புதிய ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக்கின் சிறப்பு பார்வை!

By Saravana

மார்க்கெட் லீடரான ஹீரோ மோட்டோகார்ப் விற்பனையை எப்படியும் முறியடித்து விட விட வேண்டும் என்ற முனைப்பில் ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் நம்பர்- 1 அந்தஸ்தை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வந்தாலும், பைக் மார்க்கெட்டில் எதிர்பார்த்த வளர்ச்சியை ஹோண்டா பதிவு செய்யவில்லை. இந்த குறையை போக்கும் விதத்தில் புதிய பைக் மாடல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில், தனது போர்ட்போலியோவிலேயே மிக குறைவான விலை கொண்ட புதிய பைக் மாடலை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா சிடி110 ட்ரீம் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய பைக் மாடல் புதிய பைக் வாங்குபவர்களையும், கிராமப்புற வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவரும் அம்சங்களை கொண்டுள்ளது. போட்டியாளர்களை விட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய ஹோண்டா பைக் பற்றிய சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


நீளமான இருக்கை

நீளமான இருக்கை

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் நீளமான இருக்கை பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் மிக சவுகரியமான இடவசதியை அளிக்கும். நீண்ட தூர பயணங்களின்போது சோர்வு ஏற்படாதவகையில் இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவிக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டாவின் நவீன எச்இடி தொழில்நுட்பம் கொண்ட 110சிசி எஞ்சின் 7,500 ஆர்பிஎம்., எஞ்சின் சுழல் வேகத்தில் 8.25 பிஎச்பி சக்தியையும், 5,500 ஆர்பிஎம்., எஞ்சின் சுழல் வேகத்தில் 8.23 என்எம் டார்க்கையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை எகிறி வரும் நிலையில், இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் அம்சமாக இருக்கும்.

வீல் பேஸ்

வீல் பேஸ்

இந்த புதிய பைக் 1,258 மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால் அதிவேகமாக செல்லும்போதும் தரை பிடிமானம் அதிகம் இருக்கும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

நம்மூர் சாலைகளுக்கு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட வாகனங்கள் சிறப்பானது. அந்த வகையில், 179 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த பைக் மாடல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த பைக் 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்குடன் வந்துள்ளது. 105 கிலோ கெர்ப் எடை கொண்டது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

 டயர்கள்

டயர்கள்

இந்த புதிய பைக்கில் முன்புறத்திலும், பின்புறத்திலும் ட்யூப்லெஸ் டயர்கள்(80/100 - 18) பொருத்தப்பட்டிருக்கின்றன.

பிரேக்குகள்

பிரேக்குகள்

முன்புறத்திலும், பின்புறத்திலும் 130மிமீ விட்டம் கொண்ட டிரம் பிரேக்குகள் உள்ளன. டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கிடையாது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

சிவப்பு, நீலம் மற்றும் சாம்பல் நிறம் கொண்ட மூன்று கருப்பு வண்ணக் கலவைகளில் கிடைக்கும்.

விலை

விலை

ரூ.41,100 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த புதிய பைக்கின் டெலிவிரி துவங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Honda Motorcycle & Scooter India Pvt. Ltd. (HMSI) has launched its new Honda CD 110 Dream for the price of Rs. 41,100 (ex-showroom). Here are some special features in Honda CD110 Dream bike.
Story first published: Monday, July 7, 2014, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X