காம்பேக்ட் செடான் கார்களில் எது பெஸ்ட்? சிறப்பம்சங்கள் பார்வை

காம்பேக்ட் செடான் கார்களுக்கான வரவேற்பும், வர்த்தகமும் பல கார் நிறுவனங்களை இந்த மார்க்கெட்டிற்கு இழுத்து வந்து விடுகின்றன. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வடிவமைக்கப்படும் காம்பேக்ட் செடான் கார்கள், ஹேட்ச்பேக் கார்களைவிட சிறந்த இடவசதி, வசதிகள் மற்றும் விலையில் கிடைப்பதே வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன.

இந்த மார்க்கெட்டில் டாடா இண்டிகோ இசிஎஸ்தான் முதல் மாடல் என்றாலும், டிசையர் மூலம் மாருதி புதிய டிரென்ட்டை உருவாக்கி காட்டியது. இதன் பின்தான் இந்த மார்க்கெட்டிற்கான மவுசு ஏகத்துக்கும் கூடியது. இதைத்தொடர்ந்து, ஹோண்டா அமேஸ் காரும் வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை பார்த்து சுறுசுறுப்பான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் எக்ஸ்சென்ட் காரை விட்டு தனது மார்க்கெட்டை சரிப்படுத்திக் கொண்டது.

இந்த மார்க்கெட்டில் பிள்ளையார் சுழி போட்டு வேடிக்கை பார்ப்பதா என்ற ஆதங்கத்துடன் தீவிரமான முயற்சிகளுக்கு பின்னர் ஸெஸ்ட் காரை டாடா மோட்டார்ஸ் களமிறக்கியுள்ளது. துவக்கத்தில் சுமாராக இருந்த டாடா ஸெஸ்ட் விற்பனை மெல்ல சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதாவது, அமேஸை ஓரம் கட்டும் அளவுக்கு சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இந்தநிலையில், காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களிடையே தேர்வு செய்வதற்கு கையில் எடுக்கும் 4 முக்கிய மாடல்களின் சில சாதக, பாதகங்களை ஸ்லைடரில் காணலாம்.

தொகுப்பு

தொகுப்பு

பட்டியலில் அராய் மைலேஜ் விபரம் மற்றும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்க.

 ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ்

காம்பேக்ட் செடான் காரை ஒரு முழு செடான் கார் போன்ற உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்துடன் டிசைன் செய்து அசத்தியுள்ளது ஹோண்டா. இதன் டீசல் மாடல் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜ் தரும் என்ற பலமும் ஹோண்டா அமேஸ் கார் மார்க்கெட்டில் இன்ஸ்டன்ட் ஹிட்டடிக்க காரணமாக அமைந்தது. பின் இருக்கையில் மிகச்சிறப்பான இடவசதியுன், மிக அதிக பூட் ரூம் கொண்ட கார் மாடல் என்ற பெருமையும் அமேஸை தூக்கி பிடித்தன. போதுமான வசதிகளுடன் பெட்ரோல் மாடல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.

ஹோண்டா அமேஸ் - பாதகங்கள்

ஹோண்டா அமேஸ் - பாதகங்கள்

அடிப்படை டிசைனிலான கவர்ச்சியற்ற டேஷ்போர்டு, அதிர்வுகள் அதிகம் கொண்ட டீசல் எஞ்சின், அதிவேகத்தில் சரியான ஃபீட்பேக் தராத ஸ்டீயரிங் வீல் போன்றவை இந்த காரின் சில குறைகளாக கூறலாம்.

ஆரம்ப விலை: ரூ.5.05 லட்சம்

மைலேஜ்: பெட்ரோல் 18கிமீ/லி, டீசல் 25.8கிமீ/லி

ஹோண்டா அமேஸ் முழு விபரம்

 மாருதி சுஸுகி டிசையர்

மாருதி சுஸுகி டிசையர்

எத்தனை புதிய மாடல்கள் வேண்டுமானாலும் வந்துகொள்ளட்டும், கவலை எனக்கில்லை என்று மாதாமாதம் தனது விற்பனை மூலம் தனது பலத்தை போட்டியாளர்களுக்கு எடுத்துக் காட்டி வருகிறது மாருதி டிசையர். சிறந்த மைலேஜ் தரும் எஞ்சின், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு எளிதான கார் மாடல். மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் கட்டமைப்பு உள்ளிட்ட பல ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. பெட்ரோல் எஞ்சின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.

