ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டெஸ்ட் டிரைவ்: ஜோபோ குருவில்லா
தொகுப்பு: சரவணராஜன்

இதோ அதோ என்ற காத்திருப்புக்கு முடிவு கிடைத்துவிட்டது. ஒருவழியாக கடந்த புதன்கிழமை ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்துவிட்டது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மிக சரியான விலையில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை ஃபோர்டு களமிறக்கிவிட்டது.

சிலர் ஈக்கோஸ்போர்ட் மீது இருந்த நம்பிக்கை காரணமாக முன்பதிவு செய்தனர். சிலர் ஷோரூமுக்கு வந்தவுடன் ஒரு டெஸ்ட் டிரைவ் போட்டுவிட்டு அதன்பிறகு வாங்குவது குறித்து முடிவு எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இந்த வார இறுதியில் ஈக்கோஸ்போர்ட் பற்றி விசாரணையை போடுவதற்கு ஃபோர்டு ஷோரூமுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்று ஈக்கோஸ்போர்ட்டை வாங்குவதற்கு திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்த டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை வழங்குகிறோம். கடந்த மாதம் கோவாவில் வைத்து ஈக்கோஸ்போர்ட்டின் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட டைட்டானியம் வேரியண்ட்டை டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

1. முன்னோட்டம்

1. முன்னோட்டம்

கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக ஈக்கோஸ்போர்ட பார்வைக்கு வைக்கப்பட்டது. அதுமுதல் ஈக்கோஸ்போர்ட் பற்றிய செய்திகளும்,வதந்திகளும் றெக்கை கட்டி பறக்கத் துவங்கியது.

2. பிளாட்பார்ம்

2. பிளாட்பார்ம்

B- செக்மென்ட் குளோபல் ஃபியஸ்ட்டாவின் அடிப்படையில்தான் ஈக்கோஸ்போர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 4 மீட்டருக்குள் அடக்கப்பட்டுள்ளது.

முகப்பு தோற்றம்

முகப்பு தோற்றம்

ஈக்கோஸ்போர்ட் ஓர் ஸ்டைலான எஸ்யூவி என்பதில் மாற்றுக் கருத்துக்கு வேலை இல்லாத அளவுக்கு கம்பீரமான முகப்புடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பளிச் டிசைன்

பளிச் டிசைன்

கம்பீர முகப்பு மட்டுமல்ல, பளிச்சென்ற பக்கவாட்டு மற்றும் பின்புற தோற்றம் நம்மை எளிதாக காதல் வயப்பட வைத்துவிடுகிறது ஈக்கோஸ்போர்ட்!

 இன்டிரியர்

இன்டிரியர்

ஃபியஸ்ட்டாவின் இன்டிரியரை ஈக்கோஸ்போர்ட் நினைவூட்டுகிறது. இருப்பினும், பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், ரம்மியாகவும் இருக்கிறது. காருக்குள் அமர்ந்தால் ஓர் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை கொடுக்கும் என அடித்துக்கூறலாம்.

லெதர் இருக்கை

லெதர் இருக்கை

இருக்கைகள் தொடைக்கும், கால்களுக்கும் நல்ல சப்போர்ட்டை தரும் வகையில் இருக்கிறது. டிரைவர் இருக்கை உயரத்துக்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம். சாலையை பார்த்து தெளிவாக ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இருக்கை அமைப்பு இருப்பதோடு மிகவும் சொகுசாகவும் இருக்கிறது. ஹெட்ரூம், லெக்ரூம் ஆகிய இடவசதியும் போதிய அளவு உள்ளதால் ஓர் சிறப்பான டிரைவிங் அனுபவத்தை கொடுக்கும்.

ஸ்டீயரிங் வீல்

ஸ்டீயரிங் வீல்

ஸ்டீயரிங் வீலை நமது வசதிக்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ள முடியும். நெடுஞ்சாலையில் ஓட்டும்போது கொஞ்சம் இலகுவாக தெரிகிறது. அதேவேளை, போக்குவரத்து மிகுந்த நகரச் சாலைகளில் சிறப்பாக எதிர்கொள்ளும் விதத்தில் இருக்கிறது.

