ஹோண்டா ட்ரீம் நியோ பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

அடுத்து ஒரு புதிய 110சிசி பைக்கை திடீரென களமிறக்கி இருசக்கர வாகன மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஹோண்டா நிறுவனம். சிறந்த எஞ்சின், அதிக மைலேஜ் உள்ளிட்ட அம்சங்களுடன் வரும் ஹோண்டா பைக்குகளுக்கு தற்போது நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்ற பாரபட்சம் இல்லாமல் சிறப்பான வரவேற்பு இருக்கிறது.

இதனை சரியாக பயன்படுத்திக் தனது மார்க்கெட் பங்களிப்பை அதிகரித்துக் கொள்ளும் விதமாக தற்போது குறைந்த விலை கொண்ட 110சிசி பைக்காக ட்ரீம் நியோவை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹோண்டா. மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ட்ரீம் நியோ பைக்கின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ட்ரீம் யுகா அடிப்படையிலேயே இந்த புதிய பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைமன்ட் வடிவ ஹெட்லைட், ஏரோடைனமிக் முன்பக்க கவுல் ஆகியவை கூடுதல் கவர்ச்சி.

கிராபிக்ஸ் ஸ்டிக்கர்

கிராபிக்ஸ் ஸ்டிக்கர்

கிராபிக்ஸ் டிசைனர் ஸ்டிக்கர்கள் ட்ரீம் நியோவின் தோற்றத்துக்கு அதிக கவர்ச்சி தருவதாக இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த புதிய பைக் 74 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டாவின் ஈக்கோ தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் வந்திருப்பதால் இந்த மைலேஜ் நிச்சயம் சாத்தியம் என உறுதியளிக்கப்படுகிறது.

அலாய் வீல்

அலாய் வீல்

ஸ்போக்ஸ் மற்றும் அலாய் வீல் மாடல்களில் வந்திருக்கிறது. 6 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கிறது.

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

ஷைன், ட்ரீம் யுகா போன்றே இந்த பைக்கும் சிறப்பான இருக்கை அமைப்பை கொண்டிருக்கிறது. 2 பேர் வசதியாக அமர்ந்து செல்லலாம்.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

வெள்ளை வட்டமிட்ட ஆர்பிஎம் மற்றும் ஸ்பீடோமீட்டர்கள் பார்த்தப்பதற்கு கவர்ச்சியாகவும், தெளிவாக படிக்கும் வகையிலும் இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ட்ரீம் யுகா, சிபி ட்விஸ்ட்டர் பைக்குகளில் இருக்கும் அதே 110சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. ட்ரீம் நியோவின் எஞ்சின் 8.25 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும்.

பேட்டரி

பேட்டரி

பராமரிப்பு தேவையில்லாத பேட்டரி அனைத்து வேரியண்ட்களிலும் பொதுவானதாக இருக்கிறது.

ட்யூப்லெஸ் டயர்

ட்யூப்லெஸ் டயர்

அனைத்து ஹோண்டா தயாரிப்புகள் போன்றே இந்த பைக்கிலும், ட்யூப்லெஸ் டயரை ஆப்ஷனலாக பெற முடியும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

கருப்பு வண்ணத்தில் சிவப்பு கிராபிக்ஸ் ஸ்டிக்கர், கருப்பு வண்ணத்தில் ஊதா கிராபிக்ஸ் ஸ்டிக்கர் கொண்ட இரட்டை வண்ணங்கள் மற்றும் ஃபோர்ஸ் சில்வர் மெட்டாலிக், மான்சூன் கிரே மெட்டாலிக், மிட்நைட் புளூ மெட்டாலிக், ஆல்ஃபா ரெட் மெட்டாலிக் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்றவாறு போதிய கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது. ட்ரீம் நியோ 179மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

டிஸ்க் பிரேக் இல்லை

டிஸ்க் பிரேக் இல்லை

இந்த பைக்கில் டிஸ்க் மாடல் கிடையாது. ஆனால், எலக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் உண்டு.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

கிக் ஸ்டார்ட், டிரம் பிரேக், ஸ்போக்ஸ் வீல் - ரூ.43,150

கிக் ஸ்டார்ட், டிரம் பிரேக், அலாய் வீல் - ரூ.44,150

எலக்ட்ரிக் ஸ்டார்ட், டிரம் பிரேக், அலாய் வீல் - ரூ.47,240

Most Read Articles
English summary
Japanese two wheeler maker Honda has launched another 110cc bike in Indian market. Honda's new Dream Neo will caters to the needs of the Indian mass model riders.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X