சுஸுகி ஆக்செஸ் Vs மஹிந்திரா டியூரோ Vs புதிய ஹோண்டா ஆக்டிவா 125சிசி: ஒப்பீடு

By Saravana

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டை தன் கைவசம் வைத்திருக்கும் ஹோண்டா நிறுவனம் முதல்முதலாக இந்திய மார்க்கெட்டில் புதிய 125சிசி ஸ்கூட்டரை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஆக்டிவா பிராண்டுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பை கருத்தில் கொண்டு புதிய 125சிசி ஸ்கூட்டரையும் அதே பெயரில் வெளியிட்டிருக்கிறது.

இதனால், புதிய 125சிசி ஆக்டிவா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், 125சிசி மார்க்கெட்டில் நீண்ட காலமாக இருந்து வரும் சுஸுகி ஆக்செஸ் மற்றும் மஹிந்திரா டியூரோ டிஇசட் ஆகிய ஸ்கூட்டர் மாடல்களுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை ஒப்பிட்டு இந்த செய்தியை வழங்குகிறோம். இது வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் என்று கருதுகிறோம்.


ஒப்பீடு

ஒப்பீடு

பொதுவாகவே வாடிக்கையாளர்கள் மனதில் எழும் முதல் கேள்விகளான மைலேஜ், விலை, வசதிகளின் அடிப்படையில் 3 ஸ்கூட்டர்களையும் ஒப்பிட்டுள்ளோம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் ஒப்பீட்டுத் தகவல்களை பார்க்கலாம்.

முன்னோட்டம் - ஆக்டிவா 125

முன்னோட்டம் - ஆக்டிவா 125

110சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆக்டிவாவின் மார்க்கெட் வளையத்தை அதிகரிக்கும் விதமாக தற்போது 125சிசி மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், ஆக்டிவா 110சிசி மாடலைவிட புதிய ஆக்டிவா 125சிசி மாடலின் தோற்றத்தில் சில மாறுதல்களை செய்து வித்தியாசப்படுத்தியிருக்கிறது ஹோண்டா.

சுஸுகி ஆக்செஸ்

சுஸுகி ஆக்செஸ்

ஆக்டிவாவுக்கு அடுத்து இந்திய வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் ஸ்கூட்டர் மாடல். சுஸுகியின் விற்பனையிலும் பக்கபலமாக இருந்து வருகிறது. சக்திவாய்ந்த எஞ்சின், வலுவான கட்டுமானம் ஆகியவை இதன் ப்ளஸ் பாயிண்ட்டுகள்.

 மஹிந்திரா டியூரோ

மஹிந்திரா டியூரோ

டியூரோ ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் டியூரோ டிஇசட். மஹிந்திராவின் முக்கிய ஸ்கூட்டர் மாடலாக விளங்குகிறது. இதன் முகப்பு சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் டிசைனை நினைவூட்டுவதாக இருக்கிறது.

ஸ்டைல்- ஆக்டிவா 125

ஸ்டைல்- ஆக்டிவா 125

மெட்டல் பாடியுடன் மிகச்சிறந்த கட்டுமானம் கொண்டதாக வந்துள்ளது புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர். ஹோண்டாவின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த புதிய மாடலும் ஸ்டைலில் போட்டியாளர்களை எளிதாக தோற்கடிக்கிறது.

ஆக்செஸ் 125

ஆக்செஸ் 125

எளிமையான தோற்றம் கொண்ட இந்த ஸ்கூட்டர் அனைவரையும் சட்டென கவர்ந்து விடும் என்று கூற முடியாது. இந்த ஸ்கூட்டருக்கு தனித்துவத்தை கொடுக்கும் அம்சங்களில் பெரிய சைலென்சரும் அடக்கம். மற்றபடி, ஒரு சக்திவாய்ந்த 125சிசி ஸ்கூட்டர் வேண்டும் என்பவர்களின் பட்டியலில் சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டரும் முக்கிய இடம் பிடிக்கிறது.

