ஓட்டுவதற்கு குதூகலம் தரும் டாப்- 5 பைக்குகள்!

போக்குவரத்து நெரிசல், ரோடு சரியில்லை என்று காரணங்களை அடுக்கினாலும், பைக் ஓட்டுவதில் இருக்கும் அலாதி சுகத்தை மறுக்க இயலாது. கார் இருந்தாலும் பலபேர் பைக் ஓட்டுவதையே விருப்பமாக தெரிவிப்பதை காண முடிகிறது.

இந்தநிலையில், ஓட்டுவதற்கு குதூகலத்தை ஏற்படுத்தும் 5 சிறந்த பைக் மாடல்களை ஸ்லைடரில் தொகுத்து வழங்கியுள்ளோம். மாதச் சம்பளதாரர், சிறு வணிகம் செய்வோர்க்கு ஏற்ற பட்ஜெட்டில் இந்த பைக்குகளை வாங்கிவிட ஏதுவாக பட்ஜெட்டையும் கணக்கில்கொண்டு தேர்வு செய்து வழங்கியுள்ளோம்.


பட்டியல்

பட்டியல்

ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு கீழான விலை கொண்ட பைக் மாடல்களை தேர்வு செய்து வழங்கியுள்ளோம். அந்த 5 சிறந்த மாடல்களின் விபரங்கள் தலா இரண்டு ஸ்லைடுகளில் கொடுத்துள்ளோம்.

5. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160

5. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160

பட்ஜெட் விலையில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டுவதற்கு ஓரளவு இணையான அனுபவத்தை தரும் பைக்குகளில் ஒன்று டிவிஎஸ் அப்பாச்சி 160 ஆர்டிஆர். மார்க்கெட்டிற்கு வந்து நீண்ட காலமாக ஆனாலும் இந்த பைக்கிற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். குறைவான வீல்பேஸ் கொண்ட மாடல் என்பதால், ஓட்டுவதற்கும், கையாளுமைக்கும், எளிதாக கட்டுப்படுத்துவதற்கும் ஏற்ற மாடலாக பெயர் பெற்றுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 15 பிஎச்பி பவரை அளிக்கும் 159.7 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என்கிறது டிவிஎஸ். 16 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருப்பதால், தூர பயணங்களுக்கும் சிறப்பானதாக இருக்கும். ரூ. 81,500 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குதூகலத்தை விரும்புவர்களுக்கான சிறந்த பைக்குகளுக்கான பட்டியலில் டிவிஎஸ் அப்பாச்சிக்கும் இடம் உண்டு.

 4.ஹோண்டா சிபி டிரிக்கர்

4.ஹோண்டா சிபி டிரிக்கர்

வசதியாக அமர்ந்து செல்வதற்கு ஏற்ற இருக்கை, கைகளுக்கு லாவகமாக அமைக்கப்பட்ட ஹேண்டில்பார், ஸ்மூத்தான எஞ்சின் என்று ஹோண்டா ரசிகர்களை சுண்டி இழுக்கிறது. வடிவமைப்பிலும் சிறப்பான மாடல்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 14 பிஎச்பி பவரை அளிக்கும் 149.1 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 60 கிமீ வரை மைலேஜ் தரும் என்கிறது ஹோண்டா. ரூ.90,000 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

3. யமஹா எஃப் இசட்- FI வி2.0

3. யமஹா எஃப் இசட்- FI வி2.0

யமஹா ஆர்15 குதூகலத்தை தருவதில் முன்னிலை பெற்றாலும் பட்ஜெட்டை கருதி, இந்த பட்டியலில் யமஹா எஃப்இசட் - FI மாடல் இடம்பெற்றுள்ளது. இதன் ஹேண்டில்பார் அமைப்பு, செயல்திறன் காட்டும் எஞ்சின் என ஓட்டுபவருக்கு குதூகலத்தையும், திருப்தியையும் தரும் மாடல் இது.

எஞ்சின்

எஞ்சின்

யமஹா எஃப்இசட் எஸ் மாடலில் 13பிஎச்பி பவரை அளிக்கும் 149 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மாடல் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது மைலேஜ் மேம்பட்டிருக்கிறது. இந்த பைக்கின் ஹேண்டில்பார், ஃப்ரேம் மற்றும் பின்புற சஸ்பென்ஷன் இந்த பைக்கிற்கு சிறப்பான கையாளுமையை வழங்குகிறது. ரூ.92,000 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

2.சுஸுகி ஜிக்ஸெர்

2.சுஸுகி ஜிக்ஸெர்

அடக்கமாகவும், ஓட்டுவதற்கு எளிதான 150சிசி பைக் மாடலாக இதனை குறிப்பிடலாம். விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வரும் இந்த புதிய மாடலும் ஓட்டுவதற்கு குதூகலத்தை தரும் மாடல்களில் ஒன்று. அடக்கமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவை டெஸ்ட் டிரைவ் செய்பவர்களை கவர்ந்துவிடுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

14 பிஎச்பி பவரை அளிக்கும் 154.9 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. ரூ.78,000 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

1.பஜாஜ் பல்சர் 200என்எஸ்

1.பஜாஜ் பல்சர் 200என்எஸ்

பைக் பிரியர்களின் முதல் தேர்வாக இருக்கும் இந்த பல்சர் மாடல் டிசைன், எஞ்சின், கையாளுமை என அனைத்து விதத்திலும் ஓட்டுபவருக்கு குதூகலத்தை தரக்கூடியது. போட்டியாளர்களைவிட மிக குறைவான விலையில் பைக் ரசிகர்களுக்கு ஏற்ற மாடலாக இருந்து வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

23 பிஎச்பி பவரை அளிக்கும் 200சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஓட்டுபவருக்கு குதூகலத்தை தரும் மாடல்களில் முதலாவதாக இடம்பெறுவதற்கு பட்ஜெட், பெர்ஃபார்மென்ஸ், ஸ்டைல் என அனைத்து விதத்திலும் பல்சர் 200என்எஸ் முதன்மை பெறுகிறது.

Most Read Articles
English summary
Here are given the top 5 fun to ride bikes in India. Have a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X