பல்வேறு முக்கிய அம்சங்கள் மெர்சடிஸின் மேபேக் ஜி-கிளாஸ் 650 எஸ்.யூ.வி காரில் உள்ளன.

புத்துணர்வை தரும் இதுபோன்ற வசிதியான அம்சங்கள் காரின் விலையின் மீது கவனத்தை ஈர்க்கின்றன. அமெரிக்க டாலர் மதிப்பில் மெர்சிடிஸ் மேபேக் ஜி-கிளாஸ் 650 காரின் விலை நிச்சயம் ஐந்து லட்சம் டாலர்களை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தரங்களில் குறைவில்லாமல், விலையிலும் சமரசம் செய்யாமல் கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் மெர்சிடிஸ் , இந்த மாடல் காரின் விலையிலும் எந்த சமாதானத்தையும் ஏற்படுத்திக்கொள்வதாக இல்லை.

இந்த மாடல் காரை இதுவரை இல்லாத விலையுயர்ந்த ஒரு எஸ்.யூ.வியாக அடையாளப்படுத்தவேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுதான் மெர்சிடிஸ் பென்ஸ் சந்தையில் மேபேக் ஜி-கிளாஸ் 650 காரை விற்க ஆய்த்தமாகி வருவதாக பிரபல வணிக இதழான பூளூம்பெர்க் கருத்து தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்புகளில் மட்டுமல்லாமல், வெளித்தோற்றத்திலும் மேபேக் ஜி-கிளாஸ் 650 கார் ஈர்க்கும் விதமாக உள்ளது. குறிப்பாக புகையை கக்கும் கேஸ் கஸ்லர்ஸ், இந்த எஸ்.யூ.வியை வாங்கும் பேராசையை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.

மேபேக் ஜி-கிளாஸ் 650 எஸ்.யூ.வி காரை சந்தைப்படுத்த விற்பனையையும் தாண்டி பல்வேறு நடவடிக்கைகளை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. அதில் தன்னிச்சையாக ஓட்டும் அம்சங்கள், காரில் நமது ஷேர் ஆட்டோவில் பகிர்ந்து பயணிப்பது உட்பட பல்வேறு வியாபார நுட்பத்தை கையாள மெர்சிடிஸ் பல்வேறு மாஸ்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்த அலோசித்து வருகிறது.

ஜெனிவா மோட்டர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள டாடாவின் புதிய டெமோ ரெக்மோ காரின் புகைப்பட தொகுப்புகளை கீழே பார்க்கலாம்.

English summary
Off-road driving is set to become more luxurious—and expensive—than ever before, thanks to the new Mercedes-Benz Maybach SUV unveiled at the Geneva Motor Show
Please Wait while comments are loading...

Latest Photos