ஆன்லைனில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கான டிக்கெட் விற்பனை துவக்கம்

By Ravichandran

2016ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் துவங்கியுள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது. இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் நடைபெற இருக்கும் 2016ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கான, டிக்கட் ஆன்லைனில் விற்பனைக்கு வழங்கப்படுகிறது.

பங்குகொள்பவர்கள்;

பங்குகொள்பவர்கள்;

இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், உலகம் முழுவதிலும் இருந்து, முன்னோடியாக விளங்கும் ஆட்டோமோபைல் உற்பத்தியாளர்கள் பங்குகொள்கின்றனர்.

இதில், பார்வையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட வாகனங்களையும் காணும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.

டிக்கட் புக்கிங் செய்யும் இணையதளங்கள்;

டிக்கட் புக்கிங் செய்யும் இணையதளங்கள்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கான டிக்கெட்டுகள், www.autoexpo-themotorshow.in மற்றும் www.bookmyshow.com என்ற இரு இணையதளங்களின் முகவரிகள் மூலம் புக்கிங் செய்யபடுகிறது.

எக்ஸ்போ நடைபெறும் இடம்;

எக்ஸ்போ நடைபெறும் இடம்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் அனுமதி வழங்கபடுகிறது.

இந்த எக்ஸ்போவில் பொதுமக்கள், 5 பிப்ரவரி 2015 முதல் 9 பிப்ரவரி 2015 வரையில் பங்குபெறலாம்.

இந்த எக்ஸ்போ, டெல்லி என்சிஆர் பகுதியின், கிரேட்டர் நொய்டா உள்ள ஐஈஎம் எல் அல்லது இந்தியா எக்ஸ்போ மார்ட் லிமிடெட் வளாகத்தில் நடைபெற உள்ளது.

டிக்கெட்களின் விலை;

டிக்கெட்களின் விலை;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கான டிக்கெட்களின் விலை, வார நாட்களில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான வர்த்தக நேரத்தில், 650 ரூபாய் என்று நிர்ணயிக்கபட்டுள்ளது.

இதே டிக்கெட்கள், பொதுமக்களுக்கு வார நாட்களில், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை 300 ரூபாய் என நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

இந்த டிக்கெட்கள், வாரத்தின் இறுதி நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையிலான நேரத்தில் பங்குபெற, பொதுமக்களுக்கு ரூபாய் 400 என நிர்ணயிக்கபட்டுள்ளது.

டிக்கெட்கள் மற்றும் டெலிவரி கட்டணம்;

டிக்கெட்கள் மற்றும் டெலிவரி கட்டணம்;

டிசம்பர் 31, 2015 அல்லது முன்னதாக, 3 முதல் 10 டிக்கெட்கள் வரை புக்கிங் செய்தால், அந்த டிக்கெட்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று இலவசமாக டெலிவரி செய்யபடும்.

2016, ஜனவரி 25-ஆம் தேதி வரை, 3 முதல் 10 டிக்கெட்களுக்கு குறைவாக புக்கிங் செய்தால், அந்த டிக்கெட்களை ஹோம் டெலிவரி பெற ரூபாய் 75, டெலிவரி கட்டணமாக செலுத்த நேரிடும்.

ஹோம் டெலிவரி தேர்வு செய்து கொள்ளாத வாடிக்கையாளர்கள், இந்த டிக்கெட்களை டிக்கெட் கவுண்டர்களில் உள்ள எக்ஸ்சேஞ்ஜ் கவுண்டர்களில் சென்று பெற்று கொள்ளலாம்.

இந்த டிக்கெட் கவுண்டர்கள் கிரேட்டர் நொய்டாவில் உள்ள, இந்த எக்ஸ்போ நடைபெறும் வளாகத்தின் பார்ர்கிங் மையம் அருகே உள்ளது.

டிக்கெட்களின் டெலிவரி துவங்கும் தேதி;

டிக்கெட்களின் டெலிவரி துவங்கும் தேதி;

எக்ஸ்போவுக்கான டிக்கெட்களின் டெலிவரி, 15 ஜனவரி 2016 முதல் துவங்க உள்ளது.

டிக்கெட்களின் டெலிவரி நிறைவடையும் தேதி;

டிக்கெட்களின் டெலிவரி நிறைவடையும் தேதி;

இந்த எக்ஸ்போவுக்கான டிக்கெட்கள், 2016, ஜனவரி 25-ஆம் தேதி தாண்டி, அன்லைனில் புக்கிங் செய்தாலும், ஹோம் டெலிவரிக்கான வாய்ப்புகள் கிடைக்காது.

அப்படியான சூழ்நிலையில், டிக்கெட்களை கிரேட்டர் நொய்டாவில் உள்ள எக்ஸ்போ வளாகத்தின் எக்ஸ்சேஞ்ஜ் கவுண்டர்களிலேயே சென்று பெற்று கொள்ள வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது.

அங்கிகரிக்கபட்ட டிக்கெட்டிங் நிறுவனம்;

அங்கிகரிக்கபட்ட டிக்கெட்டிங் நிறுவனம்;

www.autoexpo-themotorshow.in தவிர்த்து, இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் அங்கிகரிக்கபட்ட டிக்கெட்டிங் நிறுவனமாக www.bookmyshow.com மட்டுமே விளங்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு இணையதளங்களை தவிர்த்து, டிக்கெட்களை வேறு எங்கு வாங்கினாலும் அது செல்லாது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். பொது மக்கள், வேறு எங்காவது டிக்கெட்களை வாங்கினால், அதற்கு எக்ஸ்போ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொருப்பல்ல என தெளிவாக கூறியுள்ளனர்.

அனுமதி விவரம்;

அனுமதி விவரம்;

650 ரூபாய் மதிப்புள்ள பிசினஸ் நேரத்திற்கான (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான வர்த்தக நேரத்திற்கான) டிக்கெட்களை வாங்குபவர்கள், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 மணி வரையிலும் கூட எக்ஸ்போவில் பங்கு பெறலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகளை காண...

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ பற்றிய முக்கிய தகவல்கள்

Most Read Articles
English summary
Online Ticket Booking for 2016 Delhi Auto Expo (The Motor Show 2016) has begun. The Motor Show 2016 or 2016 Delhi Auto Expo is one of the largest biennial automotive event in India. Bookings for this Expo are on online at www.autoexpo-themotorshow.in and www.bookmyshow.com
Story first published: Wednesday, November 25, 2015, 15:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X