மார்க்கெட்டில் சிறந்த 125சிசி ஸ்கூட்டர்கள் எவை? எதைத் தேர்ந்தெடுக்கலாம்?

Written by: Meena

ஸ்கூட்டர்களுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு... ஆண், பெண் பேதமின்றி இரு பாலருக்கும் ஏற்ற வாகனமாகவே அது கருதப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக அதிக சௌகரியம் நிறைந்தது பைக்கைக் காட்டிலும் ஸ்கூட்டர்தான் என்பதே பெரும்பாலானோரது கருத்து.

கடுமையான டிராஃபிக் நெரிசல்களில் கியரை மாற்றி மாற்றி கடுப்பாக வேண்டியதில்லை... உடைமைகளை வண்டியில் எடுத்துச் செல்ல சிரமப்பட வேண்டியதில்லை... இதெல்லாம் ஸ்கூட்டரில் உள்ள ஹைலைட்டான விஷயங்கள். 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களின் விற்பனை மார்க்கெட்டில் அதிக அளவில் உள்ளது. அதில் சிறந்த மாடல்கள் எவை? அவற்றின் செயல்திறன், மைலேஜ் என்ன? என்பதை சிறிய ஒப்பீட்டின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்....

ஆக்டிவா 125

ஹோண்டா நிறுவனத்தின் சக்சஸ்ஃபுல் மாடல்களில் ஒன்று ஆக்டிவா. இந்த ஸ்கூட்டரின் நேர்த்தியான வடிவமைப்பு, செயல்திறன், வண்ணங்கள் ஆகியவை அனைவரையும் ஈர்த்துள்ளன.

ஸ்கூட்டர்களில் வெஸ்பாவுக்கு அடுத்து அதிக விலை கொண்டதும் இந்த மாடல்தான். மெட்டல் பாடி, ஆப்ஷனஸ் டிஸ்க் பிரேக் ஆகியவை ஆக்டிவாவில் இருப்பது சிறப்பு.

எஞ்சினைப் பொருத்தவரை, 124.99 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். 6.500 ஆர்பிஎம்-இல் 8.6 எச்.பி. குதிரைத் திறனையும், 5,500 ஆர்பிஎம்-இல் 10.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

லிட்டருக்கு 59 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ஹோண்டா நிறுவனம் உறுதி அளிக்கிறது. குறைந்தது 50 கிலோ மீட்டராவது தரும் என நம்பலாம்.

இருக்கைக்கு கீழ் பொருள்களை வைப்பதற்கான இடவசதி - 18 லிட்டர்

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு - 5.3 லிட்டர்

விலை - ஸ்டேண்டர்டு மாடல் ரூ.59,896, டிஸ்க் பிரேக் - ரூ.63,391 (பெங்களூர் எக்ஸ் ஷோ ரூம் விலை)

02. சுஸுகி ஆக்சஸ்

குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற வகையிலான ஸ்கூட்டராக இது உள்ளது. எளிமையான வடிவமைப்புடன் இருந்தாலும், அனைவராலும் கவரப்பட்டது சுஜுகி ஆக்சஸ் மாடல். விற்பனையிலும் சிறப்பாகவே உள்ளது. ஆக்டிவாவைக் காட்டிலும் விலை குறைவு என்பதால், வாடிக்கையாளர்களின் தேர்வு ஆக்சஸ் மாடலின் பக்கமும் திரும்பி உள்ளது.

124 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். 7,000 ஆர்பிஎம்-இல் 8.58 எச்.பி. குதிரைத் திறனையும், 5,000 ஆர்பிஎம்-இல் 9.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உள்ளது.

