புதிய ஃபியட் புன்ட்டோ எவோ: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டாடா மோட்டார்ஸ் உறவை துண்டித்துக் கொண்டு இந்தியாவில் தனியாக கார் வர்த்தகத்தில் இறங்கியுள்ள ஃபியட் நிறுவனம் பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. லீனியா செடான் காரைத் தொடர்ந்து விரைவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய புன்ட்டோ கார் மாடலை புன்ட்டோ எவோ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

தனியாக வர்த்தகத்தில் இறங்கியுள்ள ஃபியட் நிறுவனத்துக்கு புதிய புன்ட்டோ மாடல் மிகவும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்தது. கடும் போட்டி நிறைந்த மார்க்கெட்டில் விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் புதிய புன்ட்டோ காரை சமீபத்தில் டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்தது. போட்டியாளர்களிடம் இருந்து விலகி தனித்துவம் வாய்ந்த டிசைன் கொண்ட புன்ட்டோவை ஃபியட் எவ்வாறு மாற்றியுள்ளது என்பது உள்ளிட்ட டெஸ்ட் டிரைவ் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

டெஸ்ட் டிரைவ் மாடல்

டெஸ்ட் டிரைவ் மாடல்

புன்ட்டோ எவோ டீசல் மாடலின் 90 எச்பி மாடலை டெஸ்ட் டிரைவ் செய்தோம். மும்பை- லோனவாலா இடையில் 150 கிமீ தூரத்துக்கு டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவத்தை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

முன்புற டிசைன்

முன்புற டிசைன்

முந்தைய மாடலைவிட மிக எளிதாக கவர்ந்துவிடும் அம்சங்களுடன் காரின் வெளிப்புறம் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹெட்லைட் டிசைன்தான் புதிய புன்ட்டோ எவோ காருக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளதை சட்டென காட்டுகிறது. தவிரவும், முன்புற கிரில்லில் இருந்த ஃபியட் லோகோ தற்போது மேலே பொருத்தப்பட்டுள்ளது. பனி விளக்குகள் மற்றும் கிரில்லை சுற்றிலும் குரோம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட முகப்பு உயரம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைனில் அதிக மாற்றங்கள் தெரியவில்லை. 90 எச்பி மாடலில் 16 இஞ்ச் அலாய் வீல்கள், டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள், வலுவான கட்டமைப்புடன் கூடிய கதவுகள் போன்றவை முக்கியமாக கூறவேண்டிய அம்சங்களாக உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு தனது சிறப்பான கட்டுமானத் தரத்தை காட்டும் விதத்தில் பல வேலைப்பாடுகளை இந்த காரில் செய்துள்ளது ஃபியட்.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

எல்இடி டெயில் லைட்டுகளுடன் கூடிய புதிய கிளஸ்ட்டர் டிசைன் வசீகரிக்கிறது. கூடுதல் கவர்ச்சிக்காக பின்புற பம்பரில் குரோம் அலங்கார வேலைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த 90 எச்பி மாடலில் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ரியர் வைப்பர் மற்றும் டீஃபாகர் கொடுக்கப்பட்டுள்ளது. காரை பின்புறம் எடுக்கும்போது தானியங்கி முறையில் இவை இயங்குகின்றன.

இன்டிரியர்

இன்டிரியர்

புதிய லீனியா ஃபேஸ்லிஃப்ட் காரின் டேஷ்போர்டுத்தான் புதிய புன்ட்டோ காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. புன்ட்டோ எவோ கார் இரண்டுவிதமான இன்டிரியர் வண்ணங்களில் வருகிறது. படத்தில் இருப்பது போன்ற முழுவதும் கருப்பு நிறத்திலான இன்டிரியர் 90 எச்பி மாடலில் கிடைக்கும். பீயெஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான மற்றொரு இன்டிரயர் கொண்டதாகவும் வருகிறது.

 சென்ட்ரல் கன்சோல்

சென்ட்ரல் கன்சோல்

சென்ட்ரல் கன்சோல் கிளாஸ் பிளாக் ஃபினிஷில் கவர்கிறது. ஆனால், அடிக்கடி துடைத்து சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்பதையும் மறவாதீர். டேஷ்போர்டுக்கு கீழே ஆம்பியன் லைட் செட்டிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. லீனியாவில் சென்ட்ரல் கன்சோலில் இருக்கும் பூட் லிட் சுவிட்ச் இந்த காரில் வழக்கம்போல் இருக்கைக்கு அருகில் மாறியுள்ளது. வாய்மொழி உத்தரவுகளுக்கு இணங்க செயல்படும் மைக்ரோசாஃப்டின் புளூ அண்ட் மீ வசதி புதிய புன்ட்டோ எவோ காரில் உள்ளது.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

இதன் மியூசிக் சிஸ்டம் ஆக்ஸ், யுஎஸ்பி போர்ட்டுகளையும், சிடி மற்றும் எம்பி3 பிளேயர்கள் வசதியையும் கொண்டுள்ளது. ஆனால், புளூடூத் ஸ்ட்ரீமிங் வசதி இல்லாதது குறையே. விளக்குடன் கூடிய கிளவ் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்புற இருக்கைகள்

