ஜூபிடர் Vs ஆக்டிவா Vs மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்களின் ஒப்பீட்டு பார்வை

பைக்குகளை ஒப்பிடும்போது மைலேஜ் குறைவாக இருந்தாலும், பிக்கப், இடவசதி, எளிய கையாளுமை போன்றவை ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பை அதிகப்படுத்தி வருகின்றன. போட்டி அதிகரித்துள்ளதன் எதிரொலியாக புதிய மாடல்களின் வரவும் தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில், சமீபத்தில் வந்த டிவிஎஸ் ஜூபிடர் விற்பனையில் பீடு நடைபோடும் ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்களுடன் நேரடியாக மோதுகிறது.

போட்டியாளர்களாக இருந்தாலும், பிராண்டு பெயர்தான் வேறு என்று கூறும் அளவுக்கு இந்த மூன்று ஸ்கூட்டர்களிலும் பல ஒற்றுமைகளையும், சில வேற்றுமைகளையும் காண முடிந்தது. அவற்றை உங்களுடன் பகிரந்து கொள்கிறோம். எந்தெந்த ஸ்கூட்டரில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

ஜூபிடர் - முன்னோட்டம்

ஜூபிடர் - முன்னோட்டம்

தோற்றத்திலும், கூடுதல் வசதிகளுடன் வீகோ ஸ்கூட்டரைவிட சற்று பிரமியமான அந்தஸ்து கொண்ட மாடலாக ஜூபிடரை டிவிஎஸ் களமிறக்கியுள்ளது. முதலில் வட இந்திய மார்க்கெட்டிலும், நவம்பர் முதல் தென் இந்திய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு வருகிறது. ரூ.44,200 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவா - முன்னோட்டம்

ஆக்டிவா - முன்னோட்டம்

ஹோண்டா ஆக்டிவாவுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மாடல். ஸ்டைலான தோற்றம், சிறப்பான எஞ்சின் என மிக நம்பகத்தன்மை வாய்ந்த ஸ்கூட்டர் மாடல். ரூ.47,254 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

 மேஸ்ட்ரோ - முன்னோட்டம்

மேஸ்ட்ரோ - முன்னோட்டம்

ஆக்டிவாவை அடிப்படையாகக் கொண்டு மாற்றம் செய்யப்பட்ட மாடல்தான் ஹீரோ மேஸ்ட்ரோ என்றாலும், கூடுதல் அம்சங்கள் கொண்டதாக மார்க்கெட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆஸ்தான வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக மாறியுள்ளது. ரூ.46,900 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஜூபிடர் - தோற்ற ஒப்பீடு

ஜூபிடர் - தோற்ற ஒப்பீடு

ஆக்டிவாவுக்கு போட்டியாக வடிவமைக்க சொன்னால், ஆக்டிவாவையே மனதில் வைத்து வடிவமைத்தது போன்று இருக்கிறது. ஆக்டிவா சாயல் ஜூபிடரில் அதிகம் தெரிகிறது. இருப்பினும், சிற்சில மாறுதல்களை கொடுத்து டிவிஎஸ் ஸ்கூட்டராக மாற்றியுள்ளனர். இந்த ஸ்கூட்டரின் டிசைனில் குறிப்பிடத்தக்க விஷயம் ட்வின் சிட்டி லைட்டுகள் ஜூபிடருக்கு கூடுதல் அழகை தருகிறது. இதேபோன்று, பக்கவாட்டில் வி வடிவ பாடி லைன்கள் மூலம் கூடுதல் கம்பீரத்தை பெற்றுள்ளது.

