சிறப்பான மைலேஜ் தரும் 8 பட்ஜெட் பைக்குகள்!

தினசரி பயன்பாட்டுக்கு அதிக மைலேஜ் தரும் பைக்குகள் சிறந்த போக்குவரத்து சாதனமாக இருக்கின்றன. குறிப்பாக, ஆரம்ப ரக மோட்டார்சைக்கிள் மாடல்களில் அதிக மைலேஜ் தரும் மாடல்கள் அதிகம் என்பதுடன் கடும் போட்டியும் நிலவுகிறது.

தற்போது மார்க்கெட்டில் இருக்கும் 100சிசி மற்றும் 110சிசி பைக் மாடல்களில் அதிக மைலேஜ் தரும் 8 சிறந்த பட்ஜெட் பைக்குகளின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

08. யமஹா க்ரக்ஸ்

08. யமஹா க்ரக்ஸ்

  • விலை: ரூ.38,650 [எக்ஸ்ஷோரூம் விலை]
  • மைலேஜ்: 63 கிமீ/லி
  • இந்த பைக்கில் பொருத்தப்பட்டிக்கும் 106சிசி ஏர்கூல்டு எஞ்சின் 7.4 பிஎச்பி பவரையும், 7.5 என்எம் டார்க்கையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கெண்டது.

    07. சுஸுகி ஹயாட்டே

    07. சுஸுகி ஹயாட்டே

    • விலை: ரூ.44,969 [எக்ஸ்ஷோரும் விலை]
    • மைலேஜ்: 69கிமீ/லி
    • இந்த பைக்கில் 113சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 8.3 பிஎச்பி பவரையும், 8.8 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக்கிலும் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் உள்ளது.

      06. ஹீரோ எச்எஃப் டான்

      06. ஹீரோ எச்எஃப் டான்

      விலை: ரூ.39,470 [எக்ஸ்ஷோரூம் விலை]

      மைலேஜ்: 72 கிமீ/லி

      சிறந்த எஞ்சின், தோற்றம், சர்வீஸ் நெட்வொர்க் என ஹீரோவிடமிருந்து கிடைக்கும் குறைவான விலை கொண்ட அதிக மைலேஜ் தரும் பைக் மாடல். இந்த பைக்கில் 97 சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.7 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க்கையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

      05. மஹிந்திரா செஞ்சூரோ

      05. மஹிந்திரா செஞ்சூரோ

      விலை: ரூ.43,000 [எக்ஸ்ஷோரூம் விலை]

      மைலேஜ்: 79.4 கிமீ/லி

      செஞ்சூரோவில் 106சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 8 பிஎச்பி பவரையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

      04. பஜாஜ் சிடி100

      04. பஜாஜ் சிடி100

      • விலை: ரூ.35,034 [எக்ஸ்ஷோரூம் விலை]
      • மைலேஜ்: 80கிமீ/லி
      • பஜாஜ் பைக்குகள் எப்போதுமே சிறந்த மைலேஜ் கொண்டவை என்ற முத்திரை பெற்றவை. அந்த வகையில், சமீபத்தில் விற்பனைக்கு வந்த பஜாஜ் சிடி100 பைக் லிட்டருக்கு 80 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கில் 99.27சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.2 பிஎஸ் பவரையும், 8 என்எம் டார்க்கையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

        03. ஹோண்டா சிடி 110 ட்ரீம்

        03. ஹோண்டா சிடி 110 ட்ரீம்

        • விலை: ரூ.46,212 [எக்ஸ்ஷோரூம் விலை]
        • மைலேஜ்: 83கிமீ/லி
        • ஹோண்டாவின் நம்பகமிக்க 110சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.25 பிஎச்பி பவரையும், 8.26என்எம் டார்க்கையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

          02. டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

          02. டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்

          • விலை: ரூ.43,,816 [எக்ஸ்ஷோரூம் விலை]
          • மைலேஜ்: 86 கிமீ/லி
          • ஊரக மார்க்கெட்டில் டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. மைலேஜ் மட்டுமின்றி, அந்த சாலைநிலைகளுக்கு ஒத்துப் போகும் அம்சங்களுடன் விலை குறைவான மாடல்களாக இருப்பதே டிவிஎஸ் ஸ்டார் ஸ்போர்ட்டுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த பைக்கில் 8.4 பிஎஸ் பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கக்கூடிய 109.7சிசி எஞ்சின் உள்ளது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

            01. பஜாஜ் பிளாட்டினா இஎஸ்

            01. பஜாஜ் பிளாட்டினா இஎஸ்

            • விலை: ரூ.44,507 [எக்ஸ்ஷோரூம் விலை]
            • மைலேஜ்: 96.9 கிமீ/லி
            • உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் மாடலாக பிரபலப்படுத்தப்படும் புதிய பஜாஜ் பிளாட்டினா இஎஸ் பைக்கில் 102சிசி எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.08 எச்பி பவரையும், 12.75 என்எம் டார்க்கையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

Most Read Articles
மேலும்... #ரிவியூ #review
English summary
Naturally, when everybody starts making goods for a particular reason, competition will increase. So here are 7 budget motorcycles in India that manufacturers offer:
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X