தனி ஒருவன்... ரெனோ க்விட் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ரூ.4 லட்சத்திற்குள் ஆன்ரோடு விலை கொண்ட பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ஹேட்ச்பேக் மாடலை மட்டுமே டிசைன் செய்ய முடியும் என்ற எழுதப்படாத விதியை க்விட் கார் மூலமாக உடைத்தெறிந்துள்ளது ரெனோ. கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து, இப்படியும் ஒரு சிறப்பான தோற்றம் கொண்ட மாடலைத் தரமுடியும் என்று ஜாம்பவான் நிறுவனங்களுக்கு பாடம் போதித்துள்ளது.

ஆம், டிசைன், வசதிகள், எஞ்சின் என அனைத்திலும் போட்டியாளர்களிடத்தில் இருந்து வித்தியாசப்பட்டு தனி ஒருவனாக மார்க்கெட்டில் களம் புகுந்துள்ளது புதிய ரெனோ க்விட் கார். இந்த புத்தம் புதிய காரை சமீபத்தில் கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். இந்த காரை வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தேவையான விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொண்டுள்ளோம்.

டிசைன்

டிசைன்

பட்ஜெட் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் டிசைனை பற்றி அதிகம் எதிர்பார்க்க முடியாது என்ற கருத்தை இந்த கார் மாற்றியிருக்கிறது. உண்மையிலேயே இந்த விலையில் ஓர் நிறைவான டிசைன் கொண்ட கார். தோற்றத்தில் சிறப்பாகவும், வடிவத்தில் சற்று பெரிய காராகவும் இருக்கிறது. அகலமான பானட், அசத்தலான சங்கிலி போன்ற க்ரில் அமைப்பு மற்றும் கம்பீரத்தை தரும் டிசைனிலான ஹெட்லைட், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், எஸ்யூவி கார்கள் போன்று தோற்றமளிக்கும் பிளாஸ்டிக் கிளாடிங்குகள், கச்சிதமான டெயில் லைட் க்ளஸ்ட்டர் என்று அனைத்தும் சிறப்பாக அமையப் பெற்றிருக்கிறது. இந்த காரின் டிசைன் பற்றி ஏற்கனவே பல தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, அதிகம் சொல்லத் தேவையில்லை.

ஏமாற்றம் இருக்காது...

ஏமாற்றம் இருக்காது...

இந்த காரை வர்ணிப்பதைவிட, சட்டென்று உண்மையை சொல்ல வேண்டுமேனில், சில கார்களை படங்களில் பார்க்கும்போது சிறப்பாக இருக்கும். நேரில் சென்று பார்க்கும்போது சப்பென்று ஆகிவிடும். ஆனால், அதுபோன்ற உணர்வை தரவில்லை. எனவே, கண்டிப்பாக, ஷோரூமுக்கு சென்று இந்த காரை நீங்கள் பரிசீலனை செய்யலாம். ஏமாற்றம் தராது.

இன்டிரியர்

இன்டிரியர்

பட்ஜெட் விலை மாடல்தானே என்ற நினைப்புடன் காருக்குள் நுழைந்தால், அந்த எண்ணத்தை உடனே மாற்றி விடுகிறது க்விட். எதிர்பார்த்ததைவிட சிறப்பான இன்டிரியர் டிசைன் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த விலையில் மிகச்சிறப்பானதாகவே கூறலாம். அதுதவிர, டாப் வேரியண்ட்டில் 4 விதங்களில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் டிரைவர் சீட், மூடியுடன் கூடிய க்ளவ் பாக்ஸ், பாட்டில் ஹோல்டர், மிக நாகரீகமான சென்டர் கன்சோல், பவர் சாக்கெட் போன்ற வசதிகள் இருக்கின்றன.

மெர்சலாக்கிய அம்சங்கள்

மெர்சலாக்கிய அம்சங்கள்

முழுவதுமான டிஜிட்டல் மீட்டர் கன்சோல் இந்த செக்மென்ட்டிற்கு புதிது. இந்த செக்மென்ட்டில் முதல்முறையாக 7 இன்ச் டச் ஸ்கிரீன் திரையுன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. புளூடூத், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட் மற்றும் சாட்நவ் வசதிகளை பெற முடிகிறது. பட்ஜெட் செக்மென்ட்டை தாண்டிய கார்களில் மட்டுமே இந்த வசதிகளை பார்க்க முடியும் என்ற விதியையும் நீக்கியிருக்கிறது க்விட்.

