மஹிந்திரா எக்ஸ்யூவி 500 Vs ஹூண்டாய் க்ரெட்டா: டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒப்பீடு

By Saravana

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பும், அதன் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலையும் பார்த்தவுடன் சுதாரித்துக் கொண்டு, உடனடியாக எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது மஹிந்திரா.

மார்க்கெட்டில் அதிகம் விரும்பப்படும் இந்த இரு மாடல்களின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப அம்சங்களை ஒப்பீடு செய்து காணலாம். இந்த செய்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியுடன், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.6 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப அம்சங்களை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.

 ஆன்ரோடு விலை ஒப்பீடு

ஆன்ரோடு விலை ஒப்பீடு

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 ஆட்டோமேட்டிக்

  • W8 ஆட்டோமேட்டிக்: ரூ.18.26 லட்சம்
  • W10 ஆட்டோமேட்டிக்: ரூ.19.22 லட்சம்
  • W10 ஆட்டோமேட்டிக் AWD: ரூ.20.38 லட்சம்
  • க்ரெட்டா எஸ்யூவி டீசல் ஆட்டோமேட்டிக்

    • 1.6 எஸ்எக்ஸ் ப்ளஸ்: ரூ.16.12 லட்சம்
    • குறிப்பு: அனைத்து விலைகளும் டெல்லி ஆன்ரோடு விலைகளை அடிப்படையாகக் கொண்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் 3 விதமான மாடல்களில் கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் 1.6 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.

      டிசைன்: மஹிந்திரா எக்ஸ்யூவி 500

      டிசைன்: மஹிந்திரா எக்ஸ்யூவி 500

      அனைவராலும் விரும்பப்படும் கம்பீரமான எஸ்யூவி மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி500. சிறுத்தையை போன்ற முக அமைப்பை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்டதாக மஹிந்திரா கூறியது. சமீபத்தில் புதிய க்ரில் அமைப்பு, பகல்நேர விளக்குகள், புதிய பனி விளக்குகள் பொருத்ப்பட்டு புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

      டிசைன்: ஹூண்டாய் க்ரெட்டா

      டிசைன்: ஹூண்டாய் க்ரெட்டா

      ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி நவீன யுகத்துக்கான மாடலாகவே கூறலாம். புளூயிடிக் 2.0 டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்ட ஹூண்டாய் மாடல்கள் மிகச்சிறப்பான டிசைன் கொண்டதாக வருகின்றன. அந்த வகையில், சமீபத்திய வரவான ஹூண்டாய் க்ரெட்டாவின் டிசைனும் அசத்தலாக இருக்கிறது. இந்த காரின் வெற்றிக்கு டிசைன் மிக முக்கியமானதாக தெரிவிக்கலாம். இரு எஸ்யூவிகளும் வெவ்வேறு ரசனை மற்றும் பயன்பாடு கொண்ட வாடிக்கையாளர்களை தம்தம் விதத்தில் ஈர்ப்பதாக இருக்கின்றன. எனவே, இரண்டின் டிசைனிலும் குறையாக எதையும் கூறுவதற்கில்லை.

      மஹிந்திரா எக்ஸ்யூவி 500: சிறப்பம்சங்கள் & வசதிகள்

      மஹிந்திரா எக்ஸ்யூவி 500: சிறப்பம்சங்கள் & வசதிகள்

      மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆட்டோமேட்டிக் மாடலில் ஏராளமான வசதிகள் உள்ளன. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சன்ரூஃப், ஜிபிஎஸ் வசதியுடன் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், விரயமாகும் பிரேக் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்பம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை குறிப்பிட்டு கூறலாம்.

      ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்

      ஹூண்டாய் க்ரெட்டா: சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்

      ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியிலும் வசதிகளுக்கு பஞ்சமில்லை. ஆடியோ வீடியோ நேவிகேஷன் சிஸ்டம், 5 இன்ச் டச்ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கீ, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பொசிஷனிங் விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வசதிகளை பொறுத்தவரையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 முன்னிலை பெறுகிறது.

