Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஹயோசங் அக்குய்லா புரோ குரூஸர் பைக் : சிறப்பு பார்வை

Posted by:
Updated: Friday, January 18, 2013, 11:42 [IST]

இந்திய பைக் மார்க்கெட்டில் ராயல் என்பீல்டை விட்டால் அடுத்து ஹார்லி டேவிட்சன் பைக்குகள்தான் சாய்ஸ். ராயல் என்பீல்டுடன் ஹார்லியை ஒப்பிடும்போது விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே, ஹார்லியை விட குறைவான விலையில் புதிய குரூஸர் பைக்கை ஹயோசங் அறிமுகம் செய்துள்ளது. ஹார்லி மட்டுமல்ல தனது எஸ்டி7 குரூஸர் பைக்கை விடவும் குறைவான விலையில் அக்குய்லா புரோ என்ற இந்த பைக்கை ஹயோசங் விற்பனைக்கு விட்டுள்ளது.

ரூ.4.99 லட்சம் விலையில் வந்திருக்கும் புதிய அக்குய்லா புரோ பிரிமியம் குரூஸர் பைக் இந்திய வாடிக்கையாளர்களின் மனதை வெகுவாக கவரும் வகையில் வந்துள்ளது. சிறந்த டிசைன், பவர்ஃபுல் எஞ்சினுடன் வந்திருக்கும் புதிய அக்குய்லா புரொ பைக்குடன், 2013 மாடல் ஜிடி 650ஆர் பைக்கையும் ஹயோசங் அறிமுகம் செய்துள்ளது. அக்குய்லா புரோ பைக்கின் சிறப்பம்சங்களை காணலாம்.

டிசைன்

குரூஸர் பைக் விரும்புவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை அப்படியே பூர்த்தி செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், பைக்கின் அனைத்து பகுதிகளிலும் குரோம் பூச்சுடன் மிளிர்கிறது. குரோம் பினிஷிங் செய்யப்பட்ட கச்சிதமான ஹெட்லைட், எதிர்பார்ப்பதை விட வெளியில் நீண்டிருக்கும் மிக அகலமான ஹேண்டில்பார், இரட்டை குழல்கள் ஒன்றாகிய குரோம் பினிஷிங் கொண்ட புகைபோக்கி குழாய், குரூஸர் பைக் என மார்தட்டும் பெட்ரோல் டேங்க் டிசைன் என சிறப்புகள் ஏராளம். 21 எல்இடி விளக்குகளுடன் கூடிய டெயில் லைட் கூடுதல் அழகு சேர்க்கிறது.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்


குரோம் வளையத்துக்குள் மேலே ஸ்பீடோமீட்டரும், கீழே ஓடோமீட்டர், டிரிப் மீட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, இண்டிகேட்டர் விளக்குகளும் இருக்கின்றன. லைட்டுகளுக்கான சுவிட்சுகள் எளிதாக கையாளும் வகையிலும் இருப்பதோடு பிளாஸ்டிக்குகளின் தரமும் நன்றாகவே இருக்கிறது.

எஞ்சின்

இந்த பைக்கில் 74 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 647சிசி வாட்டர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 62 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 5 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

இந்த பைக் வெறும் 6 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் வாய்ந்தது. மணிக்கு அதிகபட்சமாக 195 கிமீ வேகம் வரை செல்லும். மேலும், இந்த பைக்கின் முதல் கியரில் வைத்தே 87 கிமீ வேகம் வரை எட்ட முடியும்.

டிஸ்க் பிரேக்

முன்புறத்தில் டபுள் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் ஹைட்ராலிங் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளதால் அதிக பாதுகாப்பை வழங்கும்.

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பினஅபுறத்தில் ஹைட்ராலிக் டபுள் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது. நம்மூர் சாலைகளுக்கு இந்த சஸ்பென்ஷன் சிறப்பானதாக இருக்கும். நீண்ட தூர பயணங்களின்போது இந்த சஸ்பென்ஷன் சிறந்த பயண அனுபவத்தை தரும்.

 

 

பெட்ரோல் டேங்க்

இந்த பைக்கில் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. 240 கிலோ எடை கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் என்கிறது ஹயோசங்.

Story first published:  Friday, January 18, 2013, 11:34 [IST]
English summary
When one talks about cruiser motorcycles, there are two brands which come to the mind immediately. One is Royal Enfield, which makes single-cylinder cruiser bikes, while the other is Harley-Davidson, which dominates the high-end cruiser segment. But what if you want something in between? There is an alternative, thanks to DSK-Hyosung who have now got the GV650 Aquila Pro in the Indian market.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil