சிறந்த காம்பேக்ட் செடான் எது? - ஒப்பீடு பார்வை

ஹேட்ச்பேக் கார்களைவிட அதிக பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான இடவசதியை அளிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக காம்பேக்ட் செடான் கார்களின் மார்க்கெட் இன்று கிடுகிடுவென உயர்ந்து நிற்கிறது.

பூட் ரூமுடன் சேர்த்து கொஞ்சம் அந்தஸ்தையும் கூடுதலாக வழங்குவதால், வாடிக்கையாளர்கள் காம்பேக்ட் செடான் கார்களை விரும்புகின்றனர். இதில், சற்று கூடுதல் முதலீடு என்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுவதில்லை. சிறப்பான மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ் என எதிலும் குறைவைக்காமல், பார்க்கிங் செய்வதற்கும் எளிதாக இருப்பதால் காம்பேக்ட் செடான் கார்களுக்கான வரவேற்பு எகிறி வருகிறது.

இந்த செய்தித்தொகுப்பில் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் டாடா ஸெஸ்ட், ஹோண்டா அமேஸ், மாருதி டிசையர் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஆகிய 4 காம்பேக்ட் செடான் கார்களின் சிறப்பம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஒப்பீடு

ஒப்பீடு

முக்கிய அம்சங்களின் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளிலும், இறுதியில் எது பெஸ்ட் மாடல் என்பதையும் காணலாம்.

 மைலேஜ் - பெட்ரோல்

மைலேஜ் - பெட்ரோல்

டாடா ஸெஸ்ட் - 17.6 கிமீ/லி

மாருதி டிசையர் - 20.85 கிமீ/லி

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் - 19.2 கிமீ/லி

ஹோண்டா அமேஸ் - 18.0 கிமீ/லி

 மைலேஜ் - டீசல்

மைலேஜ் - டீசல்

டாடா ஸெஸ்ட் - 23.0 கிமீ/லி

மாருதி டிசையர் - 26.59 கிமீ/லி

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் - 24.4 கிமீ/லி

ஹோண்டா அமேஸ் - 25.8 கிமீ/லி

பூட் ரூம் கொள்ளளவு

பூட் ரூம் கொள்ளளவு

டாடா ஸெஸ்ட் - 360 லிட்டர்கள்

மாருதி டிசையர் - 316 லிட்டர்கள்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் - 407 லிட்டர்கள்

ஹோண்டா அமேஸ் - 400 லிட்டர்கள்

 எரிபொருள் டேங்க் கொள்ளளவு

எரிபொருள் டேங்க் கொள்ளளவு

டாடா ஸெஸ்ட் - 44 லிட்டர்கள்

மாருதி டிசையர் - 42 லிட்டர்கள்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் - 43 லிட்டர்கள்

ஹோண்டா அமேஸ் - 35 லிட்டர்கள்

வீல் பேஸ்

வீல் பேஸ்

டாடா ஸெஸ்ட் - 2,470 மிமீ

மாருதி டிசையர் - 2,430 மிமீ

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் - 2,425 மிமீ

ஹோண்டா அமேஸ் - 2,405 மிமீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

டாடா ஸெஸ்ட் - 165மிமீ

மாருதி டிசையர் - 170மிமீ

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்-165மிமீ

ஹோண்டா அமேஸ்- 165மிமீ

 வசதிகள்

வசதிகள்

டாடா ஸெஸ்ட் - பவர் ஸ்டீயரிங், ஏசி, முன்பக்க பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங்.

மாருதி டிசையர் - பவர் ஸ்டீயரிங், ஏசி.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் - பவர் ஸ்டீயரிங், ஏசி, முன்பக்க பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங்.

ஹோண்டா அமேஸ் - பவர் ஸ்டீயரிங், ஏசி, முன்பக்கம், பின்பக்கம் பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங்.

எஞ்சின் - பெட்ரோல்

எஞ்சின் - பெட்ரோல்

டாடா ஸெஸ்ட் - 1.2 லி எஞ்சின் [ பவர்: 89 பிஎச்பி, டார்க்: 140 என்எம்]

மாருதி டிசையர் - 1.2 லி எஞ்சின் [ பவர்: 83 பிஎச்பி, டார்க்: 115 என்எம்]

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் - 1.2 லி எஞ்சின் [ பவர்: 81 பிஎச்பி, டார்க்: 114 என்எம்]

ஹோண்டா அமேஸ் - 1.2லி எஞ்சின் [ பவர்: 86 பிஎச்பி, டார்க்: 109 என்எம்]