ஸ்டார்ட் ஸ்டாப்

ஸ்டார்ட் ஸ்டாப்

டேஷ்போர்டில் 3.5 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம், சராசரி மைலேஜ், சராசரி வேகம், வெளிப்புற வெப்பநிலை உள்ளிட்ட தகவல்களை பெறலாம். பாக்கெட்டில் சாவி இருந்தால் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதி கொண்ட ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பமும் இருக்கிறது. ஸ்பீடோமீட்டர் டயல்களும் ஃபியஸ்ட்டாவிலிருந்து எடுத்து சொருகப்பட்டுள்ளது.

பின்புற இருக்கை

பின்புற இருக்கை

பின்புற இருக்கை மடக்குவதற்கும், சாய்ப்பதற்குமான வசதிகள் கொண்டது என்பதால் நீண்ட தூர பயணத்திற்கு சிறப்பாக இருக்கிறது. உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி கொண்ட இரண்டு ஹெட்ரெஸ்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பூட் ரூம்

பூட் ரூம்

சாதாரணமாக 362 லிட்டர் கொள்ளளவுக்கு பொருட்கள் வைப்பதற்கான இடவசதி இருக்கிறது. பின் இருக்கையை மடக்கி வைத்துவிட்டால் 705 லிட்டர் கொள்ளளவுக்கு பொருட்களை வைப்பதற்கான இடவசதி கிடைக்கிறது.

பிரேக்

பிரேக்

இதன் பிரேக் கால்களின் கட்டளைக்கு ஏற்ப மிகவும் துல்லியமாக வேலை செய்கிறது.

கிளட்ச்

கிளட்ச்

இதன் கிளட்ச் சற்று கூடுதலாகன சக்தியை கேட்டு உள் வாங்கிக்கொண்டு வேலை செய்கிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

சிறப்பான கையாளுமையை கொடுக்கும் வகையில் சஸ்பென்ஷன் டியூன் செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்க்கும் சொகுசை வழங்காது. பொதுவாக ஃபோர்டு கார்களில் சஸ்பென்ஷன் இவ்வாறுதான் டியூனிங் செய்யப்படுகின்றன.

கட்டுமானம்

கட்டுமானம்

எதிர்பாராதவிதமாக டெஸ்ட் டிரைவின்போது விபத்தில் சிக்க நேரிட்டுவிட்டது. ஒரு மின் கம்பத்தில் மோதிய வேகத்தில் கார் எதிர்புறம் போய் கவிழந்துவிட்டது. இதில், சக பயணியாக இருந்த எனக்கும், ஓட்டிய வட இந்திய பத்திரிக்கையாளருக்கும் காயமின்றி உயிர் பிழைத்தோம். ஆனால், ஈக்கோஸ்போர்ட்டின் மிக உறுதியான முன்பக்கத்தால் உள்ளே இருந்தவர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதை கூறியாக வேண்டும்.

1.0 லிட்டர் எஞ்சின்

1.0 லிட்டர் எஞ்சின்

டெஸ்ட் டிரைவில் 3 சிலிண்டர் கொண்ட 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட காரை டெஸ்ட் செய்தோம். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. முதல் தடவையிலேயே இதன் பவர் வெளிப்பாடு மனதில் குதூகலமூட்டியது. இதுதவிர, 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மாடல்களிலும் கிடைக்கிறது.

சாதகங்கள்

சாதகங்கள்

  • நவீன தொழில்நுட்ப வசதிகள்
  • இந்திய சாலைகளுக்கு தகுந்த சிறப்பான சிறிய எஞ்சின்
  • சிறப்பான இன்டிரியர்
  • ஸ்டைலான தோற்றம் கொண்ட மினி எஸ்யூவி
  • பின்புறம் ஸ்பேர் வீல் இருப்பதால் எளிதாக கழற்றி மாட்டலாம்.
  • டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

    டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

    ஸ்டைல், பவர், வசதிகள் என அனைத்து விதத்திலும் சிறப்பான மினி எஸ்யூவியாக இருக்கிறது. இதைவிட முக்கிய அம்சம் இதன் விலை. மிக சரியான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 4 சீட்டர் காராக மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளதால், பின்புற இருக்கையில் கொஞ்சம் தடிமனான இரண்டு பேர் அமர்ந்தால் மூன்றாமவருக்கு இடம் இல்லை என்பது மைனஸ்.

