ஹோண்டா டபிள்யூஆர்வி Vs ஹோண்டா ஜாஸ் : முக்கிய வித்தியாசங்கள்!

ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையில் க்ராஸ்ஓவர் மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ள புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் விரைவில் விற்பனைக்கு வருகிறது. இந்த இரண்டு கார்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளை காணலாம்.

By Saravana Rajan

ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட க்ராஸ்ஓவர் ரக கார் மாடலாக ஹோண்டா டபிள்யூஆர்வி கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா ஜாஸ் கார் மற்றும் ஹோண்டா டபிள்யூ ஆர்வி கார்களுக்கு இடையிலான முக்கிய வித்தியாசங்கள் சிலவற்றை இந்த செய்தியில் காணலாம்.

01. டிசைன்

01. டிசைன்

ஹோண்டா ஜாஸ் கார் மென்மையான தோற்றத்தை பெற்றிருக்கும் நிலையில், ஹோண்டா டபிள்யூஆர்வி கார் முரட்டுத்தனமாக இருக்கிறது. இதற்காக டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன், கூடுதல் ஆக்சஸெரீகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக முறுக்கேறிய முக அமைப்புடன் தோற்றமளிக்கிறது டபிள்யூஆர்வி கார்.

02. எல்இடி ஹெட்லைட்

02. எல்இடி ஹெட்லைட்

முன்புற க்ரில் அமைப்பு, பம்பர், அதற்கு கீழே ஸ்கிட் பிளேட் என முற்றிலும் புதிய மாடலாகவே தோற்றமளிக்கிறது. ஹோண்டா ஜாஸ் காரில் ஹேலஜன் பல்புகள் கொண்ட ஹெட்லைட் இருக்கும் நிலையில், ஹோண்டா டபிள்யூ ஆர்வி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

03. புதிய அலாய் வீல்கள்

03. புதிய அலாய் வீல்கள்

ஹோண்டா ஜாஸ் காரில் 15 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரில் 16 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பின்புறத்தில் எல் வடிவிலான புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர், புதிய பம்பர் அமைப்பு மற்றும் ஸ்கிட் பிளேட்டுகள் கொடுக்கப்பட்டு எஸ்யூவி தோற்றத்தை பெற்றிருக்கிறது. இரு கார்களுக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றன.

04. உள்புற வடிவமைப்பு

04. உள்புற வடிவமைப்பு

ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் உள்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் சன்ரூஃப் எனப்படும் கண்ணாடி கூரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஜாஸ் காரைவிட இதன் வீல் பேஸ் 25 மிமீ அதிகரிக்கப்பட்டு இருப்பதால், கால் வைப்பதற்கான இடவசதி மேம்பட்டுள்ளது. ஜாஸ் காரைவிட இதன பூட்ரூம் பகுதியின் கொள்திறன் 9 லிட்டர் வரை கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

05. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

05. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். அதாவது, ஜாஸ் காரைவிட மேம்பட்டதாக இருக்கும். ஹோண்டாவின் மிரர்லிங்க் இணைப்பு வசதி, யுஎஸ்பி போர்ட், புளூடூத் மற்றும் ஆக்ஸ்-இன் போர்ட்டுகளும் இருக்கும். க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டமும் இடம்பெற்று இருக்கும்.

06. எஞ்சின்

06. எஞ்சின்

ஹோண்டா ஜாஸ் காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் எஞ்சின்தான் புதிய டபிள்யூஆர்வி காரிலும் பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால், பெட்ரோல் எஞ்சின் பவரை வெளிப்படுத்தும் திறனில் மாறுபடுகிறது. ஹோண்டா ஜாஸ் காரின் பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரை அளிக்கவல்லது. டபிள்யூஆர்வி காரில் இருக்கும் அதே எஞ்சின் 87 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக மாறுதல் செய்யப்பட்டுள்ளது. டீசல் மாடலில் வித்தியாசம் இல்லை. இரு மாடல்களிலுமே இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கிறது.

07. மைலேஜ்

07. மைலேஜ்

ஹோண்டா ஜாஸ் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தரும் நிலையில், ஹோண்டா டபிள்யூஆர்வி கார் லிட்டருக்கு 17.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜ் தரும் நிலையில், டபிள்யூஆர்வி காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 25.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 08. கிரவுண்ட் கிளிரயன்ஸ்

08. கிரவுண்ட் கிளிரயன்ஸ்

புதிய ஹோண்டா ஜாஸ் கார் 165மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. அதேநேரத்தில், ஹோண்டா டபிள்யூஆர்வி கார் 188 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மோசமான சாலைகளில் கூட அச்சம் இல்லாமல் ஓட்டுவதற்கான நம்பிக்கையை தரும்.

09. புதிய கலர் ஆப்ஷன்

09. புதிய கலர் ஆப்ஷன்

புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் பிரிமியம் ஆம்பர் என்ற புதிய வண்ணத்திலும் வருகிறது. இன்டீரியரை பொறுத்தவரை முழுவதுமான கருப்பு அல்லது கருப்பும், நீலமும் இணைந்த இரு ஆப்ஷன்களில் வருகிறது.

10. விலை வித்தியாசம்

10. விலை வித்தியாசம்

ஹோண்டா ஜாஸ் காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.7.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் பெட்ரோல் மாடல் ரூ.6.50 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.8 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 11. ஹோண்டா டபிள்யூஆர்வி கார் எந்த ரகம்?

11. ஹோண்டா டபிள்யூஆர்வி கார் எந்த ரகம்?

எஸ்யூவி பிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், அந்த ரகத்தில் ஏராளமான புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், பட்ஜெட் விலையில் எஸ்யூவி ரக கார்களை தேடுவோருக்கு ஆப்ஷன் மிக குறைவாக இருக்கிறது. இந்த குறையை போக்கும் விதத்தில், எஸ்யூவி ரக கார்களுக்கு உரிய சிறப்பம்சங்கள் கொண்டதாக ஹேட்ச்பேக் ரக கார்களில் மாற்றங்களை செய்து கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

12. போட்டியாளர்கள்

12. போட்டியாளர்கள்

ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்படும் இதுபோன்ற கலப்பின வகை கார்களை Pseudo Crossover என்று குறிப்பிடுகின்றனர். இதுபோன்ற கார்களை உருவாக்குவதற்கான முதலீடு குறைவு. இந்த ரகத்தில் டொயோட்டா லிவா காரின் அடிப்படையிலான டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஃபியட் புன்ட்டோ எவோ காரின் அடிப்படையிலான ஃபியட் அவென்ச்சுரா ஆகிய கார்கள் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்றன. தற்போது இந்த ரகத்தில் ஹோண்டா டபிள்யூ ஆர்வி கார் வருகிறது.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Read in Tamil: Honda India's WR-V compact crossover which is based on the premium hatchback Jazz and gets several features, which were missing in the Jazz.
Story first published: Saturday, March 4, 2017, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X