ஆக்டிவா - தோற்ற ஒப்பீடு

ஆக்டிவா - தோற்ற ஒப்பீடு

மிக எளிமையான அதேவேளை மிகவும் கம்பீரமான தோற்றத்தை பெற்றிருப்பதே ஆக்டிவா டிசைனின் வெற்றி ரகசியம். அப்படி இப்படி என்று ஒரு இடத்தில் தேவையில்லாத சமாச்சாரங்கள் கிடையாது. மிக நேர்த்தியான டிசைனாக கூறலாம். அதேவேளை, பழைய ஸ்டைல் ஹேண்டில்பார், இன்டிகேட்டர்கள் ஆகியவை இளைய வாடிக்கையாளர்களை கவராது. எனவே, இது குடும்பத் தலைவர்களுக்கான ஸ்கூட்டராக கூற முடியும்.

மேஸ்ட்ரோ - தோற்ற ஒப்பீடு

மேஸ்ட்ரோ - தோற்ற ஒப்பீடு

ஹீரோ மேஸ்ட்ரோவை ஆக்டிவாவுடன் ஒப்பிடுவது தேவையற்றது. ஏனெனில், ஆக்டிவாவை அடிப்படையாகக் கொண்ட மாடல் என்பது தெரிந்தது. ஆனால், ஜூபிடருடன் ஒப்பிடும்போது ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆம், முன்பக்கம் ட்வின் சிட்டி லைட்டுகள் மற்றும் பக்கவாட்டில் வி வடிவ பாடி லைன்கள் ஆகியவை இரண்டிலும் ஒன்றாகவே இருக்கிறது. இரட்டை வண்ண ரியர் வியூ கண்ணாடிகள் ஆக்டிவா, ஜூபிடரிலிருந்து வேறுபடுத்துகின்றன. பின்புறத்தில் ஆக்டிவாவின் எளிமையான தோற்றத்திலிருந்து சிறிது மாறியிருப்பதோடு, ஜூபிடரைவிட நன்றாக இருக்கிறது.

 ஜூபிடர் எஞ்சின்

ஜூபிடர் எஞ்சின்

வீகோ ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 109.7சிசி எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 7.88 எச்பி ஆற்றலையும், 8 என்எம் டார்க்கையும் அளிக்கும். சிவிடி கியர் பாக்ஸ் இணைந்து செயல்புரிகிறது. ஜூபிடர் எஞ்சின் வீகோவைவிட அதிர்வுகள் குறைந்ததாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவிக்கிறது. ஆனால், நடைமுறையில் வீகோ நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 43 கிமீ மைலேஜையும் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 47 கிமீ மைலேஜ் தருகிறது. மேம்படுத்தப்பட்ட எஞ்சினுடன் வந்திருக்கும் ஜூபிடர் இதைவிட ஒன்றிரண்டு கிலோமீட்டர்கள் கூடுதலாக தரலாம்.

ஆக்டிவா எஞ்சின்

ஆக்டிவா எஞ்சின்

ஆக்டிவாவின் வெற்றிக்கு அதில் பொருத்தப்பட்டிருக்கும் 109சிசி எஞ்சின்தான் மிக முக்கியமான காரணமாக கூறலாம். 8 எச்பி ஆற்றலையும், 8.74 என்எம் டார்க்கையும் அளிக்கும் இந்த எஞ்சின் மிகச் சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரிலும் சிவிடி டிரான்ஸ்மிஷன்தான் துணைபுரிகிறது.

மேஸ்ட்ரோ எஞ்சின்

மேஸ்ட்ரோ எஞ்சின்

ஹோண்டா ஆக்டிவா எஞ்சினை டியூனிங் செய்து இந்த ஸ்கூட்டரில் பொருத்தியிருக்கிறது ஹீரோ. இந்த 109சிசி திறன் கொண்ட எஞ்சின் 8 எச்பி ஆற்றலையும், 9.10 என்எம் டார்க்கையும் அளிக்கும். பெர்ஃபார்மென்ஸில் ஆக்டிவாவுக்கு இணையாக இருந்தாலும், மைலேஜில் பின்தங்குகிறது மேஸ்ட்ரோ.

ஜூபிடர் - சஸ்பென்ஷன்

ஜூபிடர் - சஸ்பென்ஷன்

ஜூபிடரில் முன்புறம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டிருக்கிறது. வீகோ போன்றே அனைத்து சாலைகளிலும் இந்த சஸ்பென்ஷன் சிறப்பாக செயலாற்றும் என்று நம்பலாம்.

ஜூபிடர் சக்கரங்கள்

ஜூபிடர் சக்கரங்கள்

வீகோ மற்றும் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மட்டுமே 12 இஞ்ச் அலாய் வீல்களுடன் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஜூபிடரில் அலாய் வீல்கள் கருப்பு நிறத்தில் மேட் பினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. பிற மாடல்களைவிட இதனை கூடுதல் அம்சமாக எடுத்துக் கொள்ளலாம். ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டரில் 130மிமீ டிரம் பிரேக்குகளை கொண்டிருக்கிறது.

ஆக்டிவா - சஸ்பென்ஷன்

ஆக்டிவா - சஸ்பென்ஷன்

ஆக்டிவாவின் குறைகளில் ஒன்று முன்புற சஸ்பென்ஷன். பழைய காலத்து ஸ்பிரிங் லோடர் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனே இதுவரை செயலாற்றி வருகிறது. மேடு, பள்ளமான சாலைகளில் நம்மை அல்லோகலப்படுத்திவிடுகிறது. அலாய் வீல்கள் கொடுக்கப்படாமல் சாதாரண சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதிலும், 130 மிமீ டிரம் பிரேக்குகள்தான் என்றாலும் கோம்பி பிரேக் சிஸ்டத்துடன் கிடைப்பது கூடுதல் மதிப்பு. ஜூபிடரை விட நிச்சயமாக கோம்பி பிரேக்கிங் சிஸ்டத்தின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கிறது.

 மேஸ்ட்ரோ - சஸ்பென்ஷன்

மேஸ்ட்ரோ - சஸ்பென்ஷன்

ஆக்டிவா போன்றே இந்த ஸ்கூட்டரின் முன்புற சஸ்பென்ஷன் சிறப்பாக இல்லை. ஆக்டிவா போன்றே சாதாரண ரக வீல்கள்தான் பொருத்தப்பட்டுள்ளன. ஜூபிடர், ஆக்டிவா ஆகியவை ட்யூப்லெஸ் டயர்களுடன் கிடைக்கும் நிலையில், மேஸ்ட்ரோவில் ட்யூப்லெஸ் டயர்கள் இல்லை என்பதை கவனிக்க வேண்டிய விஷயம். ஆக்டிவா போன்ற 130மிமீ டிரம் பிரேக்குகளுடன், கோம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கிறது.

 ஜூபிடர் அம்சங்கள்

ஜூபிடர் அம்சங்கள்

ஒப்பீடுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஸ்கூட்டர்களில் அதிக சிறப்பம்சங்கள் பட்டியலை கொண்டதாக ஜூபிடரை கூறலாம். எரிபொருள் குறைவதை எச்சரிக்கும் இன்டிகேட்டர், அதிக எரிபொருள் சிக்கனத்தை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையிலான ஈக்கோமீட்டர் ஆகிய வசதிகளுடன் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

 பை மாட்டும் கொக்கி

பை மாட்டும் கொக்கி

பைகளை பத்திரமாக மாட்டி எடுத்து செல்லும்விதமாக இருக்கையின் கீழே லாக் வசதியுடன் கூடி கொக்கி இருக்கிறது. பிற ஸ்கூட்டர்களைவிட சரியான உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட்டு கூறலாம்.

ஜூபிடர் ஹெட்லைட்

ஜூபிடர் ஹெட்லைட்

இரண்டு பைலட் லைட்டுகளுடன், ட்வின் சிட்டி லைட்டுகளும் குறிப்பிடத்தக்க அம்சம்.

