பழைய தோற்றம், புதிய தொழில்நுட்பத்தில் ஃபியூஷன் ஸ்டைலில் இந்தியன் சீஃப் விண்டேஜ்

பலரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக்கின் ரிவ்யூவை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

By Azhagar

மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் பாரம்பரியமிக்க ஒன்றாக உள்ளது இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

1922ம் ஆண்டில் இந்நிறுவனம் தயாரித்த இந்தியன் சீஃப் மோட்டார் சைக்கிள் 1953ம் ஆண்டு வரை பெரிய வாடிக்கையாளர்கள் வட்டத்தை கொண்டு இருந்தது.

2011ம் ஆண்டில் போலாரீஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் இந்தியன் மோட்டார் சைக்கிள் கம்பெனியை வாங்கியது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

அதுமுதல் போலாரீஸ் இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பைக்குகளை ரொட்ரோ-ஸ்டல்களை கொண்டு தயாரிக்க தொடங்கியது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

அதில் ஒன்று தான் இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக். பார்க்க ஒரு பழையை மாடல் போன்ற தோன்றினாலும், வாகன தயாரிப்பில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள பொருட்களுடன் இந்தியன் சீஃப் தயாரிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

அசாட்டலான தோற்றத்திலுள்ள சீஃப் விண்டேஜ் பைக்கை பயன்படுத்த எங்களுக்கு ஓரீரு தினங்கள் வாய்ப்பு கிடைத்தது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

அதில் பைக்குடனான எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், சீஃப் விண்டேஜ் மோட்டார் சைக்கிளில் உள்ள செயல்திறன் மற்றும் கட்டமைப்புகளை வாசகர்கள் உங்களுக்கு நாங்கள் இங்கே அளிக்கவுள்ளோம்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

பழையமுறையிலான வடிவமைப்புடனும், புதிய தொழில்நுட்பத்துடனும் இந்தியன் சீஃப் மோட்டார் சைக்கிள் விண்டேஜ் மாடலுக்கான சரியான தேர்வாகவுள்ளது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

இதுவே இந்த பைக்கிற்கு சந்தையில் ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தி தருகிறது. பைக்கை பற்றிய மேலும் பல முக்கிய தகவல்களை இனி பார்க்கலாம்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக்கின் தோற்றம் எந்த கோணங்களிலிருந்து பார்த்தாலும், '...வாவ்...' சொல்ல வைக்கிறது.

இதனுடைய கிளாசிக்கான தோற்றம் மற்றும் ஸ்டைலான மேக்கிங் நம்மை 1940ம் ஆண்டு காலகட்டத்தை நினைவுக்கூற வைக்கிறது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

வளைந்து நெளிந்து இருக்கும், பைக்கின் முன்பகுதியே ஈர்க்கிறது. அதிலும் இந்தியன் நிறுவனத்தின் இளச்சினையை (LOGO) முன்பகுதியில் பொருத்திருப்பது, ஒரு ராயல் ஃபீலிங்கை தருகிறது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

ரெட்ரோ தோற்றத்திற்கு க்ரோம் ஒரு சரியான தேர்வு தான். பைக்கின் நிறமான பச்சைக்கு ஈடுசெய்யும் அளவில் க்ரோம் நிறம் திருத்தமாக இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

பைக்கின் கைப்பிடி, முகப்பு விளக்கு, எழுத்துகள் என அனைத்திலும் கிரோம் வியாபித்திருக்கிறது. இதை பார்த்தாலே சீஃப் பைக் ஒரு விண்டேஜ் மாடல் என்று தெரியதாவர்களுக்கு கூட புரிந்துவிடும்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

தண்டர் பிளேக், ரெட் ஐவர் க்ரீம் நிறம், ஐவர் க்ரீமுடன் சேர்ந்த நீலம் மற்றும் ஐவரி க்ரீமுட்ன சேர்ந்த வில்லோ க்ரீன் (படங்களில் உள்ள மாடல்) என நான்கு நிறங்களில் இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் தயாரிக்கப்படுகிறது,

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

கவனமீர்க்ககூடிய ஒரு விண்டேஜ் மாடலில் வந்திருப்பதால், இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், பைக்கின் அனைத்து பகுதிகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது.