ஸ்டைல்- டியூரோ

ஸ்டைல்- டியூரோ

ஆக்டிவா மற்றும் ஆக்செஸ் மாடல்களை ஒப்பிடும்போது டிசைனில் அவ்வளவு சிறப்பாக இல்லை மஹிந்திரா டியூரோ. எனவே, ஸ்டைல் என்ற விஷயத்தில் பின்தங்கிவிடுகிறது மஹிந்திரா டியூரோ டிஇசட்.

சொகுசு - ஆக்டிவா 125

சொகுசு - ஆக்டிவா 125

அகலமாகவும், தட்டையாகவும் அமைந்திருக்கும் ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் இருக்கை அமர்ந்து செல்வதற்கு தாரளமாக இருப்பதுடன், சொகுசாகவும் இருக்கிறது. பின்புறத்தில் அமர்பவர்கள் பிடித்துக் கொள்வதற்கு வசதியாக பெரிய கிராப் ரெயில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஃப்ளோர்போர்டு அகலமாக இருப்பதால் கால்களை வசதியாக வைத்து ஓட்ட முடியும்.

சொகுசு - ஆக்செஸ்

சொகுசு - ஆக்செஸ்

ஆக்டிவா போன்றே சிறப்பான இருக்கை அமைப்பை கொண்டுள்ளது ஆக்செஸ். குறிப்பாக, ஓட்டுபவருக்கு சிறப்பான இருக்கை அமைப்பை கொண்டிருக்கிறது. ஃப்ளோர்போர்டு ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருக்கும் அளவுக்கு பெரியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சொகுசு- டியூரோ

சொகுசு- டியூரோ

மற்ற இரு ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது டியூரோவின் இருக்கை அமைப்பு அவ்வளவு சொகுசாக இல்லை. மேலும், ப்ளோர்போர்டு அதிக உயரத்துடன் இருப்பதால், உயரமானவர்கள் அமர்ந்து ஓட்டும்போது சவுகரியமாக இல்லை.

எஞ்சின் - ஆக்டிவா 125

எஞ்சின் - ஆக்டிவா 125

புதிய ஹோண்டா ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டரில் 124.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினுடன் வி மேட்டிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும். ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் எஞ்சின் 8.6 பிஎச்பி ஆற்றலையும், 10.12 என்எம் டார்க்கையும் அளிக்கும். இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 59 கிமீ மைலேஜ் தரும் என்கிறது ஹோண்டா. அதே, ஆக்டிவா 110சிசி ஸ்கூட்டர் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்- ஆக்செஸ்

எஞ்சின்- ஆக்செஸ்

124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டரில் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றுகிறது. இந்த ஸ்கூட்டர் 8.58 எச்பி பவரையும், 9.8 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. ஓட்டுதல் நிலையை பொறுத்து லிட்டருக்கு சராசரியாக 40 கிமீ முதல் 50 கிமீ வரை மைலேஜ் தரும்.

எஞ்சின் - டியூரோ

எஞ்சின் - டியூரோ

இந்த ஸ்கூட்டரில் 124.6சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த ஸ்கூட்டர் 8 எச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் அளிக்கிறது.அராய் சான்றுபடி, லிட்டருக்கு 56.25 கிமீ மைலேஜ் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் சராசரியாக ஓட்டுதல் நிலையை பொறுத்து 40 கிமீ முதல் 45 கிமீ வரை மைலேஜ் தரும்.

சஸ்பென்ஷன்- ஆக்டிவா 125

சஸ்பென்ஷன்- ஆக்டிவா 125

ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். 5 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் ஆப்ஷனலாக டிஸ்க் பிரேக்கும் கிடைக்கிறது. பின்புறத்தில் 10 இஞ்ச் சக்கரத்தில் 130 மிமீ விட்டம் கொண்ட டிரம் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏனைய ஹோண்டா இருசக்கர வாகனங்கள் போன்றே இந்த புதிய ஸ்கூட்டரிலும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

சஸ்பென்ஷன் - ஆக்செஸ்

சஸ்பென்ஷன் - ஆக்செஸ்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் 10 இஞ்ச் சக்கரங்கள் உள்ளன. டிஸ்க் பிரேக் கிடையாது. இருபுறத்திலும் டிரம் பிரேக்குகள்தான் உள்ளன.

