Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

புதிய ஹோண்டா சிஆர்வி பிரிமியம் எஸ்யூவி - சிறப்பு பார்வை

Posted by:
Updated: Wednesday, February 13, 2013, 12:32 [IST]

2003ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் சிஆர்வி எஸ்யூவி காரை ஹோண்டா அறிமுகம் செய்தது. அது முதல் மார்க்கெட்டில் இருக்கும் சிறந்த பிரிமியம் எஸ்யூவி என்ற நன்மதிப்பை சிஆர்வி தக்க வைத்து வருகிறது. இதுவரை 13,700 சிஆர்வி எஸ்யூவி கார்களை இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்துள்ளது. சந்தை போட்டியை மனதில் வைத்து வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது சிஆர்வி எஸ்யூவிக்கு ஹோண்டா புதுப்பொலிவு கொடுத்து வருகிறது.

அந்த வகையில், நேற்று நான்காம் தலைமுறை சிஆர்வி காரை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட மாடலை விட ரூ.2.7 லட்சம் குறைவான விலையில் புதிய சிஆர்வி காரை விற்பனைக்கு கொண்டு வந்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியையும், வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது ஹோண்டா. புதிய சிஆர்வி 2 விதமான பெட்ரோல் மாடல்களில் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய சிஆர்வி டிசைனில் மட்டுமல்ல கூடுதல் வசதிகளுடனும், தொழில்நுட்பத்துடனும் வந்திருக்கிறது. அதுபற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

முகப்பு தோற்றத்தை கூடுதல் வசீகரத்தை கொடுக்கும் வகையில் மாற்றியிருக்கிறது ஹோண்டா. மேலும், 17 இஞ்ச் அலாய் வீல் புதிய சிஆர்விக்கு கூடுதல் கம்பீரத்தை கொடுக்கிறது. டெயில் லேம்ப், பனி விளக்குகள் வடிவமைப்பிலும் மாற்றங்களை செய்துள்ளது ஹோண்டா. இதனால், முன்பைவிட கண்களை கவர்ந்திழுக்கும் டிசைனுடன் வந்திருக்கிறது சிஆர்வி.

எஞ்சின்

இரண்டு பெட்ரோல் எஞ்சின்கள் கொண்டதாக கிடைக்கும். முந்தைய மாடலைவிட இரண்டு எஞ்சின்களுமே அதிக பவரை வெளிப்படுத்தும் வகையில் சிஆர்வி எஞ்சின்கள் டியூனிங் செய்யப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் எஞ்சின் 156 பிஎஸ்(முன்பு 143 பிஎஸ்) பவரையும், 2.4 லிட்டர் எஞ்சின் 190 பிஎஸ்(161பிஎஸ்) பவரையும் வெளிப்படுத்தும்.

டிரான்ஸ்மிஷன்

இரண்டு எஞ்சின் மாடல்களுமே 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் கிடைக்கும். அதேவேளை, 2.4 லிட்டர் கொண்ட மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே கிடைக்கும்.

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் மெக்பர்ஸன் ஸ்டட் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருப்பதால் முந்தைய மாடலைவிட புதிய சிஆர்வி காரில் அதிர்வுகள் குறைந்திருக்கும்.

ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்

சரிவான மலைப்பாதைகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் கார் பின்னோக்கி வருவதை தவிர்க்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் தொழில்நுட்பம் இருக்கிறது.

ஈகான் பட்டன்

அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற வேண்டுமெனில் ஈகான் பொத்தானை அழுத்தினால் போதும். தானாகவே எஞ்சின் செட்டிங் மாறிவிடும்.

இன்ஸ்ட்ரூமென்ட் கன்ட்ரோல்

அனலாக் ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவீட்டு மீட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

கன்ட்ரோல் சுவிட்சுகள்

போன் அழைப்புகளை எடுப்பதற்கு, வால்யூம் கன்ட்ரோல், நேவிகேஷன் சிஸ்டத்தை இயக்குவது போன்ற அனைத்திற்கும் ஸ்டீயரிங் வீலிலேயே கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே

புதிய சிஆர்வி காரில் இன்டலிஜென்ட் மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சின் எடுக்கும் எரிபொருள் அளவு, போனில் வரும் எஸ்எம்எஸ் தகவல்களை இதில் படிக்க முடியும் என்பதோடு, ரியர் வியூ கேமராவுக்கான திரையாகவும் செயல்படும்.

ஹோண்டா சாட்நேவ் சிஸ்டம்

வாய்மொழி உத்தரவுகளுக்கு செவிசாய்க்கும் வசதிகொண்ட சாட்நேவ் வழிகாட்டு சாதனம் பொருத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை வாய்மொழியாக சொன்னாலே இந்த சிஸ்டம் தானாக பதிவு செய்து கொண்டு அதற்கேற்ப தகவல்களை வழங்கும்.

டிவி திரை

சினிமா மற்றும் வீடியோவை பார்க்கும் விதத்தில் இதன் உட்புற கூரை மீது 7 இஞ்ச் திரை ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், வயர்லெஸ் ஹெட்போனும் பின் இருக்கையின் மேலே கூரை மீது இருக்கும் பாக்ஸில் வைக்கப்பட்டிருக்கிறது.

மூன்ரூஃப்

கார் கேபினுக்குள் காற்று வரும் வகையில், திறந்து மூடும் வசதி கொண்ட சிறிய மூன்ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது.

ஹீட்டடு ஃப்ரண்ட் சீட்

காரின் அந்தஸ்தை கூட்டுவதே இதன் லெதர் இருக்கைகளும், அதன் டிசைனும்தான். மேலும், இந்த லெதர் இருக்கைகளை வெப்பப்படுத்திக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

பூட் ரூம்

இதன் பொருட்கள் வைக்கும் பகுதியில் அடிக்கடி எடுக்க தேவையில்லாத பொருட்களை உள்ளே வைத்து மூடிவிட்டு அதன் மேலேயும் பொருட்களை வைக்கும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பின் இருக்கை

சிஆர்வியின் பின் இருக்கையை தேவைக்கேற்ப முழுவதுமாகவோ அல்லது பாதி வரையோ மடக்கிக் கொள்ளும் வசதி கொண்டது.

பாதுகாப்பு அம்சங்கள்

6 காற்றுப் பைகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை புதிய சிஆர்வி கொண்டிருக்கிறது.

பகல் நேர ரன்னிங் விளக்குகள்

புதிய சிஆர்வி காரில் பகல் நேர ரன்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது சாலையில் முன்னே செல்லும் வாகன ஓட்டிகள் கார் வருவதை கண்டறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

சைல்டு சீட் பொருத்தும் வசதி

பின் இருக்கையில் சைல்டு சீட் பொருத்துவதற்கான வசதிகள் இருக்கின்றன.

மைலேஜ்

2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜேயும், 2.4 லிட்டர் எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 12 கிமீ மைலேஜையும் தரும் என ஹோண்டா தெரிவிக்கிறது.

விலை விபரம்

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

2.0 லிட்டர் எம்டி ரூ.19.95 லட்சம்

2.0 லிட்டர் ஏடி ரூ.20.85 லட்சம்

2.4 லிட்டர் ஏடி ரூ.22.40 லட்சம்

2.0 லிட்டர் ஏடி+ஏவிஎன் ரூ.23.85 லட்சம்
(ஏவிஎன்-ஆடியோ, வீடியோ, நேவிகேஷன்)

 

Story first published:  Wednesday, February 13, 2013, 12:20 [IST]
English summary
Honda cars has launched 2013 model CRV premium SUV in Indian market yesterday. Here we take a closer look at all the interesting features that this car offers.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil