125சிசி ரகத்தில் அதிக மைலேஜ் தரும் டாப் 6 பைக் மாடல்கள்

Written By:

நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற போக்குவரத்து சாதனம் இருசக்கர வாகனங்கள்தான். அதிலும், ஒவ்வொருவரும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப சிறப்பம்சங்களை கொண்ட இருசக்கர வாகனங்களை தேர்வு செய்து வாங்குகின்றனர்.

இந்தநிலையில், ஓரளவு நல்ல மைலேஜும் வேண்டும், போதிய செயல்திறனும் இருக்கணும், பட்ஜெட்டும் கைக்கு தோதாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருப்பது 125சிசி பைக்குகள்தான். அதில், அனைத்திலும் சிறப்பாக இருப்பதோடு, மைலேஜிலும் சிறந்த 5 பைக் மாடல்கள் இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

01. ஹோண்டா சிபி ஷைன்

125சிசி செக்மென்ட் பைக்குகளை வாங்க விரும்புவோரின் முதல் சாய்ஸ் ஹோண்டா ஷைன்தான். டிசைன், இருக்கை வசதி, விலை, மைலேஜ் என அனைத்திலும் சிறப்பானது. இதனாலேயே, இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறது.

எஞ்சின்

இந்த பைக்கில் இருக்கும் 124.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10.12பிஎச்பி பவரையும், 10.54என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக் லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கில் 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. ரூ.60,700 விலையில் கிடைக்கிறது.

02. பஜாஜ் டிஸ்கவர் 125

டிஸ்கவர் பிராண்டு என்றாலே மைலேஜுக்கு கியாரண்டி. டிசைன், நவீன தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின், சிறப்பான எரிபொருள் சிக்கனம் போன்றவை இந்த பைக்கை முன்னிலைப்படுத்தும் விஷயங்கள். இந்த பைக்கின் பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டிஸ்கவர் 125 எஞ்சின்

இந்த பைக்கில் இருக்கும் 124.6சிசி எஞ்சின் அதிகபட்சமாக 11.5 பிஎச்பி பவரையும், 10.8 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 76 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதில், 9.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. ரூ.56,400 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

03. ஹோண்டா கிளாமர் FI

125சிசி ரகத்திலேயே அதிக விலை கொண்ட பைக் மாடல். மேலும், விற்பனையிலும் அசத்தி வருகிறது. மேலும், இதன் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் எரிபொருள் விரயத்தை தவிர்த்து, அதிக மைலேஜை வழங்குவதற்கு துணை புரிகிறது. அதேநேரத்தில், பழமையான இதன் டிசைன் குறையாக இருக்கிறது.

 

 

எஞ்சின்

இந்த பைக்கில் இருக்கும் 124.8சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.1 பிஎச்பி பவரையும், 10.35 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக் லிட்டருக்கு 81.1 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. ரூ.74,000 டெல்லி ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

04. டிவிஎஸ் ஃபீனிக்ஸ் 125

125சிசி செக்மென்ட்டில் பிரிமியம் மோட்டார்சைக்கிள் எங்களது ஃபீனிக்ஸ்தான் என்று டிவிஎஸ் மோட்டார்ஸ் கெத்தாக கூறுகிறது. அப்பாச்சியில் இருப்பது போன்ற எல்இடி பைலட் லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அசத்தாலன பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், மென்மையும், செயல்திறனும் மிக்க எஞ்சின் என அசத்துகிறது.

ஃபீனிக்ஸ் எஞ்சின்

இந்த பைக்கில் இருக்கும் 124.5சிசி ஈக்கோத்ரஸ்ட் எஞ்சின் அதிகபட்சமாக 11 பிஎச்பி பவரையும், 10.8என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக் லிட்டருக்கு 67 கிமீ மைலேஜை வழங்கும். இதில், 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க இருக்கிறது. ரூ.61,000 டெல்லி ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

 

 

05. யமஹா சலூட்டோ

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக், யமஹா நிறுவனத்தின் புளுகோர் என்ற நவீன தொழில்நுட்பம் கொண்ட 125சிசி எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புளூகோர் தொழில்நுட்பம் கொண்ட யமஹா எஞ்சின், அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் சிறப்பம்சங்களை பெற்றது. டிஸ்க் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் அல்லாத இரு மாடல்களில் கிடைக்கிறது.

எஞ்சின்

இந்த பைக்கில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.2 பிஎச்பி பவரையும், 10.1 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 78 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில், 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ரூ.52,600 விலையில் கிடைக்கிறது.

06. சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ் 125

ஸ்லிங்ஷாட் என்ற சிறப்பான மாடல் இருந்தும், 125சிசி செக்மென்ட்டில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தடுமாறி வருகிறது. கியர் ஷிஃப்ட் மென்மையாக இருக்கும் மாடாலக இருப்பதுடன், கியர ஷிஃப்ட இன்டிகேட்டர் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போட்டியாளர்களைவிட செயல்திறன் குறைவு என்பது இதன் மைன்ஸ்.

 

 

எஞ்சின்

சுஸுகி ஸ்லிங்ஷாட் ப்ளஸ் பைக்கில் 124சிசி எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 8.8பிஎச்பி பவரையும், 10என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 75 கிமீ மைலேஜ் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. ரூ.60,000 ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

எது பெஸ்ட்?

ஒட்டுமொத்த பேக்கேஜில் சிறந்தது ஹோண்டா ஷைன். அதேநேரத்தில், பட்ஜெட் விலையில் சிறந்த தேர்வாக இருப்பது பஜாஜ் டிஸ்கவர் 125எம் பைக்.

 

English summary
Top 6 Best 125cc Fuel Efficient Bikes In India.
Please Wait while comments are loading...

Latest Photos