மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

விட்டாரா பிரெஸ்ஸா பற்றி...

விட்டாரா பிரெஸ்ஸா பற்றி...

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி, கிரேட்டர் நொய்டாவில் இன்று துவங்கிய 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல் கார் மாடலாக அறிமுகம் செய்யபட்டது.

விட்டாரா பிரெஸ்ஸா தான் மாருதி சுஸுகி நிறுவனம் சார்பாக அறிமுகம் செய்யபடும் 4-மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட முதல் எஸ்யூவி மாடல் ஆகும்.

இஞ்ஜின் விவரம்;

இஞ்ஜின் விவரம்;

எரிபொருள் வகை - டீசல் இஞ்ஜின்

இஞ்ஜின் - 1.3 லிட்டர்

பவர் - 4,000 ஆர்பிஎம்களில், 89 பிஹெச்பி

டார்க் - 1,750 ஆர்பிஎம்களில் 200 என்எம் டார்க்

சியாஸ் செடான் காரில் உள்ளது போன்ற அதே டீசல் ஹைப்ரிட் டெக்னாலஜி தான் இந்த விட்டாரா பிரெஸ்ஸா-விலும் உபயோகிக்கபடுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி-யின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் - 1;

சிறப்பம்சங்கள் - 1;

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் சிறப்பம்சங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோம்.

(*) அனைத்து வேரியண்ட்களிலும் ஏபிடி-யுடன் கூடிய ஏபிஎஸ்

(*) உயர்ரக ட்ரிம் வேரியண்ட்களில் பாசஞ்ஜர் ஏர்பேக்

(*) குரூஸ் கண்ட்ரோல்

(*) ஆட்டோ ஹெட்லேம்கள்

சிறப்பம்சங்கள் - 2;

சிறப்பம்சங்கள் - 2;

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் சிறப்பம்சங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோம்.

(*) மழையை உண்ரும் வைப்பர்கள் (ரெய்ன் சென்சிங் வைப்பர்ஸ்)

(*) இண்டெக்ரேட்டட் டர்ன் இண்டிகேட்டர்கள் உடைய எலக்ட்ரிக் ஃபோல்டிங் ஓஆர்விஎம்-கள்

(*) கீ-லெஸ் எண்ட்ரி (சாவிகளே இல்லாமல் நுழையும் வசதி)

(*) புஷ் பட்டன் ஸ்டார்ட்

சிறப்பம்சங்கள் - 3;

சிறப்பம்சங்கள் - 3;

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் சிறப்பம்சங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோம்.

(*) ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

(*) ட்யூவல் டோன் நிறங்கள் அமைப்பு

(*) ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி

(*) ஆப்பிள் கார்பிளே வசதி கொண்ட டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம்

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி-யின் தோற்றம் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி-யின் முன் தோற்றம், 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காணபட்ட எக்ஸ்ஏ-ஆல்ஃபா கான்செப்ட்-டை நினைவுறுத்தும் வகையில் உள்ளது.

புரொஜெக்டர் யூனிட்களாக விளங்கும் ஹெட்லேம்ப்ல்கள், ஒருங்கிணைக்கப்பட்ட பகல் நேரத்தில் எரியும் விளக்குகளை கொண்டுள்ளது. இதன் கிரில், குரோம் ஃபினிஷ் உடனான சிங்கிள் ஸ்லாட்-டாக உள்ளது.

ரியரில் மாற்றம்?

ரியரில் மாற்றம்?

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரியரில் கவணிக்கதக்க மாற்றங்கள் காணப்படுகிறது. கான்செப்ட் வடிவில் காணப்பட்டதை விட இதன் டெய்ல் லேம்ப்கள், சுருக்கபட்டுள்ளது.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, இந்த ஆண்டின் வரும் மாதங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி-யானது, ஃபோர்ட் இகோஸ்போர்ட் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களுடன் போட்டி போட வேண்டியதாக இருக்கும்.

விலை?

விலை?

தற்போது வரை, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா-வின் விலை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய மாருதி விட்டாரா.. இதுவரை வெளிவராத 10 முக்கிய விஷயங்கள்

க்ரெட்டாவை ஒடுக்க எஸ் க்ராஸுக்கு திராணி இல்லை... புதிய காம்பேக்ட் எஸ்யூவியை களமிறக்கும் மாருதி

மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா படங்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை டீஸ் செய்தது மாருதி

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki firm has unveiled their Vitara Brezza SUV at the ongoing 2016 Delhi Auto Expo in Greater Noida. This Vitara Brezza is the Maruti's first ever sub 4-metre SUV. Maruti Suzuki Vitara Brezza would compete with the likes of Ford Ecosport and the Hyundai Creta. Vitara Brezza is expected to go on sale later this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X