பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 Vs கேடிஎம் ஆர்சி200: ஒப்பீட்டு பார்வை

By Saravana

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக்கை பஜாஜ் ஆட்டோ சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோவின் முழுவதும் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக மாடலாக வந்திருக்கும் இந்த புதிய பல்சர் ஏராளமான நவீன சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் யமஹா ஆர்15, ஹோண்டா சிபிஆர்150ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர்250 ஆர் பைக்குகள் இருந்தாலும், ஒரே எஞ்சினுடன் மல்லுக்கு நிற்கப் போகும் கேடிஎம் ஆர்சி200 பைக்குடன் புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் சிறப்பம்சங்களின் ஒப்பீட்டுத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

01. வடிவமைப்பு

01. வடிவமைப்பு

தோற்றத்தில் மிரட்டலாக இருக்கிறது புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200. சற்று பெரிய பைக் போன்ற தோற்றத்தையும், க்ளிப் ஆன் ஹேண்டில்பார் போன்றவற்றுடன் கூடுதல் மதிப்பெண் பெறுகிறது புதிய பல்சர் ஆர்எஸ்200. மறுபக்கம் கேடிஎம் ஆர்சி200 மிக கச்சிதமாக இருப்பதோடு, ஆரஞ்ச் வண்ணத்திலான ட்ரெல்லிஸ் ஃப்ரேம் ஆகியவை கூடுதல் வசீகரித்தை கொடுக்கிறது. கேடிஎம் ஆர்சி200 பைக்கின் டிசைன் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் சிலருக்கு பிடிக்கும், சிலரை கவராமல் போகலாம். ஆனால், பல்சர் ஆர்எஸ்200 அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கிறது.

02. எஞ்சின் விபரம்

02. எஞ்சின் விபரம்

இரண்டு பைக்குகளிலும் இருப்பது ஒரே எஞ்சின்தான். இரு பைக்குகளிலும் இருக்கும் 199.5 சிசி எஞ்சின்தான் உள்ளது. ஆனால், கேடிஎம் ஆர்சி200 பைக்கில் ஒரு ஸ்பார்க் ப்ளக் கொண்டிருக்கும் நிலையில், பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் மூன்று ஸ்பார்க் ப்ளக்குகள் கொண்டது. இரு பைக்குகளிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

03. எஞ்சினின் அதிகபட்ச சக்தி

03. எஞ்சினின் அதிகபட்ச சக்தி

சக்தியை வெளிப்படுத்தும் திறனில் இரு பைக்குகளுக்கும் இடையில் சிறிய வேறுபாடுதான் உள்ளது. புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக் அதிகபட்சமாக 24.2 பிஎச்பி பவரையும், கேடிஎம் ஆர்சி200 பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 24.7 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இதில், கேடிஎம் ஆர்சி200 முன்னிலை பெறுகிறது.

04. மைலேஜ்

04. மைலேஜ்

புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக் லிட்டருக்கு 54 கிமீ மைலேஜையும், கேடிஎம் ஆர்சி200 பைக் லிட்டருக்கு 35 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. மைலேஜில் பல்சருக்குத்தான் வெற்றி. புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் 13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும், கேடிஎம் ஆர்சி200 பைக்கில் 9.5 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் டேங்கும் உள்ளது.

05. வசதிகள்

05. வசதிகள்

இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் இரு பைக்கிலுமே உள்ளன. பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் அனலாக் மற்றும் மின்னணு திரை கொண்ட மீட்டர் கன்சோலும், கேடிஎம் ஆர்சி200 பைக்கில் பகல்நேர விளக்குகள், முழுவதும் மின்னணு திரை கொண்ட மீட்டர் கன்சோல் உள்ளது. ஏரோடைனமிக் விண்ட்ஷீல்டு கேடிஎம் ஆர்சி200 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

06. சஸ்பென்ஷன்

06. சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன் அமைப்பில் கேடிஎம் ஆர்சி200 முன்னிலை பெறுகிறது. ஏனெனில், கேடிஎம் ஆர்சி200 பைக்கின் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது. ஆனால், புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் முன்புறத்தில் சாதாரண டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.

07. பிரேக் சிஸ்டம்

07. பிரேக் சிஸ்டம்

புதிய பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் முன்புறத்தில் 300மிமீ பட்டர்ஃப்ளை டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருப்பதுடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. கேடிஎம் ஆர்சி200 பைக்கின் முன்புறத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக் பிரேக்கும், பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது. கேடிஎம் ஆர்சி200 பைக்கில் ஏபிஎஸ் ஆப்ஷன் இல்லாதது மிகப்பெரிய குறை. இந்த விஷயத்தில் பல்சர் முன்னிலை பெறுகிறது.

08. விலை ஒப்பீடு

08. விலை ஒப்பீடு

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200[Non ABS]: 1.18 லட்சம்

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 [ABS]: 1.30 லட்சம்

கேடிஎம் ஆர்சி200: ரூ.1.66 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

09. எது பெஸ்ட்?

09. எது பெஸ்ட்?

சிறப்பம்சங்கள், எஞ்சின் ஆகியவற்றில் இரு பைக்குகளுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. எனவே, வடிவமைப்பு மற்றும் விலையை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். பட்ஜெட் விலையில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சிறப்பான தோற்றம் கொண்ட ஓர் நல்ல மாடல் புதிய பல்சர் ஆர்எஸ்200. கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க மாடல் பல்சர்தான். ஆனால், பெர்ஃபார்மென்ஸ், தனித்துவமான வடிவமைப்பு போன்றவை விலை சற்று கூடுதலானாலும் கேடிஎம் ஆர்சி200 பைக்கையே வாங்கத் தூண்டுகிறது.

 10. கொசுறுத் தகவல்

10. கொசுறுத் தகவல்

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தின் 48 சதவீத பங்குகள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வசம் உள்ளது. மேலும், இந்த புதிய பல்சர் ஆர்எஸ்200 பைக்கை கேடிஎம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்தான் பஜாஜ் ஆட்டோ உருவாக்கி இருக்கிறது. ஆனால், க்ளிப் ஆன் ஹேண்டில்பார், ட்ரிப்பிள் ஸ்பார்க் ப்ளக் கொண்ட எஞ்சின், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற கூடுதல் அம்சங்களுடன் கேடிஎம் ஆர்சி200 பைக்கைவிட குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ளது பஜாஜ் ஆட்டோ. இரு பைக்குகளும் வெவ்வேறு வித வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
The 200 cc sport bike segment is again dominated by KTM with the RC 200. Being manufactured along with the KTM RC 200 though is the newly launched Bajaj Pulsar RS 200. Both the motorcycles have a full body fairing and clip on bars to give them the right feel they were made for—to perform. So, will Bajaj's three-plug RS 200 stand a chance against the KTMs single plug RC 200? or does the Bajaj Pulsar RS 200 have a little too much spark but not enough to do the business? Let's take a look.
Story first published: Monday, March 30, 2015, 8:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X