    வண்ணங்கள்

    வண்ணங்கள்

    • மார்ஸ் ரெட்
    • கைனெட்டிக் புளூ
    • சீ கிரே
    • மூன்டஸ்ட் சில்வர்
    • பாந்தர் பிளாக்
    • டைமன்ட் பிளாக்
    • சில்
    • மைலேஜ்

      மைலேஜ்

      1.5 லி பெட்ரோல் - 15.6 கிமீ

      1.5 லி டீசல் - 22.7 கிமீ

      1.0 லி ஈக்கோபூஸ்ட் - 18.9 கிமீ

      கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்- இன்டிரியர்

      கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்- இன்டிரியர்

      ஈக்கோஸ்போர்ட்டுக்கு ஃபோர்டு வழங்கும் கூடுதல் இன்டிரியர் ஆக்சஸெரீஸ்களை படத்தில் காணலாம்.

      எக்ஸ்டீரியர்

      எக்ஸ்டீரியர்

      ஈக்கோஸ்போர்ட்டுக்கு ஃபோர்டு வழங்கும் கூடுதல் வெளிப்புறத்திற்கான ஆக்சஸெரீஸ்களை படத்தில் காணலாம்.

      ஹெட்லைட் டிசைன்

      ஹெட்லைட் டிசைன்

      ஹேலஜன் லைட்டுகளுடன் கூடிய ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இரவில் டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு இல்லாததால் அதுபற்றி முழுமையாக கூற இயலவில்லை.

      ரியர் வியூ மிரரில் இன்டிகேட்டர்

      ரியர் வியூ மிரரில் இன்டிகேட்டர்

      ரியர் வியூ மிரரில் இன்டிகேட்டர் விளக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், எலக்ட்ரிக்கல் முறையில் மடக்கும் வசதி இல்லாதது குறைய

      டெயில் லைட்

      டெயில் லைட்

      டெயில் லைட் கிளஸ்ட்டருடன் கதவை திறக்கும் டோர் ஹேண்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், இருக்கும் சிறிய கருப்பு நிற பட்டனை அழுத்தினால் கதவு திறந்து கொள்ளும்.

