உயரம் குறைவானவர்கள் எளிதாக ஓட்டுவதற்கான டாப் - 5 ஸ்கூட்டர்கள்!

By Saravana

இப்போது நகர்ப்புறத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற எளிய போக்குவரத்து சாதனமாக இருப்பது ஸ்கூட்டர்கள்தான். அதிலும், குள்ளமாக இருப்பவர்கள் பைக்கில் காலை தூக்கி போட்டு அமர வேண்டியிருப்பதால், பேலன்ஸ் தவறும். ஓட்டும்போதும், நிறுத்தும்போதும் பிரச்னையை சந்திக்கின்றனர்.

அதுபோன்றவர்களுக்கு, தாழ்வான இருக்கை உயரம் மற்றும் எளிதாக அமரக்கூடிய வசதி கொண்ட ஸ்கூட்டர் ஓர் சிறந்த இருசக்கர வாகனமாக இருக்கும். அதிலும், சில ஸ்கூட்டர்கள் குள்ளமாக இருப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். 5.2 இன்ச் வரை உயரம் கொண்டவர்களுக்கான 5 சிறந்த ஸ்கூட்டர் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 05. மஹிந்திரா கஸ்ட்டோ

05. மஹிந்திரா கஸ்ட்டோ

இருக்கையை இருவிதமான உயரங்களில் மாற்றிக் கொள்ளும் வசதி கொண்ட இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் மாடல். இந்த ஸ்கூட்டர் வெறும் 735மிமீ மட்டுமே தரையிலிருந்து இருக்கையின் உயரம் அமைந்திருக்கிறது. எனவே, குள்ளமானமாவர்களுக்கு ஏற்ற சாய்ஸ். அத்துடன், இதன் டிசைன் இருபாலருக்கும் பொருத்தமாக இருக்கும். இந்த ஸ்கூட்டரில் இருக்கும் எஞ்சின் 8 பிஎஸ் பவரை அளிக்கிறது. லிட்டருக்கு 60 கிமீ மைலேஜை வழங்குகிறது. ரூ.58,000 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

04. யமஹா ரே

04. யமஹா ரே

அடுத்ததாக பட்டியலில் யமஹா ரே ஸ்கூட்டர் இடம்பெற்றிருக்கிறது. தரையிலிருந்து 760மிமீ உயரத்தில் இருக்கை அமைப்பு கொண்டது. மேலும், 104 கிலோ மட்டுமே எடை கொண்டிருப்பதால், பெண்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 113சிசி எஞ்சின் அதிகபட்சமாக 7.1 பிஎஸ் பவரையும், 8.1 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.55,000 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

03. ஹோண்டா டியோ

03. ஹோண்டா டியோ

இந்த பட்டியலில் அடுத்ததாக இளைஞர்களையும், யுவதிகளுக்கும் பிரியமான ஹோண்டா டியோ இடம்பெறுகிறது. தரையிலிருந்து 765மிமீ உயரத்தில் அமையப் பெற்ற இருக்கையால், அதிக சவுகரியத்தையும், ஓட்டுவதற்கு பாதுகாப்பான உணர்வையும் வழங்குகிறது. இது 105 கிலோ எடை கொண்டதால் எளிதாக கையாள முடியும். இந்த ஸ்கூட்டரில் இருக்கும் ஹோண்டாவின் நம்பகத்தன்மை வாய்ந்த 110சிசி எஞ்சின் அதிக செயல்திறனையும், சிறப்பான மைலேஜையும் வழங்கும். அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் அளிக்கிறது. லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.55,000 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

02. ஹோண்டா ஆக்டிவா ஐ

02. ஹோண்டா ஆக்டிவா ஐ

ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கிவிடலாம் என்பதற்கு அதன் மென்மையான ஓட்டுதல் சுகத்தை தரும் எஞ்சின் முக்கிய காரணம். அத்துடன் 103 கிலோ எடை கொண்டிருப்பதால் ஓட்டும்போது இலகுவான உணர்வை தரும். இருபாலருக்கும் பொருத்தமான டிசைன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் தரையிலிருந்து 765மிமீ இருக்கை உயரத்துடன் இருப்பதும் எளிதாக ஓட்டுவதற்கும், பேலன்ஸ் செய்வதற்கு பாதுகாப்பான உணர்வை தரும். லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.55,000 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

01. டிவிஎஸ் வீகோ

01. டிவிஎஸ் வீகோ

இலகு எடை ஸ்கூட்டர்களுக்கு பெயர் பெற்ற டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. இந்த ஸ்கூட்டர் 770மிமீ உயரத்திலான இருக்கை அமைப்பு கொண்டது. சிறந்த கையாளுமை கொண்ட ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரை அளிக்கும். லிட்டருக்கு 51 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.63,000 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #டாப் 5 #top 5
English summary
Here are a few scooters if you are between 4'10" and 5'2". This is a list of best scooters for short riders in India, which will be great for commuting, long or short:
Story first published: Thursday, September 24, 2015, 11:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X