பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி எஸ்யூவி

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பல நூறு மாடல்களில் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் எம்மை கவர்ந்தாலும், சில மாடல்கள் எமது கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதில், ஒரு மாடல் ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி எஸ்யூவி. யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்ற அதே முனைப்பில், செரோக்கீ எஸ்ஆர்டி எஸ்யூவியின் பிரத்யேக படங்களை உங்களது பார்வைக்கும் வழங்குகிறோம்.

ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி

கம்பீரமான டிசைன், பிரிமியமான இன்டீரியர், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தந்த ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி எஸ்யூவியை கண்டு மயங்காதார் இல்லை என்பதை நாம் நேரில் உணர முடிந்தது. முகப்பில் பெரிய க்ரில் அமைப்பு, அதற்கு ஏற்றாற்போல் சிறப்பான டிசைனுடன் கூடிய ஹெட்லைட்ஸ், 20 இன்ச் க்ரோம் கோலியட் வீல்கள் என எம் மனதை கட்டிப் போட்டது. இன்டீரியரை பொறுத்தவரையில், லெதர் இருக்கைகள், மர அலங்காரத் தகடுகள், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என்று பார்ப்போரை மயங்க வைக்கிறது.

இந்த எஸ்யூவியில் 6.4 லிட்டர் எச்இஎம்ஐ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 475 எச்பி பவரையும், 637 என்எம் டார்க்கையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 257 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருப்பதுடன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இதற்கு வலு சேர்க்கும் அம்சம்.

ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி மாடலில் 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்டிரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்த ஆண்டு இரண்டாவது பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் ஆடி க்யூ5 போன்ற பிரிமியம் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Jeep has entered India for the very first time with the three new models. The most powerful of the three models is the Jeep Grand Cherokee SRT.
Story first published: Saturday, February 13, 2016, 9:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X