மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி - சிறப்புப் பார்வை

By Saravana

எஸ்யூவி வாங்க விரும்புவோரின் பட்ஜெட் 10 லட்சத்தையொட்டியதாக இருந்து வருகிறது. அந்த நினைப்பையும், பட்ஜெட் சிக்கலையும் உடைப்பதற்காக மஹிந்திரா அறிமுகம் செய்திருக்கும் புதிய மாடல்தான் கேயூவி100. வலுவான சந்தையை கொண்டிருக்கும் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டை குறி வைத்து களமிறக்கப்பட்டிருக்கும் எஸ்யூவி வகை மாடல். பங்காளி பலேனோ காரை தவிர்த்து, மாருதி ஸ்விஃப்ட்டுக்கு அடுத்து ஒரு நெருக்கடியாகவே பார்க்கலாம்.

அடக்கமான வடிவம், 6 பேர் வரை செல்வதற்கான இடவசதி, போதிய பாதுகாப்பு அம்சங்கள், மிக குறைவான விலை கொண்ட எஸ்யூவியாக வந்திருப்பதால், ஹேட்ச்பேக் கார்களுக்கு பணத்தை தயார் செய்திருப்பவர்களின் மனதை சற்றே அசைத்து பார்த்திருக்கிறது மஹிநதிரா கேயூவி100. இந்த புதிய எஸ்யூவியின் சிறப்பம்சங்களை எடுத்தியம்பும் செய்தித் தொகுப்பாக இது அமைகிறது.

மினி எஸ்யூவி

மினி எஸ்யூவி

மஹிந்திரா குவான்ட்டோ மற்றும் டியூவி300 எஸ்யூவிகளைத் தொடர்ந்து, 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது மஹிந்திரா மாடல். முந்தைய மாடல்களை நாம் நினைவுப்படுத்துவதற்கு காரணம் இருக்கிறது. ஸைலோவை 4 மீட்டருக்குள் கத்தரித்து அவசர கோலத்தில் வந்த குவான்ட்டோ டிசைனில் சொதப்பியது. அடுத்து வந்த டியூவி300 எஸ்யூவி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று கூற முடியாது. ஆனால், அந்த குறைகளை எல்லாம் போக்கி, ஓரளவு முழுமையான மினி எஸ்யூவி வகை வாகனமாக வந்திருப்பதால், வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது.

முகப்புத் தோற்றம்

முகப்புத் தோற்றம்

டிசைனில் எம்மை கவர்ந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் மினி மாடலாக கூறப்பட்டாலும், தனக்கே உரிய பல டிசைன் சிறப்பம்சங்களுடன் தன்னை வெகுவாக வேறுப்படுத்திக் கொண்டுள்ளது. மோனோகாக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவியின் ஹெட்லைட் பானட்டின் பக்கவாட்டு விளிம்புகளில் வெகு தூரம் நீள்கிறது. ஹெட்லைட்டில் இருக்கும் எல்இடி விளக்குகள் நச்சென்றை தோற்றக் கவர்ச்சியை அளிக்கிறது. ஹெட்லைட்டுகளுக்கு இடையில், மஹிந்திரா எஸ்யூவிகளுக்கே உரித்தான க்ரில் அமைப்பு நீளவாக்கில் அமைத்திருப்பதுடன், வடிவத்தில் அடக்கி வாசிக்கிறது. பிளாஸ்டிக் பம்பர், பனி விளக்குகள், ஸ்கிட் பிளேட் ஆகியவற்றை வைத்து, தான் ஒரு எஸ்யூவி என்பதை பரைசாற்றிக் கொள்கிறது.

பக்கவாட்டுத் தோற்றம்

பக்கவாட்டுத் தோற்றம்

பக்கவாட்டில் பார்க்கும்போது, வீல் ஆர்ச் மற்றும் ரூஃப் ரெயில்களை வைத்தே இது எஸ்யூவி ரகமாக கூற முடிகிறது. இதன் அடக்கமான பக்கவாட்டு டிசைன் சட்டென பார்க்கும்போது, ஹேட்ச்பேக் கார் போன்றுதான் தோன்றுகிறது. மேலும், பின்புறத்திலிருந்து வரும் இடுப்பு மடிப்பானது பக்கவாட்டில் நீள்கிறது. மடிப்பு அம்சத்தை குலைத்து விடக்கூடாது என்ற நோக்கில், பின்புற கதவுகளுக்கான கைப்பிடிகள் ஜன்னலின் ஃப்ரேமில் கொடுக்கப்பட்டிருப்பதுடன், அது தெரிய வேண்டும் என்பதற்காக சில்வர் வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது. பெரிய வீல் ஆர்ச்சுகளுக்கு மத்தியில் 14 இன்ச் வீல்கள் கோலி ஆடுகின்றன. மொத்தத்தில் சரியான பரிமாணம் இல்லாதது போன்று தோன்றுகிறது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