      அலாய் வீல் டிசைன்

      அலாய் வீல் டிசைன்

      16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

      சென்னை விலை விபரம்

      சென்னை விலை விபரம்

      1.5 லி பெட்ரோல்

      ஆம்பியன்ட் - ரூ.5,68,937

      டிரென்ட் - ரூ.6,61,545

      டைட்டானியம் - ரூ.7,64,340

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,60,012

      1.0 லி பெட்ரோல்

      டைட்டானியம் - ரூ.8,04,034

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,43,728

      1.5 லி டீசல்

      ஆம்பியன்ட் - ரூ.6,80,904

      டிரென்ட் - ரூ.7,74,562

      டைட்டானியம் - ரூ.8,77,335

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.9,16,024

      -------------------------------------

      கோவை விலை விபரம்

      கோவை விலை விபரம்

      1.5 லி பெட்ரோல்

      ஆம்பியன்ட் - ரூ.5,78,790

      டிரென்ட் - ரூ.6,71,101

      டைட்டானியம் - ரூ.7,73,477

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,58,890

      1.0 லி பெட்ரோல்

      டைட்டானியம் - ரூ.8,04,034

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,43,941

      1.5 லி டீசல்

      ஆம்பியன்ட் - ரூ.6,89,500

      டிரென்ட் - ரூ.7,82,764

      டைட்டானியம் - ரூ.8,85,181

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.9,14,202

      ---------------------------------------

      மதுரை விலை விபரம்

      மதுரை விலை விபரம்

      1.5 லி பெட்ரோல்

      ஆம்பியன்ட் - ரூ.5,78,790

      டிரென்ட் - ரூ.6,71,101

      டைட்டானியம் - ரூ.7,73,477

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,58,890

      1.0 லி பெட்ரோல்

      டைட்டானியம் - ரூ.8,04,023

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,43,941

      1.5 லி டீசல்

      ஆம்பியன்ட் - ரூ.6,89,893

      டிரென்ட் - ரூ.7,82,853

      டைட்டானியம் - ரூ.8,85,225

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.9,14,272

      சேலம் விலை விபரம்

      சேலம் விலை விபரம்

      1.5 லி பெட்ரோல்

      ஆம்பியன்ட் - ரூ.5,78,790

      டிரென்ட் - ரூ.6,71,101

      டைட்டானியம் - ரூ.7,73,477

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,58,890

      1.0 லி பெட்ரோல்

      டைட்டானியம் - ரூ.8,04,024

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,43,941

      1.5 லி டீசல்

      ஆம்பியன்ட் - ரூ.6,89,522

      டிரென்ட் - ரூ.7,82,852

      டைட்டானியம் - ரூ.8,85,225

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.9,14,273

      திருச்சி

      திருச்சி

      1.5 லி பெட்ரோல்

      ஆம்பியன்ட் - ரூ.5,78,790

      டிரென்ட் - ரூ.6,71.101

      டைட்டானியம் - ரூ.7,73,477

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,58,890

      1.0 லி பெட்ரோல்

      டைட்டானியம் - ரூ.8,04,023

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,43,941

      1.5 லி டீசல்

      ஆம்பியன்ட் - ரூ.6,89,521

      டிரென்ட் - ரூ.7,82,852

      டைட்டானியம் - ரூ.8,85,225

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.9,14,273

      வேலூர் விலை விபரம்

      வேலூர் விலை விபரம்

      1.5 லி பெட்ரோல்

      ஆம்பியன்ட் - ரூ.5,78,792

      டிரென்ட் - ரூ.6,71,093

      டைட்டானியம் - ரூ.7,73,454

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,58,836

      1.0 லி பெட்ரோல்

      டைட்டானியம் - ரூ.8,04,003

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,43,927

      1.5 லி டீசல்

      ஆம்பியன்ட் - ரூ.6,89,484

      டிரென்ட் - ரூ.7,82,807

      டைட்டானியம் - ரூ.8,85,165

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.9,14,196

      திருநெல்வேலி விலை விபரம்

      திருநெல்வேலி விலை விபரம்

      1.5 லி பெட்ரோல்

      ஆம்பியன்ட் - ரூ.5,78,790

      டிரென்ட் - ரூ.6,71,101

      டைட்டானியம் - ரூ.7,73,454

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,58,836

      1.0 லி பெட்ரோல்

      டைட்டானியம் - ரூ.8,04,023

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,43,941

      1.5 லி டீசல்

      ஆம்பியன்ட் - ரூ.6,89,523

      டிரென்ட் - ரூ.7,82,853

      டைட்டானியம் - ரூ.8,85,225

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.9,14,273

      ஈரோடு விலை விபரம்

      ஈரோடு விலை விபரம்

      1.5 லி பெட்ரோல்

      ஆம்பியன்ட் - ரூ.5,78,791

      டிரென்ட் - ரூ.6,71,093

      டைட்டானியம் - ரூ.7,73,454

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,58,836

      1.0 லி பெட்ரோல்

      டைட்டானியம் - ரூ.8,04,004

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,43,727

      1.5 லி டீசல்

      ஆம்பியன்ட் - ரூ.6,89,473

      டிரென்ட் - ரூ.7,82,764

      டைட்டானியம் - ரூ.8,85,144

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.9,14,163

      -------------------------------------------------------------------------------------------

      புதுச்சேரி விலை விபரம்

      புதுச்சேரி விலை விபரம்

      1.5 லி பெட்ரோல்

      ஆம்பியன்ட் - ரூ.5,68,937

      டிரென்ட் - ரூ.6,61,545

      டைட்டானியம் - ரூ.7,64,340

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,60,012

      1.0 லி பெட்ரோல்

      டைட்டானியம் - ரூ.8,04,034

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.8,43,728

      1.5 லி டீசல்

      ஆம்பியன்ட் - ரூ.6,80,893

      டிரென்ட் - ரூ.7,74,518

      டைட்டானியம் - ரூ.8,77,314

      டைட்டானியம் ப்ளஸ் - ரூ.9,15,989

Most Read Articles
English summary
Drivespark test drove Ford Ecosport mini SUV on the fast and exciting roads of Goa. Ford Ecosport's 1.0L ecoboost is a powerful machine that offers great performance. Check out test drive review of Ford Ecosport through pictures.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X