செவர்லே என்ஜாய் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

எம்பிவி கார் செக்மென்ட்டில் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு கார் மாடல் இருப்பது அவசியமாகியுள்ளது. எதிர்கால சந்தை பங்களிப்புக்கு எம்பிவி முக்கியமானதாக இருக்கும் என்று கருதிய ஜெனரல் மோட்டாரஸ் சமீபத்தில் செவர்லே பிராண்டில் என்ஜாய் என்ற புதிய எம்பிவி காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் மிகச் சரியான விலையில் இந்த புதிய பன்முக பயன்பாட்டு வாகனத்தை களமிறக்கியுள்ளது. எம்பிவி மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியாளராக களமிறங்கியிருக்கும் புதிய செவர்லே என்ஜாய் எம்பிவி காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்

தோற்றம்

சிறந்த அழகியல் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரின் முகப்பு வசீகரமாக உள்ளது. குரோம் பட்டைகளுடன் கூடிய முகப்பு கிரில்லில் செவர்லே சின்னம் நடு நாயகமாக வீற்றிருக்கிறது. ஜூவல் எஃபெக்ட் ஹெட்லைட், இலை போன்ற பனி விளக்குகள், ஏர்டேம் ஆகியவையும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. ஆனால், பின்புற தோற்றம் குறிப்பிடும்படி இல்லை.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 104 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் எஞ்சினுடனும், டீசல் மாடல் 77 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் எஞ்சினுடனும் கிடைக்கும்.

வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் தலா 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

வெல்வெட் ரெட், சுவிட்ச்பிளேடு சில்வர், சம்மிட் ஒயிட், கேவியர் பிளாக், லினென் பீஜ் மற்றும் சான்ட்ரிஃப்ட் கிரே ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

 இடவசதி

இடவசதி

அதிக இடவசதியை அளிக்கும் விதத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று வரிசை இருக்கைகளிலும் போதுமான இடவசதியை கொடுக்கும் வகையில், ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. குறிப்பாக, ஹெட்ரூம் சிறப்பாக இருக்கும்.

 உள்ளலங்காரம்

உள்ளலங்காரம்

பனரோமிக் தோற்றத்தை கொண்டதாக டேஷ்போர்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.மர வேலைப்பாடுகளுடன் கூடிய ஏசி வென்ட்டுகள், டோர் டிரிம் அழகியலை மேம்படுத்தும் அம்சங்களாக இருக்கின்றன.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் மூன்று டயல்களை கொண்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனலும் வசீகரமாக இருக்கிறது. நீல வண்ண பின்னணி கொண்ட இரவு நேர இன்ஸ்ட்ரூமென்ட் பேனலின் ஒளி உமிழ்வு கண்களை உறுத்தாத வகையில் இருக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த புதிய எம்பிவி கார் 8 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. பெஞ்ச் இருக்கைகள் கொண்ட பேஸ் வேரியண்ட்கள் 8 சீட்டர் மாடலிலும், கேப்டன் சீட் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் 7 பேர் செல்லும் வசதியை கொண்டதாக இருக்கின்றன.

பொருட்கள் வைப்பதற்கான வசதி

பொருட்கள் வைப்பதற்கான வசதி

இந்த எம்பிவி கார் 195 லிட்டர் பூட் ரூமை கொண்டிருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கையை மடக்கினால், பூட் ரூமை 630 லிட்டர் வரை அதிகரிக்க முடியும். மூன்றாவது வரிசையில் 12V பவர் அவுட்லெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியர் ஏசி

ரியர் ஏசி

பின்புற பயணிகளுக்கு குளிர்ச்சியை எளிதாக வழங்கும் வகையில் ரியர் ஏசி உள்ளது மிக முக்கியமான அம்சம்.

ரியர் ஏசி

ரியர் ஏசி

பின்புற பயணிகளுக்கு குளிர்ச்சியை எளிதாக வழங்கும் வகையில் அனைத்து வேரியண்ட்களிலும் இரண்டாவது வரிசை இருக்கைக்கு மேலே ரியர் ஏசி பொருத்தப்பட்டு உள்ளது மிக முக்கியமான அம்சம்.

வசதிகள்

வசதிகள்

டிரைவர் இருக்கையை தேவைக்கேற்ப உயரத்தை கூட்டவும், குறைக்கவும் முடியும். ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் ரியர் வியூ மிரர்களை எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இருக்கிறது.

சொகுசான பயணம்

சொகுசான பயணம்

ரியர் வீல் டிரைவ் கொண்ட என்ஜாய் எம்பிவி காரில் முன்பக்கம், மெக்ஃபர்சன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஃபைவ் லிங்க் ரியர் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டிருப்பதால் சொகுசான, சுகமான பயணத்தை உறுதி செய்யும். வாயு நிரப்பப்பட்ட அதிர்வு தாங்கிகள் மேடுபள்ளமான சாலைகளில் கூட சுகமான பயண அனுபவத்தை தரும் என்பதால் பயணம் உற்சாகம் குறையாமல் அமையும்.

கையாளுமை

கையாளுமை

இது மோனோகாக் பாடியுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் சிறப்பான கையாளுமையை கொடுக்கும். முன்பக்க, பின்பக்க ஆக்ஸில்களின் சீரான எடை வினியோக கட்டமைப்பும் அனைத்து சாலை நிலைகளிலும் ஸ்டீயரிங் துல்லியமாகவும், சுலபமாகவும் இருக்க உதவுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜையும் தரும் என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

கூண்டு போன்ற மோனோகாக் கட்டமைப்பு உயர் வலிமை கொண்ட ஸ்டீல்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மோதலின் வேகத்தை கிரகித்து பயணிகளை பாதுகாக்கும் 10 மோதல் பாதுகாப்பு உத்திரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன், இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார், பின்பக்க வைன்ட்ஷீல்டில் டீஃபாகர், ரியர் வாஷ், சைல்டு லாக் வசதி, எலக்ட்ரானிக் ஆன்ட்டி தெஃப்ட் அமைப்பு, கீ லெஸ் என்ட்ரி, உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

 வாரண்டி

வாரண்டி

செவர்லே என்ஜாய் எம்பிவி காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ.,க்கான வாரண்டியை(எது முன்னால் வருகிறதோ அது) ஜெனரல் மோட்டார்ஸ் வழங்குகிறது.

சென்னை விலை விபரம்:

சென்னை விலை விபரம்:

பெட்ரோல் வேரியண்ட்கள்

எல்எஸ்(8 சீட்டர்) : ரூ5.59 லட்சம்

எல்எஸ்(7 சீட்டர்) : ரூ5.64 லட்சம்

எல்டி(7 சீட்டர்) : ரூ.6.43 லட்சம்

எல்டிஇசட்(7 சீட்டர்): ரூ.7.12 லட்சம்

டீசல் வேரியண்ட்கள்

எல்எஸ்(8 சீட்டர்) : ரூ6.81 லட்சம்

எல்எஸ்(7 சீட்டர்) : ரூ.6.88 லட்சம்

எல்டி(7 சீட்டர்) : ரூ.7.56 லட்சம்

எல்டிஇசட்(7 சீட்டர்): ரூ.8.14 லட்சம்

Most Read Articles
English summary
Here’s another budget MPV from Chevrolet, the Chevrolet Enjoy MPV we see here started life as the Wuling Hongguang, a product of GM’s Chinese joint venture SAIC-GM-Wuling Automobile. Here are given some important features of Chevy Enjoy.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X