இன்டிரியர் குறைகள்

இன்டிரியர் குறைகள்

இவற்றை குறைகளாக கூறுவதற்கில்லை. இந்த விலையில் போதுமான வசதிகளை கொண்டிருக்கிறது. இருப்பினும், வாடிக்கையாளர்கள், வாசகர்களுக்கு தெளிவுப்படுத்தும் விதத்தில் இன்டிரியரில் சில குறைபாடுகளை சுட்டிக் காட்டுவது நலம். பின்புற கதவுகளுக்கு பவர் விண்டோஸ் வசதி இல்லை. பவர் விண்டோஸ் சுவிட்சுகள் சென்டர் கன்சோலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 இடவசதி

இடவசதி

வெளிப்புறத்தில் ஒரு பந்தாவான பட்ஜெட் காராக இருப்பது மட்டுமில்லை. உள்புறத்திலும் சிறப்பான இடவசதி இருக்கிறது. மாருதி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான் கார்கள் போன்று உட்புறத்தில் நெருக்கடியாக இல்லாமல், காருக்குள் நுழைந்தவுடன் அதிக இடவசதி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதற்காக, பெரிய கார்களை மனதில் ஒப்பிட வேண்டாம். முன் இருக்கைகள், பின் இருக்கைகள் மிகச்சிறப்பான இடவசதியுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. உயரமானவர்களுக்கும் போதிய இடவசதியை அளிக்கிறது. பின் இருக்கையில் இரண்டு பெரியவர்கள் அமர்ந்து செல்லலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் அலுமினிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட 3 சிலிண்டர்களுடன் கூடிய புதிய 800சிசி பெட்ரோல் எஞ்சினும், அதனுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் இணைந்து செயல்படுகிறது. இந்த எஞ்சின் ஸ்மார்ட் கன்ட்ரோல் எஃபிசியன்சி சிஸ்டம் கொண்டது. அதிகபட்சமாக 53 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 எஞ்சின் செயல்திறன்

எஞ்சின் செயல்திறன்

இந்த காரின் அலுமினிய பெட்ரோல் எஞ்சின் ஆரம்ப நிலையிலேயே 70 சதவீதத்திற்கும் அதிகமான டார்க்கை வெளிப்படுத்துவதும், விரைவான கியர் ரேஷியோவும் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு மிக எளிமையான காராக இருக்கிறது.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

இந்த காரின் எஞ்சின் சீரான பவர் டெலிவிரியை ஆரம்ப நிலையிலிருந்து வழங்குவதும், இலகுவான ஸ்டீயரிங்கும் ஓட்டுனருக்கு சுகத்தையும், மனதிற்கு உற்சாகத்தையும் அளிக்கிறது. வெறும் 660 கிலோ எடையும், அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ் மற்றும் 13 இன்ச் வீல் கொடுக்கப்பட்டிருப்பதும், இந்த கார் அதிவேகங்களில் பாடி ரோல் அதிகம் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், பாடி ரோல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. க்ளட்ச் பெடலும், கியர்பாக்ஸும் மென்மையான உணர்வை தருகிறது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது. குறைவான தூரமே டெஸ்ட் செய்ததால், சரியான மைலேஜ் விபரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், நடைமுறையில் லிட்டருக்கு 18 கிமீ முதல் 20 கிமீ வரை மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் சிஸ்டம்

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் சிஸ்டம்

முன்புறத்தில் மெக்பெர்ஷன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங்குடன் கூடிய ட்விஸ்ட் பீம் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சாஃப்ட் சஸ்பென்ஷனாக கொடுக்கப்பட்டிருப்பதால், சொகுசாக தெரிகிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் டிரம் பிரேக் சிஸ்டமும் இருக்கிறது. ரெனோ க்விட்டை வேகத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்கு சிறப்பாக இருக்கிறது இதன் பிரேக் சிஸ்டம்.

