புதிய ஜீப் செரோகியின் ஆஃப் ரோடிங் திறன் பற்றிய ஒரு அலசல்

Written By:

சர்வதேச அளவில் 'ஜீப்' பிராண்ட் மிகவும் பிரபலமானது. எஸ்யுவி ரகத்தில் இத்தயாரிப்புகளுக்கு எப்போதுமே மிகுந்த வரவேற்பு உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பியட் கிரைஸ்லர் நிறுவனத்தின் அங்கமான ஜீப்பின் 'செரோகி' மாடல் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் ஆனது. அதன் செயல்திறன் மற்றும் முழு விவரங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

2016ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ கண்காட்சியில் முதல் முறையாக ஜீப் ரேங்லர் மற்றும் செரோகி மாடல்கள் அறிமுகம் ஆனது. பின்னர் அவை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ஆனது.

ஜீப் நிறுவனத்தின் அறிமுக மாடலான ரேங்லர் பெட்ரோல் வேரியண்ட் ரூ.56 லட்சத்திற்கும், டீசல் வேரியண்ட் ரூ.71.60 லட்சம் விலையிலும் கிடைக்கிறது. (இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை). கிராண்ட் செரோகியி விலை ரூ.93 லட்சம் முதல் கிடைக்கிறது. இதன் திறன் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

முதலில் கிராண்ட் செரோகியின் டிசைன் பற்றி பார்க்கலாம்..

செரோகி ஒரு 100% தூய ஆஃப் ரோடிங் எஸ்யூவி தான் ஆனாலும் இதனை முரட்டுத்தனமாக வடிவமைக்காமல், நகரத்தினரும் பிரம்மிக்கும் வண்ணம் அட்டகாசமான தோற்றம் கொண்ட ஒரு ஆடம்பர ஆஃப்ரோடிங் எஸ்யூவியாக இதனை டிசைன் செய்துள்ளனர்.

அகலமான முன்புறம் கொண்ட செரோகியில், எல்ஈடி முகப்பு விளக்குகளில் பகல் நேரத்தில் எரியும் விதமான எல்ஈடி துணை விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஃபாக் லைட்டுகளும் உள்ளன. 20 இஞ்ச் அலாய் வீல்கள், 18 இஞ்ச் அலாய் வீல் ஆப்ஷனாகவும் கிடைக்கிறது. பின்புறத்திலும் எல்ஈடி விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

செரோகியில் பாதுகாப்பான ஏர்பேக் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க் வியூ கொண்ட ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் கீ-லெஸ் எண்ட்ரீ சிஸ்டம் ஆகியவை உள்ளன.

ஆஃப் ரோடிங் அனுபவத்தை வாரி வழங்க இதில் பிரத்யேக தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. கியர்பாக்ஸ் அருகேயுள்ள ஒரு திருகு ஸ்விட்சை பயன்படுத்தி மணல், பாறை, களிமன் மற்றும் பனி போன்ற நிலப்பரப்புகளில் பயணிக்க ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம். இது மானிட்டர் ஸ்கிரீனிலும் தெரியும்.

முன்புறம் ஒன்று, பின்புறம் இரண்டு என 3 இண்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தனித்தனியாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம். கிராண்ட் செரோகி 3 வேரியண்டுகளிலும் கிடைக்கிறது.

ஆஃப் ரோடிங் வாகனமான செரோகியின் இதயத்தை பற்றி தற்போது பார்ப்போம்.

இதில் 3.0 லிட்டர் டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 286 பிஹச்பி ஆற்றலையும், 570 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

தற்போது செரோகியின் ஆஃப் ரோடிங் திறனை பற்றி தெரிந்துகொள்வோம்.

 

ஆஃப் ரோடிங் வாகனமான செரோகியின் இதயத்தை பற்றி தற்போது பார்ப்போம்.

இதில் 3.0 லிட்டர் டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 286 பிஹச்பி ஆற்றலையும், 570 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

தற்போது செரோகியின் ஆஃப் ரோடிங் திறனை பற்றி தெரிந்துகொள்வோம்.

 

இதற்காக இதன் வீல் செட்டிங்கை ‘ஆல் வீல் டிரைவ் - low' என மாற்றியமைத்தோம். ஹில் டெசண்ட் எனும் ஆஃப்ஷன் உள்ளது, இதனை பயன்படுத்தும்போது பாறைகளில் பிரேக் பயன்படுத்தமலே ஜீப் செரோகி தவழ்ந்தது, இவை மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது. டிரைவரின் வேலை ஸ்டீரிங் செய்வது மட்டுமே, மற்ற வேலைகளை சூழ்நிலைக்கு தகுந்தவாறு தானே பார்த்துக்கொள்கிறது செரோகி.

பின்னர் பாறையை விட்டு சமதளப் பகுதியை அடையும் போது தானே பிரேக் செய்து கொண்டு நிலை நிறுத்திக்கொள்கிறது. வாகனத்தின் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க பேடில் ஷிப்ஃடர்கள் பயன்படுகிறது.

தண்ணீரில் பயணிப்பது, ஆழமான நீரில் பயணிப்பது, மலைப்பாங்கான நிலப்பரப்பில் பயணிப்பது என எந்தவித சூல்நிலையிலும் மிக இலகுவாக இதனை கட்டுப்படுத்த முடிந்தது, இதன் ஆற்றல் உண்மையில் எங்கள் குழுவினரை ஈர்த்துவிட்டது.

செயல் திறனில் வியக்க வைத்தாலும் இதன் விலை நம்மை இதனிடம் இருந்து அன்னியப்பட வைக்கிறது. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஜீப் செரோகியை வாங்குவதை விட இதன் விலையில் இரண்டு ஆஃப்ரோடிங் எஸ்யூவிக்களை வாங்கிவிடலாம் என்பதால் விலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இதனை வாங்க தயங்குவர்.

முன்னதாக கூறியதைப் போல் செரோகி 3 வேரியண்டுகளில் கிடைக்கிறது. வேரியண்ட் வாரிடான விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் செரோகி லிமிடட் - ரூ.93.64 லட்சம்
கிராண்ட் செரோகி சமிட் - ரூ.1.03 கோடி
கிராண்ட் செரோகி எஸ்ஆர்டி - ரூ.1.12 கோடி

 

English summary
jeep cherokee's review by drivespark team
Please Wait while comments are loading...

Latest Photos