டாடா டியாகோ Vs செலிரியோ Vs வேகன் ஆர்.... ஆட்டோமேடிக் கியர் கார்களின் ராஜா யார்?

Written by: Meena

ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் வசதிகள் எல்லாம் ஒரு காலத்தில் லக்ஸரி மாடல் கார்களிலும், சொகுசு கார்களிலும்தான் இருந்து வந்தன.

இப்போது ஏ-செக்மெண்ட் கார்களிலும் அந்த வசதிகள் வந்துவிட்டன. மாருதி செலிரியோ மாடலில் அது முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களிடம் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கன் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து வேகன் ஆர் மாடலிலும் அந்த வசதி கொண்டு வரப்பட்டது.

சமீபத்தில் டாடா டியாகோ மாடலிலும் அந்த ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடல்களுக்கும் இடையேயான சிறிய ஒப்பீடைப் பார்ப்போம்...

டிசைனை எடுத்துக் கொண்டால் டியாகோ மாடல் பிரீமியம் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பு கிரில் டிசைன் ஆகியவை ஸ்டைலான தோற்றத்தைத் தருகிறது.

மாருதி செலிரியோவைப் பொருத்தவரை பக்கா பாக்ஸி டைப் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதைத்தவிர முகப்பு விளக்குள் மற்றும் பின்புற விளக்குகள் (டெய்ல் லேபம்ஸ்) ஆகியவை வித்தியாசமான டிசைனில் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

வேகன் ஆர் டிசைன் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. பாக்ஸ் வடிவ டிசைன்தான் இதிலும் உள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஈர்த்த வடிவமைப்பு இது. குடும்பத்துடன் பயணிப்பதற்கான விலாசமான கேபின் வசதியுடன் இருப்பதால் இந்த மாடல் ஹிட்டடித்தது.

இன்டீரியர் டிசைன் டியாகோ மாடலில் படு கிளாஸாக உள்ளது. ஸ்டியரிங்கின் நேர்த்தியான வடிவமைப்பு, ஏசி, டேஷ்போர்டு ஆகியவற்றின் ஸ்டைலான லுக் ஆகியவை ஈர்க்கும் வகையி்ல் உள்ளன.

செலிரியோ மற்றும் வேகன் ஆர் மாடல்களில் டபுள் கலர் இன்டீரியர் ஆப்ஷன்கள் உள்ளன. அது பார்க்க செம ரிச்சான லுக்கைத் தருகின்றன. குறிப்பாக வேகன் ஆர் மாடலில் ஏசி மற்றும் கியர் பாக்ஸ் ஆகியவை வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் டிசைனைப் பொருத்தவரை டியாகோ மாடல் 10-க்கு 8 மதிப்பெண்களையும், செலிரியோ மற்றும் வேகன் ஆர் ஆகியவை தலா 7.5 மதிப்பெண்களையும் பெறுகின்றன.

எஞ்சின் மற்றும் கியர்கள்....

டாடா டியாகோ - 1.2 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின், 84 பிஎச்பி திறன், 115 என்எம் டார்க்

மாருதி செலிரியோ - 1.0 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின், 67 பிஎச்பி திறன், 90 என்எம் டார்க்

மாருதி வேகன் ஆர் - 1.0 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின், 67 பிஎச்பி திறன், 90 என்எம்

இந்த மூன்று மாடல்களிலும் 5 கியர்கள் உள்ளன. இதை வைத்துக் கணக்கிட்டால் எஞ்சின் செயல் திறனில் டியாகோ 8 மதிப்பெண்களும், மீதமுள்ள இரு மாடல்களும் தலா 7.5 மதிப்பெண்களும் பெறுகின்றன.

இதைத் தவிர சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், 2 ஏர் பேக்-கள், சென்டரல் லாக் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, புளூடுத் வசதி, பவர் விண்டோஸ் ஆகியவை அந்த மாடல்களில் உள்ளன.

விலை....

டாடா டியாகோ (ஆட்டோமேடிக் கியர்) - ரூ.4 லட்சம் - ரூ.5.5 லட்சம்

மாருதி செலிரியோ (ஆட்டோமேடிக் கியர்) - ரூ.4.5 லட்சம் - ரூ.5.23 லட்சம்

மாருதி வேகன் ஆர் (ஆட்டோமேடிக் கியர்) - ரூ.4.84 லட்சம் - ரூ.5.17 லட்சம்


மொத்தத்தில் டியாகோ மற்ற இரு மாடல்களைக் காட்டிலும் எந்த வகையில் சளைத்தது அல்ல. அதே நேரத்தில், மாருதியின் செலிரியோ மற்றும் வேகன் ஆர் மாடல்களைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், மறு விற்பனை (ரீ சேல் வேல்யூ) மதிப்பும் அதிகமாக உள்ளன.

எனவே டாடா டியாகோ மாருதியின் விற்பனையை முறியடிக்க வேண்டுமென்றால், வாடிக்கையாளர்களின் உள்ளங்களைக் கொள்ளையடிக்க வேண்டும். அதற்கு நிறைய அதிரடி அறவிப்புகளையும், அட்ராக்டிவ் வசதிகளையும் வழங்க வேண்டும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Sunday, July 10, 2016, 9:39 [IST]
English summary
AMT Faceoff — Tiago AMT vs Celerio AMT vs WagonR AMT Comparison.
Please Wait while comments are loading...

Latest Photos