முத்திரையின் பதிவு பைக்கை ஓட்டுநர் பார்க்கவே தேவையில்லாத இடத்திலும் பதிக்கப்பட்டுள்ளது. இதை ஏன் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டது என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

விண்டேஜிற்கான கம்பீரமான தோற்றத்தை அளிப்பதற்காக மட்டும் இந்தியன் சீஃப் பைக்கில் வின்ஷீல்ட் பொருத்தப்படவில்லை. இதிலுள்ள விண்ட்ஷீடால் பல அதாயங்கள் உள்ளது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

பைக்கின் மொத்த உள்கட்டமைப்புகளையும் ஓட்டுநர் தனது இருக்கையில் இருந்தவாறே தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் சீஃப் விண்டேஜ் பைக்கின் டிஸ்பிளேகள் உள்ளன.

எரிவாயூ டேங்க் மீது அமைக்கப்பட்டு இருக்கிற டிஸ்பிளேவில், எரிவாயு கொள்ளவு, பேட்டரி திறன், கியர் அமைப்பு, நேரம் காட்டி, ஆபத்திற்கான அறிகுறி என பல தொழில்நுட்பங்கள் இதனுடைய டிஸ்பிளேவில் இடம்பெற்றுள்ளன.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

சீஃப் விண்டேஜ் பைக்கில் காற்று அளவை குறிக்கும் ஒருங்கிணைந்த ஆர்பாக்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், உயர்ரக லெதர் கொண்டு உருவாக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் பொருட்களை வைக்ககூடிய தோல் பைகள் ஆகியவையும் கட்டமைப்பட்டுள்ளன.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

380 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், இந்த பைக்கை நாம் இயக்கியபோது லாவகமாகவே இருந்தது. முனைகள் பிரேக் இல்லாமல் திருப்ப முயன்றபோது தயாரிப்பு தரத்தை எளிதில் உணரமுடிந்தது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

மாறாக யூ-டேர்ன் எடுக்கும் போதும் பார்க்கிங் செய்யும் போதும் பைக்கின் எடையை உணரமுடிந்தது. பைக்கில் சென்றவாறே திடீரென டீ சாப்பிட சாலையில் நிறுத்துவது என்பது கொஞ்சம் அசாதாரன காரியம் தான் என்பது இதன்மூலம் நமக்கு தெரியவருகிறது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

சீஃப் விண்டேஜ் பைக்குகளின் முன்பகுதிக்கான டயர் 130மிமீ அளவு கொண்டவை. அதேபோல பின்பகுதி டயரின் அளவு 180மிமீ. டயர்களை அமெரிக்காவின் பிரபல டன்லோப் அமெரிக்கன் எலைட் வைட்-வால்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

சில விண்டேஜ் மாடல் பைக்குகளை போலில்லாமல், கிளாட்ச் இதில் இலகுவாக இயக்கினாலே போதுமானதாக உள்ளது. குறிப்பாக டிராஃபிக் ஏற்படும் போது இதுபோன்ற கிளாட்ச் அமைப்பால் பைக்கை இயக்குவதில் சுலபமாக இருக்கும்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

மேலும் இதனால் இந்த பைக்கை நாம் நகரப் பகுதிகளில் கூட சாதரணமாக ஓட்டலாம். இதன் காரணமாகவே விண்டேஜ் என்ற பெயரோடு இந்தியன் சீஃப் மாடல் வெளிவந்திருந்தாலும், தரத்திலும், தயாரிப்பிலும் இன்றைய காலகட்டத்தை கருதி உருவாக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

