யுஎம் மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம்- விலை குறைவான பிரிமியம் மாடல்!

By Saravana

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் லோஹியா ஆட்டோவின் கூட்டணியில், தனது ரெனிகேட் மோட்டார்சைக்கிள் பிராண்டில் 3 மாடல்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. விலை குறைவான பிரிமியம் தோற்றம் கொண்ட மாடல்களாக வந்திருக்கும் யுஎம் மோட்டார்சைக்கிள்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்களின் பிரத்யேக படங்களை கேலரியிலும், தொடர்ந்து விலை உள்ளிட்ட விபரங்களை கேலரியின் கீழே படிக்கலாம்.

யுஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ்

யுஎம் ரெனிகேட் மோட்டார்சைக்கிள்கள் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ், ரெனிகேட் கமாண்டோ, ரெனிகேட் கிளாசிக் என மூன்று விதமான மாடல்களில் கிடைக்கும். இந்த மூன்று மாடல்களுமே, பின்புறத்தில் 'சாஃப்ட் டெயில்' க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களின் டிசைன் அம்சங்களை கொண்டிருக்கின்றன. இதில், கமாண்டோ பைக் மிலிட்டரி ஸ்டைலிலான தோற்றம், ராணுவ பச்சை வண்ணத்தை பெற்றிருக்கிறது. ஸ்போர்ட் எஸ் நேக்கட் ரகத்திலான க்ரூஸராக இருக்கிறது. கிளாசிக் மாடல் அதிக சில்வர் அலங்காரங்களுடன், சாதாரண ரக க்ரூஸர் வகையை சேர்ந்தது.

இந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் அனைத்திலும் 25 பிஎச்பி பவரையும், 21.8 என்எம் டார்க்கையும் வழங்கும் 279சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மூன்று மாடல்களும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. அடிப்படையில் ஒரே மாடல் என்பதால் தொழில்நுட்ப சமாச்சாரங்களில் அதிக வித்தியாசங்கள் இல்லை.

மூன்று மாடல்களிலும் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக் சிஸ்டமும் உள்ளது.

யுஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் மாடல் ரூ.1.49 லட்சத்திலும், ரெனிகேட் கமாண்டோ மாடல் ரூ.1.59 லட்சத்திலும், ரெனிகேட் கிளாசிக் மாடல் ரூ.1.69 லட்சத்திலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவில், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுடன் விலையில் போட்டி போடும். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்ய யுஎம்- லோஹியா கூட்டணி திட்டமிட்டிருக்கிறது. மேலும், இந்தியாவில் மாதத்திற்கு 3,000 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யவும் இலக்கு வைத்துள்ளது.

ஹார்லி டேவிட்சன், இந்தியன் மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து, இந்தியாவில் களமிறங்கும் அமெரிக்காவின் மூன்றாவது பிரபல க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர் யுஎம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
UM Renegade Cruiser Motorcycles Launched In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X