சஸ்பென்ஷன் - டியூரோ

சஸ்பென்ஷன் - டியூரோ

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஸ்விங் ஆர்ம் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளன. இருபுறத்திலும் 10 இஞ்ச் சக்கரங்களும், 130மிமீ டிரம் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதர அம்சங்கள் - ஆக்டிவா 125

இதர அம்சங்கள் - ஆக்டிவா 125

பெரிய அனலாக் ஸ்பீடோமீட்டரும், சிறிய டிஜிட்டல் மீட்டரும் அடங்கியதாக நவீனத்துவமாக காட்சி தருகிறது. டிஜிட்டல் மீட்டரில் எரிபொருள் இன்டிகேட்டர், ஓடோமீட்டர் மற்றும் டிரிப் மீட்டர் ஆகியவை உள்ளன. சுவிட்சுகள் தரமுடையதாக இருக்கின்றன. இருக்கையின் கீழே போதுமான அளவு பொருட்களை வைப்பதற்கான இடவசதி உள்ளது. முன்புறத்தில் ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் கூடுதல் ஆக்சஸெரீயாக பெற்றுக் கொள்ளலாம். முன்புறத்தில் பை மாட்டுவதற்கான கொக்கி ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதர அம்சங்கள் - ஆக்செஸ்

இதர அம்சங்கள் - ஆக்செஸ்

6 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது. சாவி துவாரம் ஒரு சிறிய திறந்து மூடும் வசதி கொண்ட மூடி கொடுக்கப்பட்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொண்டது. இருக்கைக்கு கீழே 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி உள்ளது. ஆக்டிவாவை விட இது கூடுதல் இடவசதி கொண்டதாக இருக்கிறது. முன்புறத்தில் ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் வேண்டுமெனில் வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.

இதர அம்சங்கள் - டியூரோ

இதர அம்சங்கள் - டியூரோ

அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்ட்டுள்ளது. இருக்கைக்கு கீழே 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி உள்ளது. மேலும், முன்புறத்தில் கிளவ் பாக்ஸ் நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பெற்றுள்ளது. மற்ற இரு ஸ்கூட்டர் மாடல்களிலும் தனியாக வாங்கித்தான் பொருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. பின்புற பிரேக்கின் லிவரை பூட்டிக் கொள்ளும் வசதி உண்டு.

ஒரு விரைவு ஒப்பீடு

ஒரு விரைவு ஒப்பீடு

எஞ்சின், விலை உள்ளிட்ட முக்கிய தகவல்களை எளிதாக ஒப்பிட்டு பார்க்கலாம்.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகளின் அடிப்படையிலான ஒப்பீட்டை ஸ்லைடில் காணலாம்.

எது பெஸ்ட் சாய்ஸ்?

எது பெஸ்ட் சாய்ஸ்?

125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புதிதாக நுழைந்திருக்கும் ஹோண்டா ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டர் நிச்சயம் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும். பிராண்டு மதிப்பு, சிறந்த தொழில்நுட்பம், ஸ்டைல், தரம் என அனைத்திலும் போட்டியாளர்களைவிட ஒருபடி மேலே நிற்கிறது புதிய ஹோண்டா ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டர். ஆனால், அதற்கு தகுந்தாற்போல் விலையிலும் பல ஆயிரம் முன்னே நிற்கிறது புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர். எனவே, ரொம்பவே இக்கட்டான பட்ஜெட்டுடன் ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்கள் விலையையும் பார்த்துக் கொள்வது அவசியம்.

Most Read Articles
English summary
The natural question that now arises is how the new Activa compares to the two other 125cc scooters from Suzuki and Mahindra? The following is a brief comparison of price, mileage, feature and specification between the three.
Story first published: Monday, May 5, 2014, 13:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X