150சிசி மார்க்கெட்டில் அதிக மைலேஜ் தரும் டாப் 10 பைக் மாடல்கள்!

By Saravana

குறைந்த தூர போக்குவத்தில் முதன்மையானது இருசக்கர வாகனங்களே. நகர்ப்புறத்தில் கார் வைத்திருப்பவர்கள் கூட அலுத்து போய் இருசக்கர வாகனங்களையே பயன்படுத்துகின்றனர்.

அதிக மைலேஜ், விரைவாக செல்வதற்கும் இருசக்கர வாகனங்கள் சிறந்த போக்குவரத்து சாதனமாக விளங்குகின்றன. இந்தநிலையில், மைலேஜை பார்ப்பவர்களுக்கு 100சிசி பைக்குகள் சிறப்பான தேர்வாக இருந்தாலும், அதனுடன் சேர்த்து சற்று பெர்ஃபார்மென்ஸையும் தரும் 150சிசி ரக பைக்குகள் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த விதத்தில், சிறப்பான மைலேஜை தரும் 10 சிறந்த 150சிசி ரக பைக்குகளை ஸ்லைடரில் காணலாம்.

 10. யமஹா FZ V 2.0

10. யமஹா FZ V 2.0

யமஹா பைக் மாடல்களில் இளைஞர்களால் அதிகம் விரும்ப்படும் மாடல்களில் ஒன்று. இந்த பைக்கில் இருக்கும் 149சிசி எஞ்சின் அதிகபட்சமாக 13 பிஎச்பி பவரையும், 12.80 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

இந்த பைக் லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக் டிஸ்க் பிரேக் வசதியுடன் கிடைக்கிறது. சென்னையில் ரூ.89,450 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

09. ஹீரோ ஹங்க்

09. ஹீரோ ஹங்க்

ஹீரோ நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்று ஹீரோ ஹங்க். இந்த பைக்கில் இருக்கும் 149சிசி எஞ்சின் 14 பிஎச்பி பவரையும், 13 என்எம் டார்க்கையும் வழங்கும்.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

இந்த பைக் லிட்டருக்கு 53 கிமீ மைலேஜ் தரும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவிக்கிறது. பல்வேறு வண்ணங்களில், வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களை கொண்ட 150சிசி பைக் மாடல். சென்னையில் ரூ.78,675 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

08. ஹீரோ இம்பல்ஸ்

08. ஹீரோ இம்பல்ஸ்

ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு என இரண்டிலும் செலுத்தத்தக்க அம்சங்களை கொண்ட பைக் மாடல். போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், குறைவான விலையில் கிடைக்கும் ஆஃப்ரோடு பைக் மாடலாக கூறலாம். இந்த பைக்கில் 149சிசி எஞ்சின் அதிகபட்சமாக 13 பிஎச்பி பவரையும், 13.40 என்எம் டார்க்கையும் வழங்கும்.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

இதன் ரக பைக் மாடல்களில் அதிக மைலேஜை தரும் மாடலாகவும் விளங்குகிறது. இந்த பைக் லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஸ்போக் வீல்கல், டிஸ்க் பிரேக் சிஸ்டம் போன்றவை இதன் முக்கிய அம்சங்கள். இந்த பைக் மணிக்கு 115 கிமீ வரை டாப்ஸ்பீடு கொண்டது. சென்னையில் ரூ.79,880 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

07. ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ்

07. ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ்

150சிசி பைக் மார்க்கெட்டில் அதிக பெர்ஃபார்மென்ஸ் மற்றும் சிறந்த மைலேஜ் கொண்ட பைக் மாடல். மேலும், கூடுதல் ஆக்சஸெரீகளுடன் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. இந்த பைக்கில் இருக்கும் 149சிசி எஞ்சின் அதிகபட்சமாக 15.60 பிஎச்பி பவரையும், 13.50 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

இந்த பைக் லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. டிஸ்க் பிரேக் வசதியுடன் வரும் இந்த பைக் சென்னையில் ரூ.78,350 ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

06. சுஸுகி ஜிஎஸ்150ஆர்

06. சுஸுகி ஜிஎஸ்150ஆர்

சுஸுகி நிறுவனத்தின் சிறப்பான பைக் மாடல் சுஸுகி ஜிஎஸ்150ஆர். சிறந்த செயல்திறனுக்கு பெயர் பெற்ற 150சிசி மாடல். இந்த பைக்கில் இருக்கும் 149சிசி எஞ்சின் 13.80 பிஎச்பி பவரையும், 13.40 என்எம் டார்க்கையும் வழங்கும்.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