பூட்ரூம்

பூட்ரூம்

இந்த காரின் மற்றொரு மிக முக்கிய சிறப்பம்சம் அதிக பொருட்களை வைப்பதற்கு ஏதுவான பூட் ரூம். ஆம். 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இருக்கிறது. இதன்மூலம், சிறிய குடும்பத்தினரின் வெளியூர் பயணங்களை மிக கச்சிதமாக எதிர்கொள்ளும் என்று கூறலாம். பூட் ரூம் வசதியில் போட்டியாளர்கள் க்விட் அருகில் நெருங்க முடியாது என்பது உண்மை.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஆர்எக்ஸ்டி டாப் வேரியண்ட்டில் ஓட்டுனருக்கான ஏர்பேக் மட்டும் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகிறது. மேலும், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் இல்லை என்தை மனதில் வைக்க வேண்டும். தற்போதைய இந்திய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு அம்சங்களை க்விட் கொண்டிருப்பதாக ரெனோ தெரிவிக்கிறது.

பிடித்த விஷயங்கள்

பிடித்த விஷயங்கள்

  • அதிக இடவசதி
  • அதிக மைலேஜ்
  • ரிமோட் கீலெஸ் என்ட்ரி
  • ஓட்டுனருக்கான ஏர்பேக்
  • அதிக கிரவுண்ட் கிளிரயன்ஸ்
  • சிறப்பான கையாளுமை
  • 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம்
  • டிஜிட்டல் மீட்டர் கன்சோல்
  • 7 இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • சில குறைகள்

    சில குறைகள்

    • பிளாஸ்டிக் சைடு மிரர்கள்
    • டாக்கோமீட்டர் இல்லை
    • அதிர்வுகள் அதிகம்
    • ஸ்டீயரிங் வீல் அட்ஜெஸ்ட் வசதி இல்லை
    • 3 நட்டுகள் கொண்ட சக்கரம்
    •  தர மதிப்பீடு

      தர மதிப்பீடு

      ரெனோ க்விட் காரின் தர மதிப்பீடு!

      டிரைவ்ஸ்பார்க் பரிந்துரை

      டிரைவ்ஸ்பார்க் பரிந்துரை

      டிசைன், வசதிகள், இடவசதி, 300 லிட்டர் பூட்ரூம், மிகக் குறைவான பட்ஜெட் கொண்ட கார் என்று அனைத்து விஷயங்களிலும் போட்டியாளர்களை விஞ்சி நிற்கிறது ரெனோ க்விட் கார். எனவே, கண்டிப்பா பரிசீலனை செய்யலாம்.

      ஒரேயொரு தயக்கம்...

      ஒரேயொரு தயக்கம்...

      அதேநேரத்தில், ரெனோ கார் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் உதிரிபாகங்கள் சப்ளை போன்ற விஷயங்களில் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது. காரை வாங்கிக் கொண்டு அவஸ்தை படும் நிலை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில், இதுபோன்ற பட்ஜெட் கார்களுக்கு மிக வலுவான சர்வீஸ் நெட்வொர்க் தேவை. அதையெல்லாம் தாண்டியும் எங்களுக்கு இது சிறப்பான சாய்ஸ் என்றே கூறத் தோன்றுகிறது. முதல்முறை கார் வாங்குவோர்க்கும், எஸ்யூவி ஸ்டைல் கார்களை விரும்புவோர்க்கும் மிகச்சிறப்பான சாய்ஸ் ரெனோ க்விட் கார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

      ரெனோ க்விட் டெஸ்ட் டிரைவ்

      ரெனோ க்விட் டெஸ்ட் டிரைவ்

      டெஸ்ட் டிரைவ்: ஜோபோ குருவில்லா

      ஜோபோ ஃபேஸ்புக் பக்கம்

      ஜோபோ டுவிட்டர் பக்கம்

      தமிழில் எழுத்தாக்கம்: சரவணராஜன்

Most Read Articles
English summary
Renault India has recorded a worrying 52% decline in the August 2015 sales. This decline is despite a 3.3% increase in the passenger vehicle sales. Renault's new Kwid on the block could just be what the doctor ordered to ward off challenges from Maruti and Hyundai. For us, the Kwid is modernistic, innovative, affordable, and trumps the Maruti Alto 800 on all counts. India, my darling, what is your take?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X