புதிய ஹயோசங் அக்குய்லா 250சிசி க்ரூஸர் பைக்கின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

கடந்த ஆண்டு ஹயோசங் பிராண்டில் வெளியிடப்பட்ட அக்குய்லா புரோ க்ரூஸர் பைக் விற்பனையில் போட்டியாளர்களை பொறாமை பட வைத்தது. ஸ்டைல், எஞ்சின் என சிறப்பாக இருந்ததால் இளம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால், முன்பதிலும் அசத்தியது.

இந்த வெற்றியை தக்க வைக்கும் விதமாகவும், விற்பனையை அதிகரித்துக் கொள்ளும் விதமாகவும் கடந்த இரு மாதங்களுக்கு முன் அக்குய்லா வரிசையில் ஜிவி250 என்ற புதிய 250சிசி க்ரூஸர் பைக்கை டிஎஸ்கே - ஹயோசங் கூட்டணி களமிறக்கியது. அக்குய்லா புரோ 650 பைக் போன்றே இந்த புதிய க்ரூஸர் பைக்கும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், அக்குய்லா ஜிவி250 பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் டீமுக்கு சமீபத்தில் கிட்டியது. புனேயில் வைத்து 200 கிலோமீட்டர் தூரம் ஓட்டி சோதிக்கப்பட்ட இந்த புதிய 250சிசி பிரிமியம் க்ரூஸர் பைக்கில் இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் குறைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ரெட்ரோ ஸ்டைல்

ரெட்ரோ ஸ்டைல்

அக்குய்லா 250 பைக் ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் கைனெக்டிக் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது. அப்போது விற்பனையில் சோபிக்கவில்லை. இருப்பினும், பல மாற்றங்களுடன் தற்போது புதிய அக்குய்லா 250சிசி பைக் இந்திய மார்க்கெட்டிற்கு மீண்டும் வந்துள்ளது. டிசைனில் பழைய மாடலின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும், இது முற்றிலும் புதிய மாடல் என்று டிஎஸ்கே - ஹயோசங் கூட்டணி தெரிவிக்கிறது. டூ இன் ஒன் எக்சாஸ்ட் டிசைன் பழைய பைக்கில் இருப்பது போன்றே இந்த புதிய மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, பல மாற்றங்களை பட்டியலிடுகிறது தயாரிப்பு நிறுவனம்.

குரோம் அரிதாரம்

குரோம் அரிதாரம்

க்ரூஸர் பைக்குகள் பிரபலமான காலத்தில் இருந்த அதே டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உடல் முழுக்க குரோமியத்தை மெழுகி எடுத்து கவர்ச்சியை கூட்டியுள்ளனர். மேலும், க்ரூஸர் விரும்பிகளுக்கு பிடித்த பாரம்பரிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் சாலையில் செல்லும்போது மிக கம்பீரமாகவும், தனித்துவம் மிக்கதாகவும் தெரிகிறது.

கவர்ச்சி

கவர்ச்சி

வட்ட வடிவ ஹெட்லைட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எஞ்சின், சைலென்சர் என எங்கு பார்த்தாலும் குரோமிய பூச்சால் மிளிர்கிறது. அலாய் வீல்களும் பைக்கிற்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய ஹயோசங் அக்குய்லா ஜிவி250 பைக்கில் வி ட்வின் ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 26.21 பிஎச்பி பவரையும், 21.37 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும். ஓட்டும்போது இதன் எஞ்சின் மிக மென்மையாகவும், அதிக செயல்திறனை காட்டும் வகையில் சிறப்பாக இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

இது சிறப்பான எரிபொருள் சிக்கனம் கொண்ட க்ரூஸர் பைக்காக கூறலாம். இது நெடுஞ்சாலையில் மட்டுமே. ஆம், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் கொடுத்தது. ஆனால், நகர்ப்புறத்தில் வைத்து ஓட்டும்போது இந்த மைலேஜ் வெகுவாக குறைகிறது. சராசரியாக லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் கொடுத்தது.

