தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற இந்தியாவின் டாப் - 5 பிக்கப் டிரக்குகள்!

By Saravana

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தனி நபர் பயன்பாட்டில் பிக்கப் டிரக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பிக்கப் டிரக்குகள் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிலேயே இருந்து வருகிறது.

சாகச பயணங்கள் மற்றும் பொழுதுபோக்கு பயணங்களுக்காக தற்போது இந்தியாவிலும் பிக்கப் டிரக்குகளை தனி நபர் பயன்பாட்டுக்கு வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தநிலையில், இந்தியாவில் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற 5 பிக்கப் டிரக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. இசுஸூ டி- மேக்ஸ் வி க்ராஸ்

01. இசுஸூ டி- மேக்ஸ் வி க்ராஸ்

இந்திய மார்க்கெட்டுடன் நீண்ட கால வர்த்தக தொடர்பை கொண்டிருக்கும் இசுஸு நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பு. அம்பாசடர், கான்டெஸ்ஸா கார்களில் இசுஸு எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் சொகுசு கார்களுக்கு இணையாக பார்க்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அந்தளவு சிறப்பான எஞ்சினுடன் வருகை தந்திருக்கும் இசுஸு தயாரிப்புகளில் ஒன்றுதான் டி- மேக்ஸ் பிக்கப் டிரக்.மார்க்கெட்டில் இருக்கும் பிரிமியம் பிக்கப் டிரக் மாடல்களில் ஒன்று. இதன் டபுள் கேபின் கொண்ட வி க்ராஸ் மாடல் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.

பிரிமியம் மாடல்

பிரிமியம் மாடல்

இந்த மாடலில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் உள்பட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த பிக்கப் டிரக்கில் 134 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும் டீசல் எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பிக்கப் டிரக்கில், ஷிஃப்ட் ஃப்ளை ஆன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. ரூ.12.31 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

02. மஹிந்திரா இம்பீரியோ

02. மஹிந்திரா இம்பீரியோ

இசுஸூ டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் வந்தவுடனையே மஹிந்திராவும் இம்பீரியோ என்ற புதிய பிக்கப் டிரக்கை சமீபத்தில் அறிமுகம் செய்தது. சற்றே பிரிமியம் அம்சங்களுடன் புதிய வடிவமைப்பில் வந்திருக்கும் இந்த பிக்கப் டிரக் சிங்கிள் மற்றும் டபுள் கேபின் வசதி கொண்டதாக கிடைக்கிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த பிக்கப் டிரக்கில் 75 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த வாகனமும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. லிட்டருக்கு 13.35 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.6.60 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

03. மஹிந்திரா பொலிரோ கேம்பர்

03. மஹிந்திரா பொலிரோ கேம்பர்

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியின் பிக்கப் டிரக் மாடல்தான் இது. அதிகபட்சமாக 6 பேர் பயணிக்கும் இருக்கை வசதியுடன் கிடைக்கிறது. எந்தவொரு சாலையிலும் செலுத்தும் சிறப்பான கட்டமைப்பை பெற்றிருக்கிறது. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட மாடலாகவும் இருக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த பொலிரோ கேம்பர் பிக்கப் டிரக்கில் 62 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த பிக்கப் டிரக்கில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாக, அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் ஆற்றல் கடத்தப்படுகிறது. லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் தரும் என்று மஹிந்திரா தெரிவிக்கிறது. ரூ.6.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

04. டாடா ஸினான் எக்ஸ்டி

04. டாடா ஸினான் எக்ஸ்டி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறப்பான கட்டமைப்பு கொண்ட பிக்கப் டிரக் மாடல். இதன் டபுள் கேபின் கொண்ட மாடல் தனி நபர் பயன்பாட்டுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த பிக்கப் டிரக்கில் 260 கிலோ எடையுடைய பொருட்களை பின்னால் உள்ள கேரியரில் வைத்து எடுத்துச் செல்லலாம்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

டாடா ஸினான் பிக்கப் டிரக்கில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும். அனைத்து சக்கரங்களுக்கும் பவரை கடத்தும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. ரூ.9.96 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

05. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கேட்வே

05. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கேட்வே

இந்தியாவின் தனிநபர் பயன்பாட்டு பிக்கப் டிரக் செக்மென்ட்டில் பிரபலமான மாடல் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கேட்வே. 5 பேர் பயணிக்கும் இருக்கை வசதி மற்றும் பொருட்களுக்கான இடவசதி கொண்டது. சாகச பயணங்களுக்கு மிகச்சிறப்பான மாடலாகவும் விளங்குகிறது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த பிக்கப் டிரக்கில் இருக்கும் 115 பிஎச்பி பவரையும், 277 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. ஏசி வசதியும் உண்டு. ரூ.8.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #ரிவியூ #car review #review
English summary
Best 5 Pick-Up Trucks For Personal Use In India
Story first published: Thursday, June 2, 2016, 16:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X