மெர்சிடிஸ் பென்ஸ் இ-400 கன்வெர்ட்டிபிள் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...!!

By Saravana

பயண விரும்பிகள் பலரும் காரைவிட மோட்டார்சைக்கிளில் செல்வதையே அதிகம் விரும்புகின்றனர். அட்டைப் பெட்டிக்குள் அடைத்தது போன்ற ஓர் இறுக்கமான உணர்வு இல்லாமல், இயற்கை காற்றை சுவாசித்தப்படி ஓர் சுதந்திரமான உணர்வுடன் பயணிக்க வேண்டும் என்பதே காரணமாக இருக்கிறது.

அவ்வாறு, செல்பவர்களுக்கு பைக்தான் ஒரே சாய்ஸ் என்ற நிலையை மாற்றி, ஓர் சுதந்திரமான உணர்வை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கூரை இல்லாத திறந்த நிலை அமைப்புடைய கார்கள், பயண விரும்பிகளுக்கு சிறப்பானதாக இருந்து வருகிறது.

ஆனால், கன்வெர்ட்டிபிள் வகை கார்களில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகளை களைந்து, அவர்களுக்கு ஏதுவான அம்சங்களுடன், வடிவமைக்கப்ட்ட சிறந்த கன்வெர்ட்டிபிள் மாடல்கள் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெறுகின்றன. அவ்வாறான மாடல்களில் ஒன்றான மெர்சிடிஸ் பென்ஸ் இ-400 சொகுசு காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்தது.

பயணத் திட்டம்

பயணத் திட்டம்

இந்த சொகுசு வகை கன்வெர்ட்டிபில் காரில் பெங்களூரிலிருந்து வேலூர் அருகில் உள்ள குடியாத்தம் நகருக்கு பயணம் செய்து கிடைத்த அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். பெங்களூரிலிருந்து கோலார், வெங்கடகிரி கோட்டா வழியாக குடியாத்தம் செல்வதை நோக்காக கொண்டு பயணித்தோம். குடியாத்தம் நகரை தேர்வு செய்ததற்கான காரணத்தை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

முதல் தேசியக் கொடி

முதல் தேசியக் கொடி

இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசித்தபடி பயணிப்பதற்கு காரணமாக இருந்த சுதந்திரப் போராட்ட வரலாறு முடிவுக்கு வந்த தினமான 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள், அதிகாலை 5.30 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடியை தயாரித்து வழங்கி வரலாற்றில் இடம்பெற்ற நகரம் குடியாத்தம். எனவே, அந்த நகருக்கு சென்று வருவதன் மூலம் ஓர் முழுமையான சுதந்திர உணர்வை பெற முடிந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. காரின் டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை தொடர்ந்து காணலாம்.

கன்வெர்ட்டிபிள் மாடல்

கன்வெர்ட்டிபிள் மாடல்

இந்திய வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ் இ- கிளாஸ் காரின் கன்வெர்ட்டிபிள் மாடல்தான் மெர்சிடிஸ் பென்ஸ் இ-400 மாடல். ரூ.78.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய அம்சம்

முக்கிய அம்சம்

தோற்றத்திலும், செயல்திறனிலும் மிக அட்டகாசமான பேக்கேஜ் கொண்ட கன்வெர்ட்டிபிள் மாடல். கவர்ச்சி அம்சங்கள் நிறைந்த கேபின், எல்இடி ஹெட்லைட்டுகள், டியூவல் க்ரோம் எக்ஸ்சாஸ்ட் பைப்புகள் போன்றவை குறிப்பிட்டு கூறும்படியான அம்சங்கள். அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் டிசைன் அம்சங்கள் ஏராளம்.

சிறப்பு தொழில்நுட்பம்

சிறப்பு தொழில்நுட்பம்

அதிவேக சொகுசு கார் மாடலான இந்த காரில் பயணிக்கும்போது காற்றின் வேகம் பயணிகளை பாதிக்காதவாறு, இதன் வின்ட் ஷீல்டு மற்றும் கேபின் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஏர்கேப் டிராட் ஸ்டாப் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் காற்று கேபினுக்குள் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தா வகையில், காற்றின் வேகத்தை திசை திருப்புகிறது. இதன்மூலம், ஓர் மூடிய கூரை அமைப்பு கொண்ட காரில் பயணிப்பது போன்ற உணர்வை பெற முடிகிறது. மேலும், காற்றின் சப்தமும் காருக்குள் அமர்ந்து செல்லும்போது எதிர்பார்த்ததைவிட குறைவாகவே இருக்கிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

லெதர் இருக்கைகள் மிகவும் சொகுசாக இருக்கின்றன. லெதர் அப்ஹோல்ஸ்டரி, மர வேலைப்பாடுகள், அலுமினிய அலங்காரம் போன்றவை இன்டிரியரை மிகவும் கவர்ச்சியாக காட்டுகிறது. மேலும், காரின் சென்டர் கன்சோலில் இருக்கும் சுவிட்சுகளை இயக்குவதும் மிக எளிதாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. பொழுதுபோக்கு வசதிகளுக்கும் குறைவில்லை.