எஞ்சின் - டீசல்

எஞ்சின் - டீசல்

டாடா ஸெஸ்ட் - 1.3 லி எஞ்சின் [ பவர்: 74 பிஎச்பி, டார்க்: 190 என்எம்]

மாருதி டிசையர் 1.3 லி எஞ்சின் [ பவர்: 74 பிஎச்பி, டார்க்: 190 என்எம்]

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் - எஞ்சின் 1.1லி [ பவர்: 71 பிஎச்பி, டார்க்: 180 என்எம்]

ஹோண்டா அமேஸ் - 1.5லி எஞ்சின் [ பவர்: 98 பிஎச்பி, டார்க்: 200 என்எம்]

பேஸ் மாடல்களின் ஆன்ரோடு விலை விலை விபரம்

பேஸ் மாடல்களின் ஆன்ரோடு விலை விலை விபரம்

டாடா ஸெஸ்ட்

பெட்ரோல்: ரூ.5.30 லட்சம்

டீசல்: ரூ.6.49 லட்சம்

மாருதி டிசையர்

பெட்ரோல்: ரூ.5.73 லட்சம்

டீசல்: ரூ.7.01 லட்சம்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

பெட்ரோல்: ரூ.5.77 லட்சம்

டீசல்: ரூ.6.83 லட்சம்

ஹோண்டா அமேஸ்

பெட்ரோல்: ரூ.6.03 லட்சம்

டீசல்: ரூ.7.29 லட்சம்

வாரண்டி விபரம்

வாரண்டி விபரம்

டாடா ஸெஸ்ட் - 3 ஆண்டுகள்/ 1,00,000 கிமீ

மாருதி டிசையர் - 2 ஆண்டுகள்/ 40,000 கிமீ

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் - 2 ஆண்டுகள்/ அன்லிமிடேட்

ஹோண்டா அமேஸ் - 2 ஆண்டுகள்/ 40,000 கிமீ

முக்கிய அம்சஙகள் ஒப்பீடு

முக்கிய அம்சஙகள் ஒப்பீடு

இடவசதி, சிறப்பம்சங்கள், குறைவான விலை என அனைத்து அம்சங்களிலும் டாடா ஸெஸ்ட் முன்னிலை பெறுகிறது. சிறந்த மைலேஜ், மாருதியின் சர்வீஸ் கட்டமைப்பு வசதிகள், உதிரிபாகங்கள் விலை போன்றவற்றில் மாருதி டிசையர் முன்னிலை பெறுகிறது. செயல்திறன் மிக்க நம்பகமான எஞ்சின், அதிக பூட் ரூம், டிசைன் ஆகியவற்றில் ஹோண்டா அமேஸ் முன்னிலையில் நிற்கிறது. வசதிகள் வழங்குவதிலும், அதிக பூட்ரூம் கொண்ட மாடலாகவும் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் நிற்கிறது.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

பேஸ் மாடலை தேர்வு செய்வோர்க்கு ஹோண்டா அமேஸ் சிறந்த சாய்ஸ். ஏனெனில், ஆல் பவர் விண்டோஸ் சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட வசதிகள் பேஸ் மாடலிலேயே வழங்கப்படுகிறது. சிறந்த சர்வீஸ் நெட்வொர்க்கை விரும்புவோர்க்கு மாருதி டிசையர் பெஸ்ட். டாப் வேரியண்ட்டில் புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கிறது. அதிக பூட் ஸ்பேஸ், வசதிகள் நிறைந்த மாடலை விரும்புவோர்க்கு ஹூண்டாய் எக்ஸ்சென்ட் பெஸ்ட். ஒட்டுமொத்தமாக பாரக்கும்போது, வசதிகள் நிறைந்தத கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மாடலை விரும்புவோர்க்கும் டாடா ஸெஸ்ட்தான் பெஸ்ட் சாய்ஸ்.

உங்கள் சாய்ஸ்!

உங்கள் சாய்ஸ்!

கார் தேர்வு என்பது தனிப்பட்ட விருப்பங்கள், வசதிகளை பொறுத்தது. இங்கே தரப்பட்டிருக்கும் விபரங்களை பொறுத்து எந்த கார் மிகச்சிறப்பானது என்பதை நீங்களே ஜட்ஜ் செய்து கூறலாம். கருத்துப்பெட்டியில் உங்களது தேர்விற்குள்ளான கார் விபரத்தை எழுதுங்கள்.

Most Read Articles
English summary
Comparison Of Best Compact Sedans In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X