பஜாஜ் அவென்ஜர் 220... க்ரூஸர் பைக் பிரியர்களுக்கான குட் சாய்ஸ்...!

பைக்கில் நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. கல்லூரி மாணவர்கள், பணியில் இருக்கும் பேச்சிலர்கள் நண்பர்களுடன் வார இறுதி நாட்களில் நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கு அடிக்கடி திட்டமிடுவது வாடிக்கை.

ஆனால், அதுபோன்ற பயணங்களை இனிமையாக்குவதற்கு ஓர் சிறந்த பைக் மாடல் வேண்டுமல்லவா? நீண்ட தூர பயணங்களை சாதாரண பைக்குகளில் செல்லும்போது முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படும். இதனால், பயணத்தை பாதியில் முடிக்க நேரிடுகிறது. ஆனால், உடல் வலி பிரச்னை இல்லாமல் நீண்ட தூர பயணங்களை மகிழ்ச்சிகரமாக முடிப்பதற்கு க்ரூஸர் மற்றும் டூரர் ரக பைக்குகள் சிறந்ததாக இருக்கிறது.

க்ரூஸர் ரக பைக் மாடல்கள் எப்போதுமே விலை அதிகமாக இருப்பதால் பலர் சாதாரண பைக்குகளிலேயே சிரமத்துடன் பயணத்தை தொடர வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கு காரணம் பட்ஜெட்தான். இதனை மனதில் வைத்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்து வரும் குறைவான விலை க்ரூஸர் மாடல்தான் அவென்ஜர் 220.


அவென்ஜர் தலைமுறை

அவென்ஜர் தலைமுறை

கவாஸாகி எலிமினேட்டர் டிசைன் அடிப்படையில் உருவான பஜாஜ் அவென்ஜர் முதலில் 180சிசி எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 200சிசி எஞ்சினும், தற்போது 220சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது.

டிசைன்

டிசைன்

பார்த்தவுடன் பிடித்துப் போக செய்யும் க்ரூஸர் பைக் ஸ்டைல். அகலமான டேங்க், தாழ்வான இருக்கை அமைப்பு, பின்புற பயணிக்கான பேக் ரெஸ்ட், வட்ட வடிவ ஹெட்லைட் என டிசைன் கவர்ச்சியாக இருக்கிறது. மேலும், குரோம் பூச்சு பாகங்கள் எக்கச்சக்கமாக பயன்படுத்தப்பட்டு பிரிமியம் ஃபீலை வழங்குகிறது. டிசைனில் குறையொன்றுமில்லை.

எஞ்சின்

எஞ்சின்

கடந்த 2010ம் ஆண்டு 220சிசி மாடல் விற்பனைக்கு வந்தது. இந்த பைக்கில் 219.89சிசி கொண்ட லிக்யூடு கூல்டு டிடிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.03பிஎஸ் பவரையும், 17.5 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது.

செயல்திறன்

செயல்திறன்

நீண்ட தூர பயணங்கள் செல்வோர்க்கு மிட்ரேஞ்சில் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் தேவைப்படும். அதனை மனதில் வைத்தே இந்த பைக்கின் எஞ்சினை ட்யூன் செய்துள்ளனர். ஆரம்ப நிலை பெர்ஃபார்மென்ஸ் எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும், இந்த பைக்கில் நியூட்ரலுக்கு கியரை கொண்டு வருவதற்கு சிரமம் இருக்கிறது.

ரைடிங் பொசிஷன்

ரைடிங் பொசிஷன்

ஓட்டுபவருக்கு சிறப்பான அமரும் அமைப்பை கொண்டிருக்கிறது. இருக்கைகள் நல்ல குஷனுடன் சொகுசாக இருக்கிறது. இதன் அகலமான ஹேண்டில்பார்களும் நீண்ட தூர பயணங்களின்போது அலுப்பை தராது. தாழ்வான இருக்கை அமைப்பு கொண்டிருப்பதால் பேலன்ஸ் குறையும் என்ற அச்சம் இல்லை.

உயரம் பிரச்னை இல்லை

உயரம் பிரச்னை இல்லை

உயரமானவர்கள், உயரம் குறைவானர்கள் என அனைவருக்கும் இந்த பைக்கை எளிதாக ஓட்டலாம் என்பது மிக முக்கிய ப்ளஸ் பாயிண்ட். இதற்கு இருக்கை மற்றும் ஹேண்டில்பார் அமைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது.

கையாளுமை

கையாளுமை

இது நெடுஞ்சாலையில் பயன்படுத்துவதற்கும், நீண்ட தூரம் செல்வதற்குமான பைக். எனவே, நகர்ப்புறத்தில் பயன்படுத்த சிறந்த மாடலாக குறிப்பிட இயலாது. இதன் வீல் பேஸ் அதிகம் என்பதால், சாதாரண பைக்குகளைப் போன்று, போக்குவரத்து நெரிசலில் லாவகமாக புகுந்து செல்வதற்கு முயற்சி செய்வது போதிய பலன் தராது.

 பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

பார்ப்பதற்கு டேங்க் பெரிதாக தெரிந்தாலும், 3.4 லிட்டர் ரிசர்வ் கொண்ட 14 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் ஒரு முக்கிய பிரச்னையையும் அறிவுறுத்தியாக வேண்டும். பெட்ரோல் டேங்க்கை முழுமையாக நிரப்பிவிட்டு, சைடு ஸ்டான்ட் போட்டு நிறுத்தினால் பெட்ரோல் மூடி வழியாக வழிந்துவிடுகிறது. அரை லிட்டர் வரை இழப்பு ஏற்படும்.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 30 - 35 கிமீ நடைமுறையில் மைலேஜ் தருகிறது. ஒருமுறை பெட்ரோல் டேங்க்கை நிரப்பினால் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

 சுவிட்சுகள்

சுவிட்சுகள்

குரோம் அலங்காரம் கொடுக்கப்பட்ட அளவுக்கு சுவிட்சுகளின் தரத்தில் பஜாஜ் கவனம் செலுத்தவில்லை. ஆனால், இயக்குவதற்கும் எளிதாக இருக்கின்றன. சுவிட்சுகளில் பேக்லிட் இல்லாதது பெரும் குறை. எஞ்சின் ஆஃப் சுவிட்சு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இந்த பைக்கில் டிஜிட்டல் திரைகளுக்கு வேலை இல்லை. அனலாக் ஸ்பீடோமீட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிரிப் மீட்டர் உண்டு. டாக்கோமீட்டர் கிடையாது. எரிபொருள் அளவு மானி, பேட்டரி இன்டிகேட்டர், நியூட்ரல் லைட், பெட்ரோல் டேங் மேலே கொடுக்கப்பட்டு இருக்கிறது. பயணத்தின்போது பெட்ரோல் இருப்பை அறிந்து கொள்ள எரிபொருள் அளவீட்டு மானியை பார்ப்பதற்கு சிரமம் இருப்பதோடு, கவனக் குறைவையும் ஏற்படுத்தலாம். மேலும், இந்த எரிபொருள் அளவீட்டு மானியில் தண்ணீர் உள்ளே புகுந்துவிடும் பிரச்னையும் இருக்கிறது. பெரும்பாலான அவென்ஜர் பைக்குகளில் இந்த பிரச்னை உள்ளது.

எரிபொருள் மானி

எரிபொருள் மானி

டாக்கோமீட்டர் கிடையாது. எரிபொருள் அளவு மானி, பேட்டரி இன்டிகேட்டர், நியூட்ரல் லைட், பெட்ரோல் டேங் மேலே கொடுக்கப்பட்டு இருக்கிறது. பயணத்தின்போது பெட்ரோல் இருப்பை அறிந்து கொள்ள எரிபொருள் அளவீட்டு மானியை பார்ப்பதற்கு சிரமம் இருப்பதோடு, கவனக் குறைவையும் ஏற்படுத்தலாம். மேலும், இந்த எரிபொருள் அளவீட்டு மானியில் தண்ணீர் உள்ளே புகுந்துவிடும் பிரச்னையும் இருக்கிறது. பெரும்பாலான அவென்ஜர் பைக்குகளில் இந்த பிரச்னை உள்ளது.

டயர்கள்

டயர்கள்

க்ரூஸர் என்பதை காட்டும் விதத்தில் பின்புறத்தில் 130/90 x 15 அளவுகொண்ட அகலமான டயரும், பின்புறத்தில் 90/90 x 17 டயரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் இருக்கும் எம்ஆர்எஃப் டயர் சிறந்த கிரிப்பை தருகிறது. ஆனால், நீண்ட தூர பயணங்களுக்கான பிரத்யேக மாடலாக கூறப்படும் இந்த பைக்கில் ட்யூப்லெஸ் டயர் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

பிரேக்

பிரேக்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கிறது. பிரேக் எதிர்பார்த்த அளவு செயல்மிக்கதாக இல்லை.

 எடை

எடை

154 கிலோ எடை கொண்ட இந்த பைக்கை தள்ளுவதற்கு சிறிது சிரமம் ஏற்படுகிறது. மேலும், பஞ்சர் ஆகிவிட்டாலும் தள்ளிசெல்வது சிரமம்.

நோ கிக் ஸ்டார்ட்

நோ கிக் ஸ்டார்ட்

இந்த பைக்கில் கிக் ஸ்டார்ட் வசதி கிடையாது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி மட்டுமே உண்டு.

இந்த சாவிதான்...

இந்த சாவிதான்...

சில பைக், ஸ்கூட்டர்களில் ப்ளிப் கீ வந்துவிட்ட நிலையில், இந்த பைக்கின் மதிப்பை குறைக்கும் ஒரே விஷயம் சாவிதான். இந்த சாவியை பார்த்தால் பைக் என்று நம்பகூடமாட்டார்கள். படத்தில் நீங்களே பார்த்து மார்க் போட வேண்டியதுதான்.

ஃபுட்போர்டு

ஃபுட்போர்டு

இந்த பைக்கில் ஃபுட்போர்டு இல்லாதது குறை. மேலும், கியர் லிவர் மற்றும் பிரேக்குகள், வழக்கமான இடத்தில் இல்லாமல் முன்னால் கொடுக்கப்பட்டுள்ளது சிலருக்கு சிரமத்தை கொடுக்கும்.

ரீசேல் மதிப்பு

ரீசேல் மதிப்பு

ரீசேல் மதிப்பும் இந்த பைக்கிற்கு குறைவு என்பதையும் மனதில் வைக்க வேண்டிய விஷயம்.

பட்ஜெட்

பட்ஜெட்

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரே க்ரூஸர் பைக் மாடல் அவென்ஜர் 220 மட்டுமே. பெங்களூரில் 93,000 ஆன்ரோடு விலையில் இந்த பைக் கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பையும், மனதிற்கு நிறைவையும் அளிக்கும். மொத்தத்தில் நிதான விரும்பிகளின் நிம்மதி தரும் பைக் மாடலாக கூறலாம்.

Most Read Articles
English summary
Bajaj Avenger Test Drive Report.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X