மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கார்... உற்பத்திக்கு கொண்டு செல்ல திட்டம்

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் கார் பார்வையாளர்களையும், ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வரவேற்பை பார்த்து மெய்சிலிர்த்து போன மஹிந்திரா, தற்போது இந்த காரை உற்பத்திக்கு கொண்டு செல்லவும் முடிவு செய்திருக்கிறது.

மேலும், இந்த காரின் விலை குறித்த தகவலையும் மஹிந்திரா நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்களும், பலரையும் வசியம் செய்த மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் காரின் படங்களும் ஸ்லடைரில் காத்திருக்கின்றன.

டிசைன்

டிசைன்

மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக சமீபத்தில் மாறிய இத்தாலியை சேர்ந்த புகழ்பெற்ற பினின்ஃபரீனா கார் டிசைன் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், மும்பையில் உள்ள மஹிந்திரா டிசைன் ஸ்டூடியோவின் நிபுணர்கள் இந்த புதிய கான்செப்ட் காரை வடிவமைத்துள்ளனர்.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

பெரும் வெற்றியை ருசித்த மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின், கூபே ரக மாடலாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பின்புற கூரையை தாழ்வாக்கி, பூட் ரூமுடன் இணைத்து கூபே ரகத்திலான மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியை மாற்றியிருக்கின்றனர். இது பிஎம்டபிள்யூ எக்ஸ்6 உள்ளிட்ட சொகுசு கூபே ரக மாடல்களை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது.

 வரவேற்பு

வரவேற்பு

பொதுவாக கான்செப்ட் மாடல்களை வைப்பதன் நோக்கமே, பார்வையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையினரிடம் எந்தளவு வரவேற்பு பெறுகிறது என்பதை பார்த்து, அதன் பிறகு உற்பத்திக்கு கொண்டு செல்லலாமா என்பது குறித்து முடிவு எடுப்பதற்குதான்.

உற்பத்தி

உற்பத்தி

இந்த கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததையடுத்து, தற்போது இந்த காரை உற்பத்திக்கு கொண்டு செல்வதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

பிரிமியம் இன்டீரியர்

பிரிமியம் இன்டீரியர்

வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பிரிமியம் அப்ஹோல்ஸ்ட்ரி, பக்கெட் இருக்கைகள், பல் வண்ணக் கலவையிலான இன்டீரியரும் என மிக கலக்கலாக இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

மஹிந்திரா எஎக்ஸ்யூவி 500 எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின்தான் இந்த கூபே மாடலிலும் பயன்படுத்தப்படும். இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக உள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாாக்ஸ் பயன்படுத்தப்படும்.

செயல்திறன்

செயல்திறன்

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, துவங்க நிலையிலிருந்து 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6 வினாடிகளை எடுத்துக் கொள்ளும்.

விலை

விலை

ரூ.20 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என மஹிந்திரா நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.

போட்டியாளர்

போட்டியாளர்

இதன் வடிவமைப்பு ரகத்தில் நேரடி போட்டி இல்லை. இதன் வடிவமைப்பு பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மற்றும் பென்ஸ் ஜிஎல்இ க்ளாஸ் மாடல்களுடன் போட்டி போடுகிறது. எனவே, குறைவான விலையிலான சொகுசு கூபே ரக மாடலாக இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் கேலரி

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் கேலரி

Most Read Articles
English summary
Mahindra is considering a production version of the XUV Aero concept in the near future.
Story first published: Tuesday, February 9, 2016, 13:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X