லிட்டருக்கு 57 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என சுஜுகி நிறுவனம் உறுதி அளிக்கிறது. 45 - 50 கிலோ மீட்டராவது கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இருக்கைக்கு கீழ் பொருள்களை வைப்பதற்கான இடவசதி - 20 லிட்டர்

எடை- 112 கிலோ

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு - 6 லிட்டர்

விலை - ரூ.53,073 (பெங்களூர் எக்ஸ் ஷோ ரூம் விலை)

சுஸுகி ஸ்விஷ்

ஆக்சஸ் மாடலைக் காட்டிலும் சற்று மெல்லிய வடிவமைப்புடன் ஸ்கூட்டர் வேண்டும் என்று விரும்புவர்களுக்காக சுஜுகி நிறுவனம் அறிமுகப்படுத்திய மாடல்தான் ஸ்விஸ். மற்றபடி சிறப்பம்சங்கள் எடுத்துக் கொண்டால், ஸ்விஸ் மற்றும் ஆக்சஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.

124 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். 7,000 ஆர்பிஎம்-இல் 8.58 எச்.பி.யையும், 5,000 ஆர்பிஎம்-இல் 9.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உள்ளது.

மைலேஜைப் பொருத்தவரை ஆக்சஸ் மாதிரியேதான் இந்த மாடலும்.

இருக்கைக்கு கீழ் பொருள்களை வைப்பதற்கான இடவசதி - 20 லிட்டர்

எடை- 112 கிலோ

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு - 6 லிட்டர்

விலை - ரூ.55,425 (பெங்களூர் எக்ஸ் ஷோ ரூம் விலை)

மஹிந்திரா கஸ்ட்டோ 125

அண்மையில் மஹிந்திரா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய ஸ்கூட்டர் மாடல் கெஸ்டா 125. இருக்கையை உயரத்துக்குத் தகுந்தவாறு சரிசெய்து கொள்ளும் வசதி இருப்பது இந்த மாடலில் ஹைலைட்டான விஷயம். இதைத் தவிர பல்வேறு கூடுதல் அம்சங்களும் கெஸ்டாவில் தரப்பட்டுள்ளன.

எஞ்சினைப் பொருத்தவரை, 124.6 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். 7,000 ஆர்பிஎம்-இல் 8.5 எச்.பி. குதிரைத் திறனையும், 5,500 ஆர்பிஎம்-இல் 10 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

50 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ஏஆர்ஏஐ சான்றளித்துள்ளது. லிட்டருக்கு 40 - 45 கிலோ மீட்டர் கிடைக்கலாம்.

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு - 6 லிட்டர்.

விலை - ரூ.51,580 (பெங்களூர் எக்ஸ் ஷோ ரூம் விலை).

வெஸ்பா எல்எக்ஸ் 125

செம கிளாசிக் மற்றும் ஸ்டைலான லுக் கொண்ட ஸ்கூட்டர் வெஸ்பா. மற்ற வண்டிகளைக் காட்டிலும் விலை கூடுதல் என்றாலும், அதற்கு உண்டான செயல்திறனும், அம்சங்களும் இதில் உள்ளன. வடிவமைப்பு மற்றும் பிராண்ட் நேமில் அனைவரையும் ஈர்க்கும் சக்தி வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டருக்கு உண்டு.

124 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின். 7,500 ஆர்பிஎம்-இல் 10.06 எச்.பி. குதிரைத் திறனையும், 7,500 ஆர்பிஎம்-இல் 10.60 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என வெஸ்பா நிறுவனம் உறுதி அளிக்கிறது. 55 கிலோ மீட்டர் பயணிக்கும் என நம்பலாம்.

இருக்கைக்கு கீழ் பொருள்களை வைப்பதற்கான இடவசதி - 16.5 லிட்டர்.

எடை- 114 கிலோ.

பெட்ரோல் டேங்க் கொள்ளளவு - 8.5 லிட்டர்.

விலை - ரூ.71,212 (பெங்களூர் எக்ஸ் ஷோ ரூம் விலை).

இந்தத் தகவல்கள் உங்களுக்கு நிச்சயம் பயனளித்திருக்கும் என நம்புகிறோம்... இருசக்கர வாகனங்களைப் பற்றிய புதிய செய்திகள் மற்றும் விவரங்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் டிரைவ் ஸ்பார்க்குடன்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Wednesday, July 27, 2016, 15:43 [IST]
English summary
Top 125cc Scooter In India - Mileage & Features Comparison.
Please Wait while comments are loading...

Latest Photos