புதிய ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காம்பெக்ட் செடான் கார்: சிறப்பு பார்வை
மார்க்கெட்டிற்கு புதிய வரவான ஹூண்டாய் எக்ஸ்சென்ட் செடான் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. சிறந்த வடிவமைப்பு, சரியான விலை, நன்மதிப்பை பெற்ற எஞ்சின்கள் என்று வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது.
இந்த நிலையில், புதிய காம்பெக்ட் செடான் வாங்குபவர்களுக்கு வசதியாக ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரில் இருக்கும் முக்கிய வசதிகளையும், இடையிடையில் போட்டியாளர்களான மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களைவிட இந்த காரில் இருக்கும் கூடுதல் அம்சங்களையும் எடுத்துக் காட்டும் விதமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.
டிசைன்
டிசைன்
கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த கிராண்ட் ஐ10 செடான் காரை வடிவமைக்கும்போதே, எக்ஸ்சென்ட் காம்பெக்ட் செடான் காரையும் மனதில் வைத்து டிசைன் செய்துள்ளனர். இதனால், எக்ஸ்சென்ட் வடிவமைப்பில் ஹூண்டாய் டிசைன் வல்லுனர்கள் அதிகம் மெனக்கெடவில்லை என்பது பார்த்தவுடனே தெரிகிறது.
முகப்பு
முகப்பு
எக்ஸ்சென்ட் காரின் முகப்புக்கும் இந்த காருக்கும் வேற்றுமைகள் இல்லை. ஆனால், கிரில் மற்றும் பின் பூட்லிட்டில் சில்வர் பினிஷிங் செய்து எக்ஸ்சென்ட் காரின் தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்துள்ளனர்.
பகல் நேர ரன்னிங் விளக்குகள்
பகல் நேர ரன்னிங் விளக்குகள்
எக்ஸ்சென்ட் டாப் வேரியண்ட்டுகளில் பகல் நேர ரன்னிங் விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் ஆகியவற்றுடன் கிடைக்கும் என்பது வரவேற்கத்தக்க மாற்றம்.
அலாய் வீல்கள்
அலாய் வீல்கள்
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 15 இஞ்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் காரின் வெளிப்புறத் தோற்றத்தை கவர்ச்சி மிக்கதாக காட்டுகிறது.
நீட்டிக்கப்பட்ட பின்புறம்
நீட்டிக்கப்பட்ட பின்புறம்
கிராண்ட் ஐ10 காரை போன்றே முகப்பு, பக்கவாட்டில் பாதி வரை மாற்றங்கள் இல்லை. ஆனால், பின்புற கதவிலிருந்து சிறிய மாற்றங்கள் மூலம் பின்புறத்தை நீட்டித்து 4 மீட்டருக்குள் காம்பெக்ட் செடான் காராக மாற்றியிருக்கின்றனர்.
வித்தியாசம்
வித்தியாசம்
கிராண்ட் ஐ10 காரின் கூரையில் கொடுக்கப்பட்டிருக்கும் கருப்பு நிற பிளாஸ்டிக் சட்டங்கள் இந்த செடான் காரில் இல்லை.
பின்புற தோற்றம்
பின்புற தோற்றம்
இந்த காம்பெக்ட் செடான் காரின் பின்புறம் மிகச்சிறப்பாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது, இதன் ஒட்டுமொத்த டிசைன் வாடிக்கையாளர்களை எளிதாக கவரும் என்று கூறலாம்.
பூட் ரூம்
பூட் ரூம்
மாருதி டிசையரில் 315 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூமும், ஹோண்டா அமேஸ் காரில் 400 லிட்டர் பூட்ரூமும் உள்ளது. ஆனால், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரில் 407 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது.
இன்டிரியர்
இன்டிரியர்
கேபினில் பெரும்பாலான பாகங்கள் கிராண்ட் ஐ10 காரிலிருந்து எடுத்து அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிக வித்தியாசங்கள் இல்லை. வழக்கமான ஹூண்டாய் கார்களின் தரம் இந்த காரிலும் பளிச்சிடுகிறது.
வசதிகள்
வசதிகள்
ஸ்டார்ட் ஸ்டாப் வசதி, கூல்டு கிளவ் பாக்ஸ், 1 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட மியூசிக் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகள்.
