நம்ம பட்ஜெட்டில் டீசல் ஆட்டோமேட்டிக் கார்கள்!

By Saravana

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பெட்ரோல் மாடல்களில் மட்டும் என்றில்லாமல் தற்போது டீசல் மாடல்களிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.சிறப்பான மைலேஜ், மேம்பட்ட தொழில்நுட்பம் போன்றவை காரணமாக தற்போது டீசல் ஆட்டோமேட்டிக் கார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

அந்த வகையில், பரிசீலிக்கக்கூடிய விலையிலான டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கி வருகின்றன. குறைவான விலையில் டீசல் ஆட்டோமேட்டிக் கார் மாடல் என்ற பெயருடன் ஒற்றை ஆளாக இருந்த ஹூண்டாய் வெர்னாவுக்கு போட்டியாக சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களின் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்கள் களமிறங்கி உள்ளன.

தவிர, முழுமையாக ஆட்டோமேட்டிக் காராக கூற முடியாவிட்டாலும், கிளட்ச் பெடல் இல்லாமல் ஆட்டோமேட்டிக் காரின் அனுபவத்தை தரும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் டாடா ஸெஸ்ட் காரும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கிறது. ஹூண்டாய் வெர்னாவில் சாதாரண வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களில் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும், டாடா ஸெஸ்ட் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் வகையிலும் கிடைக்கின்றன.

ஒவ்வொன்றின் தொழில்நுட்பம், செயல்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், விலை அடிப்படையில் இந்த 4 கார் மாடல்களும் தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான டீசல் ஆட்டோமேட்டிக் கார் மாடல்களாக கூறலாம். எனவே, இந்த கார்களை நேரடியாக வைத்து ஒப்பிட முடியாது என்பதால் சிறப்பம்சங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.


விபரங்கள்

விபரங்கள்

ஒவ்வொரு காரின் விபரங்களும் தலா இரண்டு ஸ்லைடுகளில் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா காரில் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைந்து செயல்புரிகிறது. இந்த எஞ்சின் 127 பிஎச்பி பவரையும், 260என்எம் டார்க்கையும் வழங்குவதாக இருக்கிறது. பட்டியலில் இடம்பெற்றுள்ள 4 கார் மாடல்களில் அதிக பவரை அளிக்கும் எஞ்சின் கொண்ட மாடல் வெர்னாதான். இது 5.2 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டது.

வெர்னா மைலேஜ்

வெர்னா மைலேஜ்

டீசல் கார்களை விரும்புவதற்கு மைலேஜும் அடிப்படை காரணம். இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 4 மாடல்களில் குறைவான மைலேஜ் தரும் மாடல் வெர்னாதான். வெர்னா டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17.51 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பான வசதிகள், டிசைன் போன்றவையும் ப்ளஸ் பாயிண்ட்டுகளாக கூறலாம். ரூ.10.47 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் டீசல் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மாடல் சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட வென்ட்டோவில் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. வென்ட்டோவின் எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும். மிக நவீன தொழில்நுட்பத்திலான இந்த வகை கியர்பாக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மிக மென்மையான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மாடல்கள் அதிக மைலேஜ் தரும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

 வென்ட்டோ மைலேஜ்

வென்ட்டோ மைலேஜ்

ஹூண்டாய் வெர்னாவுடன் ஒப்பிடும்போது வென்ட்டோவின் மைலேஜ் அதிகம். லிட்டருக்கு 21.21 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட மாடலாக குறிப்பிடலாம். 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. சிறப்பான கட்டுமானம் தரம் கொண்ட மாடலாக கூறலாம். இது 5.4 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டது. ரூ.10.49 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட்

வென்ட்டோ காரில் இருக்கும் அதே எஞ்சின் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. பவர் மற்றும் டார்க்கும் ஒன்றே. ஆனால், ரேபிட் கார் நீள, உயரத்தில் சில மிமீ.,கள் அதிகம். டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட இந்த கார் வாடிக்கையாளர்களுக்கு புதுவித ஓட்டுதல் சுகத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

ரேபிட் மைலேஜ்

ரேபிட் மைலேஜ்

வென்ட்டோவின் எஞ்சின், கியர்பாக்ஸை பங்கிட்டுக் கொண்டாலும், மைலேஜில் ரேபிட் சிறிது முன்னிலை பெறுகிறது. ரேபிட் கார் லிட்டருக்கு 21.66 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 5.3 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டது. வெர்னா, வெனட்டோ மற்றும் ரேபிட் கார்களின் விலைக்கு இடையில் அதிக வித்தியாசங்கள் இல்லை. ரேபிட் கார் ரூ.10.49 லட்சம் விலையிலேயே கிடைக்கிறது.

டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட்

இதுவரை பார்த்த 3 ஆட்டோமேட்டிக் கார்களிலிருந்து வேறுபாடுகள் அதிகம் கொண்ட மாடல். இருப்பினும் ஆட்டோமேட்டிக் கார்களுக்கு இணையான அனுபவத்தை தரும் மாடலாக இருப்பதால் இங்கு இடம்பெறுகிறது. பிற மாடல்கள் மிட்சைஸ் செடான் கார்களாக இருக்கும் நிலையில், இது காம்பேக்ட் செடான் கார் ரகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் அளிக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

டாடா ஸெஸ்ட் ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த காரில் 44 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது. 5.1 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டது. ரூ.6.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

 எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் கார்களின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்துடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தை ஒப்பிட முடியாது. இருந்தாலும் குறைவான விலையில் டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் காரை வாங்க விரும்புவோர்க்கு டாடா ஸெஸ்ட்தான் ஒரே சாய்ஸ். ஓர் சிறந்த ஆட்டோமேட்டிக் மாடலை வாங்க விரும்புவோருக்கு ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ பெஸ்ட் சாய்ஸ். ஆனால், சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க், சிறப்பு வசதிகள், டிசைன் போன்றவற்றில் ஹூண்டாய் வெர்னா முன்னிலை பெறுகிறது. ஆனால், ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதை நினைவில் கொள்க.

Most Read Articles
English summary
Here is the list of affordable diesel automatic cars in India. Have a look.
Story first published: Wednesday, November 26, 2014, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X