இந்த எஸ்யூவியின் பின்புற டிசைன் மாற்றுக் கருத்து இல்லாமல் அனைவரையும் கவரும் என்று கூறலாம். டெயில் லைட் க்ளஸ்ட்டர், வின்ட் ஷீல்டுக்கு கீழே இருக்கும் மடிப்பு, பிளாஸ்டிக் பம்பர் ஆகியவை மிகச்சிறப்பான தோற்றத்தை தருகிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் கூரையுடன் இணைந்த ஸ்பாய்லர் வழங்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில், இந்த விலையில் நிச்சயம் ஓர் வசீகரிக்கும் தோற்றத்தை கொண்ட மினி எஸ்யூவி மாடலாக வழங்கியிருக்கிறது மஹிந்திரா.

உட்புறத் தோற்றம்

உட்புறத் தோற்றம்

இந்த எஸ்யூவியின் உள்ளே நுழைந்ததும் சற்று இடவசதி கொண்ட காராக மட்டுமில்லாமல், புதிய இன்டீரியர் டிசைனும் கவர்வதாகவே உள்ளது. வெளிர் சாம்பல் நிறம் மற்றும் பளபளக்கும் கருப்பு என இரட்டை வண்ணக் கலவையில் உள்ளது.

டேஷ்போர்டு & சென்டர் கன்சோல்

டேஷ்போர்டு & சென்டர் கன்சோல்

டேஷ்போர்டு இரட்டை அடுக்கு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் நடுவில் மிகப்பெரிய அளவிலான சென்டர் கன்சோல் கியர் லிவருடன் காட்சி தருகிறது. கியர் லிவர் மட்டுமில்லை, ஹேண்ட்பிரேக்கும் சென்டர் கன்சோலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதர இன்டீரியர் அம்சங்கள்

இதர இன்டீரியர் அம்சங்கள்

ஒரு சில குறைகள் இல்லாமல் இல்லை. கதவு கைப்பிடிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் லாக் பட்டன் தரமாக இல்லை. அலுமினிய ஃபினிஷிங் செய்யப்பட்ட 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விலைப்பட்டியலில் உள்ள பிற கார் மாடல்களை ஒப்பிடும்போது, வெளிப்புறத்தைவிட இன்டீயரிர் சிறப்பாக இருப்பதோடு, ஃபிட் அன்ட் ஃபினிஷிங்கும் நன்றாகவே உள்ளது.

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த எஸ்யூவி 5 சீட்டர் மற்றும் 6 சீட்டர் மாடல்களில் கிடைப்பது உங்களுக்கு தெரிந்ததே. குறிப்பாக, 6 சீட்டர் மாடலில் முன் வரிசையில் நடுவில் தடுப்பு இல்லாமல் இருப்பதுடன், நடுவில் உள்ள இருக்கையை தேவைப்படும் பட்சத்தில் ஆர்ம்-ரெஸ்ட் போன்று மடக்கிக் கொள்ள முடியும்.

இடவசதி

இடவசதி

தற்போது ஹேட்ச்பேக் கார்களில் மிகப்பெரிய பிரச்னை இடவசதிதான். அதனை களையும் விதமாக ஓரளவு நல்ல இடவசதியுடன் வந்துள்ளது. சில முன்னணி ஹேட்ச்பேக் கார்களைவிட சற்றே இடவசதி கொண்ட மாடலாக இருக்கும். குழந்தைகளை மடியில் வைத்து அவஸ்தையுடன் பயணிப்பவர்களுக்கு இந்த ஒரு கூடுதல் இருக்கை நிச்சயம் பெரிய நிம்மதியை வழங்கும்.

பூட் ரூம்

பூட் ரூம்

இந்த எஸ்யூவியில் 243 லிட்டர் கொள்ளவு கொண்ட பொருட்களை வைப்பதற்கான பூட் ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கைகளை மடக்கும்போது, இதனை 473 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விரிவுப்படுத்திக் கொள்ள இயலும். அதிக அளவு எடுத்துச் செல்வதற்கு கேரியர் பொருத்துவதே தீர்வாக இருக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