ஜூபிடர் 'பாஸ்' லைட்

ஜூபிடர் 'பாஸ்' லைட்

அவசர காலத்தில் எதிரில் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை தருவதற்கான பாஸ் லைட் வசதிகொண்ட முதல் ஸ்கூட்டராக ஜூபிடரை கூறலாம். பின்புறத்தில் எல்இடி லைட்டுகள் கொண்ட டெயில் லைட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

 ஜூபிடர் ஸ்டோரேஜ் வசதி

ஜூபிடர் ஸ்டோரேஜ் வசதி

இருக்கைக்கு கீழே 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது. மொபைல்போன் சார்ஜரும் உள்ளது. மார்க்கெட்டில் மிகக் குறைந்த டர்னிங் ரேடியஸ் கொண்டதாகவும் கூறலாம். இந்த ஸ்கூட்டரின் டர்னிங் ரேடியஸ் 1,910 மிமீ.

 ஜூபிடர் வசதிகள்

ஜூபிடர் வசதிகள்

ஜூபிடரில் பெட்ரோல் நிரப்புவதற்கு இருக்கையை திறக்க வேண்டிய அவசியமில்லை. வெளியிலேயே பெட்ரோல் கேப் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஆக்டிவா வசதிகள்

ஆக்டிவா வசதிகள்

ஜூபிடர் அளவுக்கு பெரிய சிறப்பம்சங்கள் லிஸ்ட் ஆக்டிவாவுக்கு இல்லை. ஜூபிடரில் பல்வேறு வசதிகளை தரும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆக்டிவாவில் மிக எளிமையான அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. அதேவேளை, இருக்கைக்கு கீழே 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைக்கும் அறை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஜூபிடரை விட அதிகம். ஆனால், இருக்கைக்கையை திறந்துதான் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்பது சவுகரிய குறைச்சலாக கூறலாம்.

 மேஸ்ட்ரோ - வசதிகள்

மேஸ்ட்ரோ - வசதிகள்

ஆக்டிவா அடிப்படையிலான மாடல் என்பதால் இதிலும் 18 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்களை வைக்கும் அறை இருக்கிறது. மேஸ்ட்ரோவின் மிக முக்கிய அம்சம் அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்பதே. ட்ரிப் மீட்டரும் உள்ளதுடன் பார்க்கவும் அழகாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

பணத்திற்கு மதிப்பு

பணத்திற்கு மதிப்பு

மூன்று ஸ்கூட்டர்களில் சிறப்பம்சங்களின் அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கும்போது ஜூபிடர் கொடுக்கும் பணத்திற்கு கூடுதல் மதிப்புமிக்கதாக கூறலாம். தோற்றம், வசதிகள் என ஜூபிடருக்கு பல சாதகங்கள் இருக்கின்றன. டெலிஸ்கோப்பிக் முன்புற சஸ்பென்ஷனும் கூடுதல் சிறப்பாக கூறலாம். ஆனால்... அடுத்த பக்கத்திற்கு வாருங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

சிறப்பம்சங்களை விட்டு வெளியே வந்து பார்த்தால் மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ் ஆகியவற்றில் ஹோண்டா ஆக்டிவா போட்டியாளர்களை எளிதாக வீழ்த்துகிறது. நாசூக்கான தோற்றம், நம்பகத்தன்மையிலும் ஆக்டிவா வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்றுள்ளதால், பிற இரண்டு ஸ்கூட்டர்களையும் எளிதாக வீழ்த்துகிறது ஆக்டிவா. பிற இரண்டு மாடல்களைவிட விலை சற்று கூடுதலாக இருந்தாலும், ரீ சேல் மதிப்பில் ஹோண்டா ஆக்டிவா கைகொடுத்துவிடும் என்பதையும் மறக்கக்கூடாது.

Most Read Articles
English summary
The launch of a new scooter means buyers have yet another 110cc model to choose from - not that we are complaining, in fact its the contrary. In this post we have slotted the new TVS Jupiter up against other similarly styled models, Honda Activa and Hero Maestro. This guide should come in handy to prospective buyers and help them in making a decision.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X