ஹீரோ ஸ்பிளென்டர் ஐ - ஸ்மார்ட் 110 பைக்கை வாங்கத் தூண்டும் 5 முக்கிய அம்சங்கள்!

Written By:

நேற்று முன்தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹீரோ ஐ- ஸ்மார்ட் 110 பைக் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் கலக்கலாக வந்துள்ளது.

ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பம்தான் இதன் முக்கிய சிறப்பாக இருந்தாலும், வேறு சில அம்சங்களும் இந்த பைக்கை வாங்கத் தூண்டும் அம்சங்களாக இருக்கின்றன. அந்த 5 முக்கிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

புதிய சேஸீ

இந்த பைக்கில் புதிய ஃப்ரேம் பொருத்தப்பட்டிருக்கிறது. இது மிகச் சிறந்த கையாளுமையை வழங்கும். மேலும், சஸ்பென்ஷன் அமைப்பில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக, மோசமான சாலைகளிலும் அதிக குலுங்கல்கள் தெரியாது. அதுமட்டுமின்றி, இந்த பைக்கின் இருக்கை அமைப்பு மிக சொகுசான பயணத்தை வழங்கும்.

ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம்

ஐ- ஸ்மார்ட் என்று பொருள்படுவதற்கான மிகச் சிறப்பான தொழில்நுட்பம், கார்களை போன்று இந்த பைக்கில் இருக்கும் ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பம். சிக்னல்கள் அல்லது 5 வினாடிகளுக்கு மேல் பைக் நியூட்ரல் கியரில் நிற்கும்போது எஞ்சின் தானாக நின்றுவிடும். கிளட்ச் லிவரை பிடித்தால், எஞ்சின் மீண்டும் உயிர்பெற்றுவிடும். இதனால், மைலேஜ் அதிகரிக்கும்.

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்

உயர் வகை பைக் மாடல்களில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், கூடுதல் பாதுகாப்பு மிக்க பைக் மாடலாக தெரிவிக்கப்படுகிறது.

செயல்திறன்

இந்த பைக்கில் இருக்கும் 109.15சிசி எஞ்சின் டார்க் ஆன் டிமான்ட் என்ற தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இதன்மூலமாக, வெறும் 5,500 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்திலேயே அதிகபட்சமான 9 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். மேலும், இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக 0- 60 கிமீ வேகத்தை 7.45 வினாடிகளில் எட்டிவிடும். குறைவான உராய்வு கொண்ட இதன் பிஎஸ்-4 மாசு விதிக்குட்பட்ட இதன் எஞ்சின் அதிகபட்சமாக 9.4பிஎஸ் பவரை அளிக்க வல்லது.

இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்

இந்த பைக்கில் எல்சிடி திரை மற்றும் அனலாக் மீட்டர் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் அமைப்பு உள்ளது. வேகம், ஓடிய தூரத்தை காட்டும் தகவல்கள் தவிர்த்து, சர்வீஸ் ரிமைன்டர் வசதியும் உள்ளது. மேலும், பார்ப்பதற்கு கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, July 16, 2016, 13:35 [IST]
English summary
Top 5 Cool Features of Hero Splendor iSmart 110 Bike.
Please Wait while comments are loading...

Latest Photos