முன்புற இருக்கைகள்

முன்புற இருக்கைகள் பார்ப்பதற்கும், அமர்ந்து செல்வதற்கும் சிறப்பாக இருக்கின்றன. தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தோற்றமும் பக்கெட் இருக்கைகள் போன்று தெரிகிறது. குஷன் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

 பின்புற இருக்கைகள்

பின்புற இருக்கைகள்

பின்புற இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட் இல்லாமல் 60:40 என்ற விகிதத்தில் மடக்கிக் கொள்ளும் வசதியுடன் இருக்கிறது. 3 பேர் அமர்ந்து செல்லும் வகையில், ஆர்ம் ரெஸ்ட் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இருவர் தாராளமாக அமர்ந்து செல்ல முடியும். கால் வைப்பதற்கான இடவசதி சிறப்பாக இருக்கிறது. ஆனால், மிகச்சிறப்பாக இருப்பதாக கூறமுடியாது. பின்புற பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

முந்தைய மாடலில் இருந்த அதே 90 எச்பி 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சின்தான் புதிய மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. எந்தவித மாற்றங்களும் செய்யாமல் அப்படியே எடுத்து பொருத்தி விட்டனர். இதனால், 2,300 ஆர்பிஎம் வரை டர்போ லேக் இருக்கிறது. டர்போ லேக் எல்லையை தாண்டிவிட்டால் வழக்கம்போல் ஓட்டுனருக்கான கார் மாடலாக வந்துவிடுகிறது. அதன் பிறகு சிறப்பான பெர்ஃபார்மென்சை உணர முடிகிறது. மேலும், எமது கனவு வேகத்தை கடப்பதற்கும் கை கொடுக்கும் கார் மாடலாக இருக்கிறது.

கையாளுமை

கையாளுமை

அனைத்து சாலைகளையும் இதன் சஸ்பென்ஷன் சிறப்பாக சமாளிக்கிறது. எப்போதுமே முன்புற, பின்புற பயணிகளுக்கு நல்ல சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும். இது கொஞ்சம் ஹெவியான கார் என்பதால் சிறப்பான கையாளுமையை எதிர்பார்ப்பதும் தவறு. அதிவேகத்தில் வளைவுகளில் திரும்பும்போது ஸ்டீயரிங்கில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. வளத்தியான கார் என்பதால் வளைவுகளில் பாடி ரோல் ஆகும் வாய்ப்பை உணர முடிகிறது. இதன் பிரேக்குகள் சிறப்பான செயல்திறனை காட்டுகின்றன.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இபிடி., நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் முன்புற ஏர்பேக்குகள், சென்ட்ரல் லாக்கிங், ஆட்டோமேட்டிக் டோர் லாக், 3 பாயிண்ட் இஎல்ஆர் சீட் பெல்ட்டுகள், இம்மொபைலைசர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதை தெரிவிக்கும் வசதி, வெளிப்புற வெப்பநிலையை அறிந்து கொள்ளும் மீட்டர், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் டிரைவர் இருக்கை, சர்வீஸ் ரிமைன்டர், டாக்கோமீட்டடர், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ கண்ணாடிகள், ஆட்டோ டவுன் வசதியுடன் முன்புற, பின்புற பவர் விண்டோ, ரிமோட் கீலெஸ் என்ட்ரி, டில்ட் ஸ்டீயரிங் என வசதிகளின் பட்டியல் நீள்கிறது.

வெற்றி பெறுமா?

வெற்றி பெறுமா?

டிசைன், இன்டிரியர் அம்சங்களில் மேம்பட்டிருக்கிறது. அதேவேளை, போட்டியாளர்களை ஒப்பிடும்போது வசதிகளில் இன்னமும் பின்தங்கியிருக்கிறது. எஞ்சினிலும் மாற்றங்கள் செய்யப்படாமல் களமிறக்கப்பட உள்ளது. எனவே, விற்பனைக்கு பிந்தைய சேவை, விலை நிர்ணயம் போன்ற காரணங்களை கொண்டே இந்த காரின் வெற்றி அமையும்.

பழசு, புதுசு: ஒப்பீடு

பழசு, புதுசு: ஒப்பீடு

விற்பனையிலிருந்து விலகும் முந்தைய மாடலும், விரைவில் விற்பனையில் இணையும் புதிய புன்ட்டோ எவோ மாடலின் ஒப்பீட்டு படத்தை காணலாம். பழைய மாடலைவிட புதிய புன்ட்டோ எவோ காரின் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

Most Read Articles
English summary
Today we are going to talk about the 2014 Fiat Punto Evo driven by us. The Punto that was launched first had unique and flamboyant Italian styling and stood apart from the competition. The hatchback competes in a highly competitive segment against the Volkswagen Polo, Skoda Fabia, Honda Jazz and Hyundai i20.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X