ஃபார்முலா-1 டிராக்கில் டோணி ஓட்டிய ஹெல்கேட் சூப்பர் பைக் - சிறப்பு பார்வை

கிரிக்கெட்டை எந்தளவு நேசிக்கிறாரோ அந்த அளவுக்கு பைக்குகள் மீது அலாதி பிரியம் வைத்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோணி. கவாஸாகி, ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் என அனைத்து பிரபல நிறுவனங்களின் சூப்பர் பைக்குகளும் டோணியின் கொட்டிலில் கட்டிக் கிடக்கிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய சந்தோஷத்தோடு, நேற்று டெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஃபார்முலா-1 பந்தய களத்துக்கு டோணி அண்ட் கோ விசிட் அடித்தது. அங்கு டோணி, சச்சின் உள்ளிட்ட வீரர்கள் ஃபார்முலா-1 டிராக்கில் பைக் மற்றும் கார்களில் ஒரு ரவுண்ட் அடித்தனர்.

கடந்த ஆண்டு இறக்குமதி செய்து வாங்கிய ஹெல்கேட் சூப்பர் பைக்கை டோணி ஃபார்முலா-1 டிராக்கில் அதிவேகமாக ஓட்டி பார்த்தார். இதற்காகவே, ராஞ்சியிலிருந்து அந்த பைக்கை நொய்டா ஃபார்முலா-1 டிராக்குக்கு கொண்டு வந்தார். பிரத்யேக உடையணிந்து ரேஸ் வீரரை போன்று அதிவேகத்தில் அந்த பைக்கை ஓட்டி தனது ஆசையை தீர்த்துக் கொண்டார். இந்த நிலையில், டோணி நேற்று ஓட்டிய எக்ஸ்132 ஹெல்கேட் பைக் பற்றிய சிறப்பு தகவல்களை காணலாம்.

அமெரிக்கன் பிராண்டு பைக்

அமெரிக்கன் பிராண்டு பைக்

அமெரிக்காவிலுள்ள அலபாமா நகரை சேர்ந்த கான்ஃபடரேட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான் எக்ஸ்132 ஹெல்கேட் சூப்பர் பைக். தற்போது டோணி இறக்குமதி செய்துள்ள ஹெல்கேட் மூன்றாம் தலைமுறையை சேர்ந்தது.

கஸ்டமைசேஷன்

கஸ்டமைசேஷன்

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் போன்றே ஹெல்கேட் பைக்கையும் வாடிக்கையாளர்கள், தங்களது விருப்பம்போல் கூடுதல் அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கி கொள்ளலாம்.

உறுதிமிக்க எஞ்சின் கேஸிங்

உறுதிமிக்க எஞ்சின் கேஸிங்

விமான தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இலகு எடையும், அதிக உறுதியும் கொண்ட அலுமினியத்தில்தான் இதன் எஞ்சின் கேஸிங் தயாரிக்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 2,163சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 132 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்த சுஸுகி ஹயபுசாவை விட இது அதிக வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.ஆனால், அதிகபட்சமாக எவ்வளவு வேகம் ஓட்டினார் என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

குறைந்த வேகம், அதிவேகம் மற்றும் அனைத்து சாலைநிலைகளுக்கு ஏற்ற கஸ்டம் மார்சோஸிர் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

கார்பன் ஃபைபர்

கார்பன் ஃபைபர்

215 கிலோ எடை கொண்டது ஹெல்கேட். இந்த பைக்கின் சக்கரங்கள் அதிக உறுதி கொண்ட கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

எல்இடி லைட்டுகள்

எல்இடி லைட்டுகள்

முன்பக்க ஹெட்லைட்டில் எல்இடி லைட்டுகள் மற்றும் ரன்னிங் லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பின்புறமும் எல்இடி ரன்னிங் விளக்குகள் இருக்கின்றன.

உற்பத்தி

உற்பத்தி

அலபாமா, பெர்மிங்காமில் உள்ள கான்படரேட் தொழிற்சாலையில் ஒரு வாரத்திற்கு 2 எக்ஸ்132 ஹெல்கேட் பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் மிகச் சிறந்த சூப்பர் பைக்குகளில் ஒன்றாக எக்ஸ்132 ஹெல்கேட் கருதப்படுகிறது.

பைக் பிரியர்

பைக் பிரியர்

டோணியிடம் மொத்தம் 11 விலையுயர்ந்த சூப்பர் பைக்குகள் இருக்கின்றன. இதில், சென்னையில் 2 பைக்குகளும், மும்பையில் 2 பைக்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை வரும்போதும், மும்பை செல்லும்போது இந்த பைக்குகளை அவர் பயன்படுத்துகிறார். இதுதவிர, ஹம்மர் உள்பட 9 கார்கள் டோணியிடம் உள்ளது.

ஹெல்கேட் சூப்பர் பைக் - சிறப்பு பார்வை

ஹெல்கேட் சூப்பர் பைக் - சிறப்பு பார்வை

ஹெல்கேட் சூப்பர் பைக் - சிறப்பு பார்வை

ஹெல்கேட் சூப்பர் பைக் - சிறப்பு பார்வை

ஹெல்கேட் சூப்பர் பைக் - சிறப்பு பார்வை

ஹெல்கேட் சூப்பர் பைக் - சிறப்பு பார்வை

ஹெல்கேட் பைக்கை ரூ.28 லட்சம் விலையில் இறக்குமதி செய்து டோணி வாங்கினார்.

Most Read Articles
English summary
Dhoni is the first person in South East Asia to have a X132 Hellcat. It costs him Rs.28 lacs. Here are given some interesting points about the X132 Hellcat super bike.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X