ஜெயிக்கப் போகும் குதிரை எது? ஹெக்ஸா Vs இன்னோவா கிரிஸ்டா Vs லாட்ஜி Vs பிஆர்-வி

By Meena

குடும்பமாகப் பயணிக்கவும், தொலை தூர சுற்றுலாக்களுக்கும் எந்த வாகனத்தைத் தேர்வு செய்வது என யோசிக்கும்போது நம் கண் முன்னே வரும் முதல் சாய்ஸ் மல்ட்டி யுடிலிட்டி வெய்க்கிள் எனப்படும் எம்யூவி ரக கார்கள்தான். அதேபோல் எம்யூவி அம்சங்களுடன் கூடிய எஸ்யூவி கார்களும் இந்த வரிசையில் வருகின்றன.

அப்படியாக ஒரு காரை ஹெக்ஸா என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கார்கள் ஒப்பீடு

அந்த ரக கார்களில் ஏற்கெனவே சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் டொயாட்டோ நிறுவனத்தின் இன்னோவா கிரிஸ்டா, ரெனால்ட் லாட்ஜி, ஹோண்டா பிஆர்-வி ஆகியவைதான் ஹெக்ஸாவுக்கு கடும் போட்டியாக இருக்கப் போகின்றன.

அதில் விற்பனையில் எந்தக் கார் முதலிடம் பிடிக்கப் போகிறது? என்பதுதான் ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் தற்போதைய ஒரே கேள்வி.

அந்த மாடல்கள் பற்றிய சிறிய ஒப்பீடைப் பார்ப்போம்....

டிசைனைப் பொருத்தவரை ஹெக்ஸாவில் நேர்த்தியான வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி மாடலைப் போன்று வெளிப்புறத் தோற்றம் உள்ளது. அதேவேளையில் எம்யூவி ரகத்தில் உள்ள அம்சங்கள் ஹெக்ஸாவிலும் இருப்பது கூடுதல் சிறப்பு.

ரெனால்ட் லாட்ஜியை எடுத்துக்கொண்டால், வேனைப் போன்ற டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்க்க பெரியதாகவும், பாக்ஸ் வடிவிலும் அதன் வெளிப்புறக் கட்டமைப்பு இருக்கிறது.

டொயாட்டோ இன்னோவா கிரிஸ்டோவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலான நேர்த்தியான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்க்க சற்று பிரம்மாண்டமாகவும், உள்புறத்தில் அதிக இடம் இருப்பதும் இந்த மாடலின் ஹைலைட்.

ஹோண்டா பிஆர்-வியின் புதுமையான வடிவமைப்பும் வாடிக்கையாளர்களை வசப்படுத்தும் என நம்பலாம். வந்த சில மாதங்களிலேயே புக்கிங்கில் புதிய சாதனையை அந்த மாடல் படைத்திருப்பதே அதற்கு சாட்சி.

மொத்தத்தில் டிசைனைப் பொருத்தவரை 4 மாடல்களும் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் (10-க்கு):

டாடா ஹெக்ஸா - 8

ரெனால்ட் லாட்ஜி - 7.5

டொயாட்டோ இன்னோவா கிரிஸ்டியா - 8

ஹோண்டா பிஆர்-வி - 8

எஞ்சின் மற்றும் கியர்கள்....

ஹெக்ஸாவில் 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 154 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட எஞ்சின் இது. 6 கியர்கள் உள்ளன. ஆட்டோமேடிக் கியர் வசதியும் உண்டு.

லாட்ஜியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்கள் இரு வகையாக உள்ளன. ஒன்று 108 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க்கையும், மற்றொன்று 84 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவை. இரண்டிலும் 6 கியர்கள் உள்ளன.

இன்னோவா கிரிஸ்டோவைப் பொருத்தவரை 2.4 மற்றும் 2.8 லிட்டர் என இரு எஞ்சின்கள் உள்ளன. 2.4 லிட்டர் எஞ்சின் 148 பிஎச்பி மற்றும் 343 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. 2.8 லிட்டர் எஞ்சின் 172 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் வெளியேற்றும் திறன் உள்ளது. கியர்களைப் பொருத்தவரை 2.4 லிட்டர் எஞ்சின் மாடலில் 5 கியரும், 2.8 லிட்டர் எஞ்சின் மாடலில் 6 கியரும் உள்ளன.

ஹோண்டா பிஆர்-வியில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களைக் கொண்ட மாடல்கள் உள்ளன. பெட்ரோல் எஞ்சின் 117 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 145 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்சினில் 99 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் வெளியாகும் திறன் உள்ளது.

பெட்ரோல் மாடலில் ஆட்டோமேடிக் கியர் வசதி இருப்பது பிஆர்-வியின் கூடுதல் சிறப்பு.

எஞ்சின் மற்றும் கியர்களுக்கான ரேட்டிங்கில் 4 மாடல்களும் பெற்ற மதிப்பெண்கள்

டாடா ஹெக்ஸா - 8

ரெனால்ட் லாட்ஜி - 7

டொயாட்டோ இன்னோவா கிரிஸ்டியா - 8

ஹோண்டா பிஆர்-வி - 7.5

ஆடியோ சிஸ்டம், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் என பல்வேறு சிறப்பம்சங்கள் அந்த 4 மாடல்களிலும் தனித்தனியே இடம்பெற்றுள்ளன. ஏர்பேக்கைப் பொருத்தவரை ஹெக்ஸாவில் 6 ஏர் பேக்குகளும், லாட்ஜி மற்றும் பிஆர்-வியில் தலா 2 ஏர் பேக்குகளும், இன்னோவா கிரிஸ்டியாவில் 3 ஏர் பேக்குகளும் உள்ளன.

விலை...

டாடா ஹெக்ஸா - ரூ.12 லட்சம் - ரூ.15 லட்சம்

ரெனால்ட் லாட்ஜி - ரூ. 7.5 லட்சம் - ரூ.12.6 லட்சம்

டொயாட்டோ இன்னோவா கிரிஸ்டியா - ரூ.14.6 லட்சம் - ரூ.20.7 லட்சம்

ஹோண்டா பிஆர்-வி - பெட்ரோல்: ரூ.9.9 லட்சம் - 12.9 லட்சம், டீசல்: ரூ8.7 லட்சம் - 11.9 லட்சம்.

(அனைத்தும் தில்லி எக்ஸ்-ஷோ ரூம் விலை)

மொத்தத்தில் 4 மாடல்களிலும் வெவ்வேறு வகையான தனி சிறப்பியல்புகளும், வாடிக்கையாளர்களை வசியப்படுத்தும் அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையான ஆதரவு எந்த மாடலுக்கு என்பது ஹெக்ஸா களத்தில் குதித்த பிறகு தெரிய வரும்.

Most Read Articles
English summary
Comparison: Hexa vs Lodgy vs Innova Crysta vs BR-V.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X