 டிசையர் - பாதகங்கள்

டிசையர் - பாதகங்கள்

கத்தரி போட்ட பின்னர் ஃபினிஷ் செய்யாதது போன்று தோற்றமளிக்கும் பின்புற பூட் ரூம் டிசைன், அமேஸ் கார் அளவுக்கு போதிய இடவசதி இல்லாதது, நிறுத்துதல் திறன் குறைவாக தெரியும் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை குறைகளாக தெரிகிறது.

ஆரம்ப விலை: ரூ.4.92 லட்சம்

மைலேஜ்: பெட்ரோல் 19கிமி/லி, டீசல் 23.4கிமீ/லி

மாருதி டிசையர் முழு விபரம்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

சாதகங்கள்

சிறப்பான டிசைன், சிறந்த ஹெட்ரூம், லெக்ரூம் இடவசதி, 407 லிட்டர் பூட்ரூம் வசதி, சிறந்த கட்டுமான தரம், இன்டிரியர், ஏராளமான வசதிகள், ஹூண்டாய் சர்வீஸ் நெட்வோர்க் போன்றவற்றை கூறலாம். ஹோண்டா அமேஸ் காருக்கு அடுத்து சிறந்த மைலேஜ் தரும் காராக இதனை குறிப்பிடலாம்.

எக்ஸ்சென்ட் - பாதகங்கள்

எக்ஸ்சென்ட் - பாதகங்கள்

போட்டியாளர்களை ஒப்பிடும்போது டீசல் எஞ்சின் பவர் குறைவு. 4 பேர் மட்டுமே சவுகரியமாக பயணிக்க முடியும். போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது கையாளுமையிலும் பின்தங்குகிறது.

ஆரம்ப விலை: ரூ.4.66 லட்சம்

மைலேஜ்: பெட்ரோல் 19.1 கிமீ/லி, டீசல் 24.4கிமீ/லி

ஹூண்டயாய் எக்ஸ்சென்ட் முழு விபரம்

 டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட்

சாதகங்கள்

ஹோண்டா அமேஸ் காருக்கு அடுத்து சிறப்பான டிசைன் கொண்ட மாடல். 5 பேர் பயணிப்பதற்கு போதுமான இடவசதி கொண்ட மாடல் என்பதுடன், ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது. இதில், ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. கேபினுக்குள் சப்தம் மிக குறைவாக இருக்கும். மாருதி டிசையரில் செயல்புரியும் அதே நம்பகத்தன்மை வாய்ந்த 1.3லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஏஎம்டி கியர்பாக்ஸ். டீசல் மாடலில் குறைவான விலை கொண்ட ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் இதுதான். இந்த மாடலுக்குத்தான் வரவேற்பும் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட குறைவான விலை.

ஸெஸ்ட் - பாதகங்கள்

ஸெஸ்ட் - பாதகங்கள்

வீல் ஆர்ச்சுகளால் பூட் ரூமில் போதுமான இடவசதி இல்லை. டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி இல்லை. டேஷ்போர்டு உயரமாக அமைக்கப்பட்டிருப்பதால், உயரம் குறைவானர்கள் சாலை பார்த்து ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கலாம். டாடா மோட்டார்ஸ் கார்கள் தரத்தின் மீதான முத்திரை, சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் தட்டுப்பாடு போன்றவையும் டாடா ஸெஸ்ட் காரை தேர்வு செய்வதில் வாடிக்கையாளர்களுக்கு தயக்கம் இருக்கிறது.

ஆரம்ப விலை: ரூ.4.64 லட்சம்

மைலேஜ்: பெட்ரோல் 17.6கிமீ/லி, டீசல் 23கிமீ/லி

டாடா ஸெஸ்ட் முழு விபரம்

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு விதத்தில் தனிச்சிறப்புகளை கொண்டவை. இதில், டிசைனை பொறுத்தவரை ஹோண்டா அமேஸ், டாடா ஸெஸ்ட் டிசைனில் சிறப்பான மாடல்கள். வசதிகளை பொறுத்தவரையில், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் டாடா ஸெஸ்ட் முன்னிலை பெறுகின்றன. நம்பகத்தன்மை வாய்ந்த அதிர்வுகள் குறைவான 1.3 லிட்டர் பியட் டீசல் எஞ்சின், மிகச்சரியான விலை என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சாய்ஸ் டாடா ஸெஸ்ட் என்று கூறலாம். டீசல் மாடலின் ஏஎம்டி மாடலில் கிடைப்பதும் இந்த காரை தேர்வு செய்வதற்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சம். அதேவேளை, டாடா மோட்டார்ஸ் சர்வீஸ் நிலைமையையும் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் இந்த தேர்வு மாறக்கூடும்.

Most Read Articles
English summary
Following is a comparison of all compact sedans in India based on features, specifications, mileage and price.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X