இதர வசதிகள்
இதர வசதிகள்
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா, ரியர் ஏசி வென்ட்டுகள், கப் ஹோல்டர்கள் கொண்ட ரியர் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவையும் முக்கிய வசதிகளாக கூறலாம்.
இடவசதி
இடவசதி
போட்டியாளர்களைவிட இதன் பின்புற இருக்கை மிக சிறப்பான இடவசதியை அளிக்கிறது. குறிப்பாக பின்புற இருக்கை பயணிகளுக்கு சவுகரியமான இடவசதி கொண்ட கார்.
பின் இருக்கை
பின் இருக்கை
கிராண்ட் ஐ10 காரைவிட இந்த காரின் பின்புற இருக்கை அதிக சாய்மானம் கொண்டதாக இருப்பதால், பயணிகளுக்கு சொகுசான பயணத்தை வழங்கும்.
பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பு அம்சங்கள்
முன்புறத்திற்கான டியூவல் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை டாப் வேரியண்ட்டுகளில் கிடைக்கும். அதேவேளை, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.
எஞ்சின்கள்
எஞ்சின்கள்
கிராண்ட் ஐ10 காரில் இருக்கும் அதே 1.1 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின்கள்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. டீசல் எஞ்சின் டியூனிங் செய்யப்பட்டிருப்பதால், ஒரு பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க்கையும் கூடுதலாக வழங்கும்.
டீசல் எஞ்சின் ஆற்றல்
டீசல் எஞ்சின் ஆற்றல்
டீசல் எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 180 என்எம் டார்க்கையும் அளிக்கும். இது அமேஸ், டிசையர்களை விட குறைவானதே. ஆனால், நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்து செல்லும்போது சிறப்பானதாக கூறலாம்.
டீசல் எஞ்சின்
டீசல் எஞ்சின்
டீசல் எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 180 என்எம் டார்க்கையும் அளிக்கும். இது அமேஸ், டிசையர்களை விட குறைவானதே. ஆனால், நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்து செல்லும்போது சிறப்பானதாக கூறலாம்.
அமேஸ் காரின் டீசல் எஞ்சின் 98 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க்கையும், டிசையர் காரின் டீசல் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் அளிக்கும்.
பெட்ரோல் எஞ்சின் ஆற்றல்
பெட்ரோல் எஞ்சின் ஆற்றல்
பெட்ரோல் மாடல் நகர்ப்புறத்துக்கு ஏற்ற மாடலாக கூறலாம். இந்த காரின் 1.2 லிட்டர் கப்பா எஞ்சின் 81 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் அளிக்கும். அதேவேளை, ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் எஞ்சின் 86 பிஎச்பி ஆற்றலையும், 109 என்எம் டார்க்கையும் அளிக்கிறது.
டிரான்ஸ்மிஷன்
டிரான்ஸ்மிஷன்
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. தவிர, பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலும் கிடைக்கும்.
மைலேஜ்
மைலேஜ்
எக்ஸ்சென்ட் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 19.1 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24.4 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது.
அமேஸ் - பெட்ரோல் 18 கிமீ/லி, டீசல் 25.8 கிமீ/லி
டிசையர் - பெட்ரோல் 19.1 கிமீ/லி, டீசல் 23.4 கிமீ/லி
சாதக, பாதகங்கள்
சாதக, பாதகங்கள்
சாதகங்கள்
குறைவான விலை, போதிய வசதிகள், கட்டுமான தரம், பூட் ரூம், சிறப்பான இடவசதி
பாதகங்கள்
போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது ஆற்றல் குறைவான எஞ்சின்கள், ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இடம்பெறாதது.
பணத்திற்கு மதிப்பு
பணத்திற்கு மதிப்பு
ஒட்டுமொத்தமாக கூறும்போது, பணத்திற்கு சிறந்த மதிப்பு கொண்ட காராக கூறலாம். ஆண்டின் சிறந்த காம்பெக்ட் செடான் கார் என்ற டைட்டிலையும் இந்த கார் பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
ஏ டூ இசட்
ஏ டூ இசட்
இந்த காரின் முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
காணத்தவறாதீர்கள்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக...!
Post by DriveSpark Tamil.
Most Read Articles
English summary
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X