சாஃப்ட் டாப்

சாஃப்ட் டாப்

இந்த காரில் ஹார்டு டாப் எனப்படும் கடின வகை திறந்து மூடும் கூரை இல்லை. உயர்தர துணி கூரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. எலக்ட்ரிக் கன்ட்ரோல் யூனிட் மூலமாக சில வினாடிகளில் இந்த கூரையை திறந்து மூடிவிட முடிகிறது.

எஞ்சின்

எஞ்சின்

அதிசக்திவாய்ந்த இந்த சொகுசு கன்வெர்ட்டிபிள் காரில் இரட்டை டர்போசார்ஜர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 333 குதிரைசக்தி திறனையும், 480 என்எம் டார்க்கையும் வழங்கும். எஞ்சினிலிருந்து வெளிப்படுத்தும் அபரிமித சக்தியை 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சக்கரங்களுக்கு கடத்துகிறது. எஞ்சினின் பிக்கப் மிரட்டலாக இருக்கிறது. அத்துடன் ஓர் சிறப்பு வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டிரைவிங் ஆப்ஷன்

டிரைவிங் ஆப்ஷன்

சாலை மற்றும் போக்குவரத்து நிலைகளுக்கு தகுந்தவாறு இதில், டிரைவிங் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஓட்டும் வசதி உள்ளது. எக்கனாமிக்கல் மற்றும் டைனமிக் ஆகிய டிரைவிங் ஆப்ஷன்களில் வைத்து இயக்க முடிகிறது. அத்துடன், ஸ்டீயரிங் வீலில் கியர் ஷிஃப்ட்டுக்கான பேடில் ஷிஃப்டர்களும் கொடுக்கப்பட்டு இருப்பதால், ஓட்டுவதில் ஓர் அலாதி சுகத்தை தருகிறது.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

எஞ்சினிலிருந்து சக்தி வெளிப்படும் விதம் சீராக இருப்பதுடன், அதிர்வுகள் குறைவாக இருப்பதும் இந்த காரை எவ்வளவு தூரம் ஓட்டினாலும் அலுப்பு தெரியவில்லை. மேலும், வளைவுகளில் அதிவேகத்தில் திரும்பும்போது கூட சிறப்பான கையாளுமையை தருகிறது. நம்பிக்கையுடன் காரை ஓட்ட முடிவதுடன், ஓர் அலாதியான அனுபவத்தை தருகிறது.

பாதுகாப்பு எப்படி?

பாதுகாப்பு எப்படி?

மூடிய கூரை அமைப்பு கொண்ட கார்களைவிட, இதுபோன்ற திறந்த கூரை அமைப்பு கொண்ட கன்வெர்ட்டிபிள் கார்கள் விபத்தில் சிக்கினால், பயணிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த காரில் பல பிரத்யேக பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. அவை பெரும் பட்டியலாக இருப்பதால் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

வலுவான கட்டமைப்பு

வலுவான கட்டமைப்பு

இதன் ஏ பில்லர்கள் மிகவும் வலுவானதாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் இருக்கும் நெக்-ப்ரோ ஹெட்ரெஸ்ட்டுகளும் விபத்துக்களின்போது பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும். மேலும், இந்த கன்வெர்ட்டிபிள் கார் மாடலை விபத்துக்களிலிருந்து தவிர்க்கும் பொருட்டு, அட்டென்ஷன் அசிஸ்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம், காரின் நிலைத்தன்மை மற்றும் அபாயங்கள் குறித்து உடனடி எச்சரிக்கை கிடைத்து விடுகிறது. ஓட்டுனர் அயர்ந்தாலும் இந்த அட்டென்ஷன் அசிஸ்ட் உணர்ந்து கொண்டு உடனடியாக எச்சரிக்கும்.

 பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்...

பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்...

முன்புற ஏர்பேக்குகள், விண்டோ ஏர்பேக்குகள், இடுப்பு பகுதிக்கான ஏர்பேக், முழங்கால் ஏர்பேக் என பயணிகளுக்கு முடிந்தவரை பாதுகாப்பை அளிக்கும் உயிர் காக்கும் காற்றுப் பைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. வேக கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரொகிராம், பிரேக் பேடு தேய்ந்து போவது குறித்து எச்சரிக்கும் வசதி, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் போன்றவை உள்ளன. மொத்தத்தில், எந்த விதத்திலும் கார் விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்ற வகையில் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தொழில்நுட்ப விபரங்கள்

தொழில்நுட்ப விபரங்கள்

ஸ்லைடில் இந்த காரின் எஞ்சின், உச்சபட்ச வேகம், மைலேஜ் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப விபரங்களை காணலாம்.

இந்த காருக்கான தர மதிப்பீடு

இந்த காருக்கான தர மதிப்பீடு

பாதுகாப்பு - 5க்கு 4 நட்சத்திர தர மதிப்பீடு

வசதிகள் - 5க்கு 4 நட்சத்திர தர மதிப்பீடு

செயல்திறன் - 5க்கு மூன்று நட்சத்திர தர மதிப்பீடு

டிசைன்- 5க்கு 4 நட்சத்திர மதிப்பீடு

Most Read Articles
English summary
First Drive: Mercedes-Benz E400 Cabriolet — A 'Topless' Affair
Story first published: Monday, September 21, 2015, 11:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X