 கையாளுமை, சொகுசு

கையாளுமை, சொகுசு

நீண்ட தூர பயணங்களை இனிதாக்கும் வகையிலான அம்சங்கள் இந்த க்ரூஸர் ரக பைக்கில் ஏராளம். செயல்திறன், கையாளுமை மற்றும் சொகுசான சவாரி. இது மூன்றையும் சரிசமமான விதத்தில் அளிக்கிறது. இருக்கை அமர்ந்து ஓட்டுவதற்கு சொகுசாக உள்ளது. அதேவேளை, கியர் லிவர், பிரேக் பெடல் ஆகியவை இயக்குவதற்கு வசதியாக இல்லை. இது உயரம் குறைவானவர்களுக்கு சற்று அசகவுரியத்தை தரலாம். எனவே, சிறிது நாள் ஓட்டிய பிறகே பிரேக் பெடல் மற்றும் கியர் லிவர்களை லாவகமாக இயக்கும் பக்குவம் மனதிற்கு கிடைக்கும்.

 ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

167 கிலோ எடை கொண்ட இந்த பைக்கை வளைவுகளில் திரும்பும்போது மிக எளிதாக இருக்கிறது. அதேவேளை, இதன் பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு கொஞ்சம் கடினமாக இருக்கிறது. இதனால், பள்ளம், மேடுகளில் செல்லும்போது இருக்கை சொகுசாக இருந்தாலும், அதிக அதிர்வுகளை உணர முடிகிறது.

 பிரேக் செயல்திறன்

பிரேக் செயல்திறன்

முன்புற டிஸ்க் பிரேக் இரண்டு காலிபர்கள் துணையுடன் இயங்குகிறது. பிரேக் செயல்திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. முன்புறத்தைவிட பின்புற பிரேக்கின் செயல்திறன் இன்னும் ஏமாற்றத்தை கொடுக்கிறது. மேலும், பிரேக் பெடல் இருப்பிடம் ஃபுட்ரெஸ்ட்டைவிட மிக உயரமாக இருப்பதால் சவுகரியமாக இல்லை.

 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் ஆர்பிஎம் மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரும் பிரிமியம் பைக்குகள் டிஜிட்டல் மீட்டர்களுக்கு மாறிவிட்ட நிலையில், பாரம்பரிய டிசைன் தாத்பரியத்தை கொடுக்கும் வகையில் அது கொடுக்கப்பட்டிருக்கிறது. கருப்பு நிற பின்னணியில் வெள்ளை, சிவப்பு நிறத்தில் எண்களும், முட்கள் சிவப்பு நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ட்ரிப் மீட்டர், எரிபொருள் இருப்பு தகவல், கடிகாரம் ஆகியவை வட்ட வடிவ டிஜிட்டல் திரையில் மோடுகளை மாற்றி தெரிந்துகொள்ளலாம். மேலும், டிஜிட்டல் மீட்டரில் மோடுகளை மாற்றுவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தான்கள் இயக்குவதற்கு எளிதாக இல்லை.

ஸ்விட்ச் கியர்

ஸ்விட்ச் கியர்

இந்த புதிய பைக்கில் பிளாஸ்டிக் தரம் சிறப்பானதாக இருக்கிறது. சுவிட்சுகளும் தரமானதாக உள்ளன. இதில், கார்கள் போன்றே பின்னால் வரும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் ஹசார்டு லைட் வசதி உள்ளது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

இந்த புதிய ஹயோசங் அக்குய்லா 250 க்ரூஸர் பைக் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. கருப்பு- சாம்பல் கலந்த இரட்டை வண்ண கலவையிலும், கருப்பு- சிவப்பு- பழுப்பு கலந்த வண்ணக் கலவையிலும், வெள்ளை, சிவப்பு- பழுப்பு கலந்த வண்ணக் கலவையிலும் கிடைக்கிறது.

 சாதகங்கள்

சாதகங்கள்

கம்பீரமான தோற்றம்

ஃபிட் அண்ட் ஃபினிஷ்

பவர் மற்றும் செயல்திறன்

சொகுசு

பாதகங்கள்

பாதகங்கள்

100 கிமீ வேகத்தை தாண்டினால் அதிர்வுகள் அதிகம் தெரிகிறது.

கடினமான பின்புற சஸ்பென்ஷன்

பிரேக் பெடல் இயக்குவதற்கு சவுகரியமாக இல்லை

Most Read Articles
English summary
When you hear the name Aquila, it may rekindle an old memory of Kinetic launching a series of bikes from Korean motorcycle manufacturer Hyosung. If you remember, the Kinetic Aquila featured a 250cc, V-twin engine though it did not sell large numbers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X