அந்தமான் அழகியான நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சிறப்பு பார்வை

By Saravana

ஹோண்டா சிட்டி ஆதிக்கத்தில் இருந்த மிட்சைஸ் செடான் மார்க்கெட்டில் சத்தமில்லாமல் புகுந்து ஆட்டி பார்த்த பெருமை நிசான் சன்னி காருக்கு உண்டு. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற கார்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் சில மாதங்கள் இருந்து கர்ஜனை செய்தது.

இந்த நிலையில், புளூயிடிக் ஹூண்டாய் வெர்னா, புதிய ஹோண்டா சிட்டி போன்ற கார்களின் வரவால் நிசான் சன்னி மார்க்கெட் கடுமையாக சரிந்தபோனது. இதையடுத்து, கூடுதல் அம்சங்களுடன் நிசான் சன்னி கார் விரைவில் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் மாடல்களை அந்தமான் தீவுகளில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் தளத்துக்கு சமீபத்தில் கிடைத்தது. இந்த புதிய சன்னி மாடலின் சிறப்பம்சங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


நெருக்கடியை சமாளிக்குமா?

நெருக்கடியை சமாளிக்குமா?

போட்டியாளர்களால் எழுந்துள்ள நெருக்கடிகளை போக்கிக் கொள்ளும் விதத்தில் சில மாற்றங்களுடன் சன்னி ஃபேஸ்லிஃப்ட் கார் வருகிறது. இந்த காரின் சில சிறப்பம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பகிர்ந்து கொள்கிறோம்.

முகப்புத் தோற்றம்

முகப்புத் தோற்றம்

முந்தைய மாடலைவிட ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முகப்பு குரோம் பூச்சு கொண்ட பாகங்களால் வசீகரமாக இருக்கிறது. முகப்பு கிரில்லை சுற்றிலும் கெட்டியான குரோம் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. பம்பரின் கம்பீரமும் கூட்டப்பட்டிருக்கிறது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

டியானா காரின் ஹெட்லைட் டிசைனை ஒத்துப் போக செய்யும் வகையில் புதிய ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்டில் இண்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் முகப்பை குரோம் பூச்சு அலங்காரம் ஜொலிக்க வைத்துள்ளது.

புதிய அலாய் வீல்கள்

புதிய அலாய் வீல்கள்

பக்கவாட்டில் பாடி பேனல்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆனால், முந்தைய மாடலில் இருந்த 15 இஞ்ச் அலாய் வீல்களுக்கு பதிலாக புதிய டிசைனிலான 16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

அப்படியே பின்புறமாக வந்தால் சில மாற்றங்களை சட்டென கூறலாம். பின்புற பம்பரில் மாற்றங்கள் உள்ளன. அதேசமயம், போட்டியாளர்களான ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற போட்டியாளர்களுடன் பூனை நடை போட வைத்தால் சன்னி ஃபேஸ்லிஃப்ட் பின்தங்கிவிடும்.

சிவிடி கியர் பாக்ஸ் மாடல்

சிவிடி கியர் பாக்ஸ் மாடல்

நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடல் அந்தமான் தீவு சாலைகளில் அழகாக சென்றது. மிகச்சிறப்பான ஓட்டுதல் சுகத்தையும் வழங்கியதால் பரபரத்து செல்ல மனது வரவில்லை.

சிவிடி மாடல் மைலேஜ்

சிவிடி மாடல் மைலேஜ்

இந்த மாடல் லிட்டருக்கு 17.97 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. மேலும், இந்த காரின் அதிர்வுகள் மற்றும் சப்தம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக நிசான் தெரிவிக்கிறது. அதை ஆமோதிக்கும் விதத்திலேயே மிதந்து செல்கிறது நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலின் எக்ஸ்எல் வேரியண்ட்டை டெஸ்ட் டிரைவ் செய்தோம். தெற்கு அந்தமான் தீவிலிருக்கும் சிடியா தபு என்ற இடத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். அலையாத்தி காடுகளின் மத்தியிலான சாலையும், இயற்கை வனப்பும் மனதை பறிகொடுக்க வைத்தது.

 டீசல் மைலேஜ்

டீசல் மைலேஜ்

சன்னி ஃபேஸ்லிஃப்ட் டீசல் காரின் எஞ்சினின் பெர்ஃபார்மென்ஸும் நம்மை புதிய உலகுக்கு அழைத்துச் சென்றது. இசியூ., எனப்படும் எஞ்சின் கட்டுப்பாட்டு கம்ப்யூட்டரில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் மைலேஜ் சிறப்பாக இருக்கும் என்கிறது நிசான். லிட்டருக்கு 22.71 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றும் வலு சேர்க்கிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இதுவரை விற்பனையில் இருந்து வந்த மாடலைவிட ரூ.40,000 முதல் ரூ.50,000 வரையிலான கூடுதல் விலையில் நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

 யாருக்கு பெஸ்ட்?

யாருக்கு பெஸ்ட்?

அதிக இடவசதியுடன் கூடிய பட்ஜெட் விலையிலான மிட்சைஸ் செடான் காரை விரும்புவோர்க்கு நல்ல சாய்ஸ் நிசான் சன்னி ஃபேஸ்லிஃப்ட். சிவிடி டிரான்ஸ்மிஷன் மாடல் ஓட்டுதல் சுகத்தை வழங்குவதிலும், டீசல் மாடல் மைலேஜை தருவதிலும் முன்னுக்கு நிற்கின்றன.

Most Read Articles
English summary
Japanese Car maker Nissan will launch the 2014 Sunny Facelift in India soon. The 2014 Nissan Sunny remains mechanically unchanged but upgraded in exterior, interior and features. 
Story first published: Wednesday, June 18, 2014, 15:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X