சுஸுகி ஜிஎஸ்150ஆர் பைக் லிட்டருக்கு 56 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. டிஜிட்டல் மீட்டர் கன்சோல், 108 கிமீ டாப் ஸ்பீடு கொண்டது. டிஸ்க் பிரேக் வசதியுடன் கிடைக்கிறது. சென்னையில் ரூ. 78,640 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

05. ஹீரோ அச்சீவர்

05. ஹீரோ அச்சீவர்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விலை குறைவான 150சிசி பைக் மாடல். இருந்தும் விற்பனையில் சிறப்பான இடத்தை பெறவில்லை. டிசைன், மைலேஜ் போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியை தரலாம். இந்த பைக்கில் இருக்கும் 149சிசி எஞ்சின் அதிகபட்சமாக 13 பிஎச்பி பவரையும், 13 என்எம் டார்க்கையும் வழங்கும்.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

இந்த பைக் லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் தரும். இந்த பைக் மணிக்கு 111 கிமீ வேகம் வரை செல்லும். 138 கிலோ எடை கொண்ட இந்த பைக் டிஸ்க் பிரேக் வசதியுடன் கிடைக்கிறது. சென்னையில் ரூ. 69,750 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

04. பஜாஜ் டிஸ்கவர் 150F

04. பஜாஜ் டிஸ்கவர் 150F

பஜாஜ் பைக்குகள் மைலேஜில் பெயர் பெற்றவை. அந்த வகையில், டிஸ்கவர் வரிசையில் பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்யும் இந்த பைக் மாடலும் சிறப்பானதே. ஃபேரிங் பேனல் பொருத்தப்பட்ட இந்த பைக்கில் இருக்கும் 145சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14.30 பிஎச்பி பவரையும், 12.70 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

இந்த பைக் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 132 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் டிஸ்க் பிரேக் வசதி இல்லை. சென்னையில் ரூ.71,128 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

03. ஹோண்டா சிபி ஹார்னெட்

03. ஹோண்டா சிபி ஹார்னெட்

ஹோண்டா சிபி டிரிக்கர் பைக்கிற்கு மாற்றாக வந்த இந்த பைக் மாடலில் 150சிசி மாடலுக்கு பதிலாக 160சிசி ரகத்தை சேர்ந்தது. ஆனால், மைலேஜில் சிறந்த சிபி டிரிக்கர் இடத்தை பிடித்திருப்பதால், இந்த பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 162.71சிசி எஞ்சின் அதிகபட்சமாக 15.44 பிஎச்பி பவரையும், 14.76 என்எம் டார்க்கையும் வழங்கும்.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

இந்த பைக் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. டிஸ்க் பிரேக் வசதியுடன் கிடைக்கிறது. சென்னையில் ரூ.89,200 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

02. பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்ட்ரீட்

02. பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்ட்ரீட்

இந்தியாவின் விலை குறைவான க்ரூஸர் வகை பைக் மாடல். இந்த பைக்கில் இருக்கும் 150சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14.30 பிஎச்பி பவரையும், 12.50 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

இந்த பைக் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. டிஸ்க் பிரேக் வசதியுடன் கிடைக்கும் இந்த பைக் 148 கிலோ எடை கொண்டது. சென்னையில் ரூ.84,600 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

01. பஜாஜ் பல்சர் 150 டிடிஎஸ்ஐ

01. பஜாஜ் பல்சர் 150 டிடிஎஸ்ஐ

150சிசி மார்க்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பைக் மாடல் பஜாஜ் பல்சர் 150 பைக்தான். டிசைன், செயல்திறன், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறப்பான மாடல். இந்த பைக்கில் இருக்கும் 149சிசி எஞ்சின் அதிகபட்சமாக 15 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க்கையும் வழங்கும்.

மைலேஜ் விபரம்

மைலேஜ் விபரம்

இந்த பைக் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. டிஸ்க் பிரேக் வசதியுடன் கிடைக்கிறது. 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. சென்னையில் ரூ.81,450 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

எது சிறந்தது?

எது சிறந்தது?

இந்த பைக் மாடல்களில் பஜாஜ் பல்சர் 150 டிடிஎஸ்ஐ மாடல் மிகச்சிறந்ததாக இருக்கிறது. நடைமுறையில் லிட்டருக்கு 50 கிமீ வரை மைலேஜ் தரும். அத்துடன், டிசைன், செயல்திறன், கையாளுமை, சரியான விலை, அதிக மறுவிற்பனை மதிப்பு, மன நிறைவை தரும் மாடல் பஜாஜ் பல்சர் 150 டிடிஎஸ்ஐ மாடலாக இருக்கிறது.

Most Read Articles
English summary
Top 10 Best Mileage Bike Models In India In 150CC Segment.
Story first published: Monday, April 18, 2016, 10:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X