மஹிந்திராவின் புதிய எம் - ஃபால்கன் குடும்ப வரிசையை சேர்ந்த 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎஸ் பவரையும், 115 டார்க்கையும், டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 77 பிஎஸ் பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக உள்ளன. இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. டீசல் மாடல் இருவிதமான டிரைவிங் மோடு கொண்டதாக இருக்கிறது. அதேவேளை, 4 சிலிண்டர்களின் எஞ்சின் அளவுக்கு இந்த எஸ்யூவியின் 3 சிலிண்டர் எஞ்சின்கள் அதிர்வுகள் சற்று கூடுதலாகவே இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மைலேஜ்

மைலேஜ்

இந்தியாவின் மிக அதிக மைலேஜ் தரும் எஸ்யூவி வகை மாடலாக மஹிந்திரா குறிப்பிடுகிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.15 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.32 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13 கிமீ முதல் 15 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ.,க்கும் குறையாமலும் இருக்கும் என நம்பலாம். 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

டாப் வேரியண்ட்டில் எல்இடி பகல்நேர விளக்குகள், அலாய் வீல்கள், முன்புற, பின்புறத்திற்கான பனி விளக்குகள், கதவுகளை திறக்கும்போது கால் வைக்கும் இடத்திற்கு வெளிச்சத்தை தரும் படுல் விளக்குகள், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும் ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன. மஹிந்திராவின் புளூ சென்ஸ் அப்ளிகேஷனும் வழங்கப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக காரைப் பற்றிய பல முக்கிய எச்சரிக்கைத் தகவல்களை உங்களது மொபைல்போனிலேயே பெற முடியும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்த எஸ்யூவியின் முன்புறத்தில் மெக்பர்சன் ஸ்ட்ரட் மற்றும் காயில் ஸ்பிரிங்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பிந்புறத்தில் காயில் ஸ்பிரிங்குகளுடன் கூடிய ட்விஸ்ட் பீம் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பயணங்களை மென்மையாக்கும் என நம்பலாம்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாகவும், டியூவல் ஏர்பேக்குகள் ஆப்ஷனலாகவும் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவி 170 மிமீ தரை இடைவெளி கொண்டது. ஆஃப்ரோடு மாடல் இல்லை என்பதால், இந்த தரை இடைவெளி போதுமானதே.

பொருட்கள் வைப்பதற்கான இடவசதி

பொருட்கள் வைப்பதற்கான இடவசதி

உட்புறத்தில் பாட்டில்கள், ஆவணங்கள் மற்றும் இதர பொருட்களை வைத்துக்கொள்வதற்கான அதிக இடவசதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, காலணிகள் வைப்பதற்கான பிரத்யேக இடவசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 சென்னை விலை விபரம்

சென்னை விலை விபரம்

சென்னையில் மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.4.53 லட்சம் முதல் ரூ.6.10 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.5.35 லட்சம் முதல் ரூ.6.97 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

சிறந்த மாடல்

சிறந்த மாடல்

கடும் சந்தைப் போட்டி நிறைந்த ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. தோற்றம், இடவசதி, இருக்கை வசதி, அதிக மைலேஜ், குறைவான விலை, பாதுகாப்பு அம்சங்களில் கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான அம்சங்களை கொண்ட கார் மாடல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

யாருக்கு பெஸ்ட்?

யாருக்கு பெஸ்ட்?

இது அனைத்து தரப்பினரையும் கவரும் மாடலாக கூற முடியாது. தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு பயணிக்கும். அத்துடன் பராமரிப்பு செலவு, எஞ்சினின் நம்பகத்தன்மை போன்றவற்றையும் வாடிக்கையாளரகள் சீர்தூக்கி பார்ப்பார்கள். மொத்தத்தில் பட்ஜெட் விலையில் எஸ்யூவியை விரும்புவோர்க்கும், அதிக இருக்கை வசதியை விரும்புவோர்க்கும், சிறப்பான மைலேஜ் மற்றும் சரியான விலையில் ஓர் அருமையான சாய்ஸ். இங்கு ஹேட்ச்பேக் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, தயக்கமில்லாமல் ஒரு டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு முடிவு எடுக்கலாம்.

ஸ்விஃப்ட்டுக்கு நெருக்கடி

ஸ்விஃப்ட்டுக்கு நெருக்கடி

பலேனோவால் நெருக்கடியை சந்தித்து வரும் மாருதி ஸ்விஃப்ட்டுக்கு அடுத்து ஒரு நெருக்கடி தரும் மாடலாக கருதப்படுகிறது. ஆனாலும், இதன் டீசல் மாடலின் மைலேஜ், வசதிகள், பாதுகாப்பு, விலை போன்றவை சிறப்பான முன்பதிவுகளை பெற்றுத் தரும் என நம்பலாம்.

Most Read Articles
English summary
Mahindra KUV100 SUV Special Review.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X