பின்பகுதிக்கான சஸ்பென்ஷனில் அதிகமான மிருது தன்மை இருப்பதை உணரமுடிந்தது. ஆனால் கொஞ்சம் மேடு பள்ளம் நிறைந்த சாலைகளில் இந்த சஸ்பென்ஷன் சிறிய பிரச்சனையை தரலாம்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக்கில் 300மிமீ அளவுக்கொண்ட டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் தானியங்கி பிரேக் அமைப்புகள் (ABS) உள்ளதால், பாதுகாப்பு சிறப்பானதாகவே இருக்கின்றன.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

பெல்ட் அமைப்பால் இயங்கக்கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக்கில் தண்டர் ஸ்டோர்க் 111 எஞ்சின் உள்ளது. இது 139 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

பெரிய திறன் பெற்ற எஞ்சினாக இருந்தாலும், பைக் இயக்கத்தில் இருக்கும் போது ஓட்டுநர் மற்றும் பயணியால் வண்டியில் உருவாகும் வெப்பத்தை நிச்சியமாக உணர முடியாது.

சிக்னல் அல்லது டிராஃபிக்கில் நிற்கும்போது வேண்டுமானால், இருக்கை அருகில் வாகனத்தின் வெப்பத்தை லேசாக உணர முடிகிறது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக்கில் இரண்டு புகைப்போக்கி குழாய்கள் உள்ளன. பார்க்க சாதரணமாக இருக்கும் இது, வண்டி இயக்கத்தில் இருந்தால் இதன் மூலம் எழும் சத்தம் காதை கிழிக்கும்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

குறிப்பாக நாம் ரிவெர்ஸ் எடுக்கும் போதோ அல்லது ஆளில்லா சாலையில் வேகமாக இயக்கும் போதோ இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக்கின் சப்தத்தை சிலிர்க்க சிலிர்க்க உணரலாம்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

அதிகமான அதிர்வுகள் ஏற்பாடாத வகையிலும், பாதுகாப்பான வின்ஷீல்ட் பொருத்தப்பட்டு இருப்பதாலும் யாருவேண்டுமானாலும் இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக்கை இயக்கலாம்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

சாலையில் கட்டமைப்பை உணர்ந்து வண்டியின் வேகத்தை தீர்மானிக்கும் க்ரூஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பத்தால் ரைடரின் வேலை சுலபமாகிறது.

ரைடர் பேசமால் இருக்கையில் அமர்ந்துகொண்டு, ஹேண்டில் பார் மற்றும் பிரேக் அமைப்புகளை மட்டும் மேற்பார்வை செய்தவாறு ராஜா போன்று வரலாம்.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

பைக்கின் அனைத்து இயக்க செயல்பாடுகளையும் இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக்கில் உள்ள க்ரூஸ் கண்ட்ரோலே பார்த்துக்கொள்ளும்.

இதுபோன்று மேம்படுத்தப்பட்ட பல முக்கிய செயல்பாடுகள் இதில் உள்ளதால், இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ஒரு தனித்துவமான வடிவமைப்பு தான். அதை யாராலும் மறுக்க முடியாது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

ஒரு பாரம்பரியமும், ரெட்ரோ கட்டமைப்புகளும் கொண்டு வெளிவந்திருந்தாலும், தற்போதைய காலக் கட்டத்திற்கு ஏற்றவாறான பைக்கில் உள்ள செயல்பாடுகள் உற்றுநோக்கப்பட வேண்டியது.

எக்ஸ்கிளூசிவ்: இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக் ரிவ்யூ

எக்ஸ் ஷோரூம் மதிப்பில் இந்தியன் சீஃப் விண்டேஜ் பைக்கின் விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய நெடுஞ்சாலைகளில் முடிவில்லா பயணங்களை மேற்கொள்ள விரும்புவர்களுக்கு இந்தியன் சீஃப் விண்டேஜ் மோட்டார் சைக்கிள் திருத்தமான தேர்வாக இருக்கும்.

Most Read Articles
English summary
The 2016 Indian Chief Vintage maintains its Retro looks but adds modern technology and equipment. Read more to find out!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X