       எஞ்சின்: மஹிந்திரா எக்ஸ்யூவி 500

      எஞ்சின்: மஹிந்திரா எக்ஸ்யூவி 500

      மஹிந்திரா எகஸ்யூவி 500 எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே கிடைப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மஹிந்திரா எக்ஸ்யூவியில் 140 பிஎச்பி பவரையும், 330என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின் உள்ளது. இதில், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், எக்ஸ்யூவி 500வின் ஆட்டோமேட்டிக் மாடல் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைப்பதையும் மனதில் வைக்க வேண்டும்.

       எஞ்சின்: ஹூண்டாய் க்ரெட்டா

      எஞ்சின்: ஹூண்டாய் க்ரெட்டா

      ஹூண்டாய் க்ரெ்டடா எஸ்யூவியில் 126 பிஎச்பி பவரையும், 265 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல, 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் உள்ளது. இந்த டீசல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஹூண்டாய் க்ரெட்டா ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக மட்டுமே கிடைக்கிறது. அதிகசக்திவாய்ந்த எஞ்சின், இருவிதமான டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 முன்னிலை பெறுகிறது.

      மைலேஜ்

      மைலேஜ்

      மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 13.85 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் க்ரெட்டா முன்னிலை பெறுகிறது. மேலும், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியில் 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க்கும், ஹூண்டாய் க்ரெட்டாவில் 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க்கும் உள்ளது.

      பாதுகாப்பு: மஹிந்திரா எக்ஸ்யூவி 500

      பாதுகாப்பு: மஹிந்திரா எக்ஸ்யூவி 500

      ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், காரை நிலைத்தன்மையுடன் செலுத்தும் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகளுடன் மொத்தமாக 6 ஏர்பேக்குகள், வளைவுகளில் திரும்பும்போது சரியான திசையில் ஒளியை பாய்ச்சும் ஸ்டேட்டிக் ஹெட்லைட்டுகள், மலைச்சாலைகளில் காரை பின்னோக்கி நகர்ந்துவிடாமல் தவிர்க்கும் ஹில் ஹோல்டு மற்றும் மலைப் பாதைகளில் இறங்கும்போது பாதுகாப்பாக இறங்குவதற்கான ஹில் டிசென்ட் கன்ட்ரோல் போன்ற பல முக்கிய பாதுகாப்பு அம்சங்களை மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் பெற்றிருக்கிறது.

      பாதுகாப்பு: ஹூண்டாய் க்ரெட்டா

      பாதுகாப்பு: ஹூண்டாய் க்ரெட்டா

      ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியிலும் சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் போன்ற வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஹூண்டாய் க்ரெட்டாவில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. ஆனால், சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் ஆட்டோமேட்டிக் சிறிது முன்னிலை பெறுகிறது.

      எது சிறந்தது?

      எது சிறந்தது?

      இரண்டு மாடல்களையும் சரிக்கு சமமாக வைத்து எடை போட முடியாது. எனினும், எஸ்யூவி செக்மென்ட்டில் தற்போது டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்கள் என்றும் வரும்போது இந்த இரண்டு மாடல்கள் மிக முக்கியமானதாக இருக்கிறது. மாடர்ன் டிசைன், நகர்ப்புறத்திற்கும், தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற சிறப்பம்சங்கள், அதிக மைலேஜ், குறைவான விலை போன்றவற்றை வைத்து பார்க்கும்போது ஹூண்டாய் க்ரெட்டாதான் பெஸ்ட். அதேநேரத்தில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியில் 5 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியில் 7 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்டது. அத்துடன், வலுவான கட்டமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள், வசதிகளை வைத்து பார்க்கும்போது மஹிந்திரா எ்ஸ்யூவி 500 சிறந்ததாக இருக்கிறது.

      தீர்ப்பு

      தீர்ப்பு

      இந்த இரண்டு கார்களும் டிசைனிலும், வசதிகளிலும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுகின்றன. எனவே, உங்களது பயன்பாட்டை பொறுத்தே தேர்வு அமையும். பட்ஜெட் பற்றி கவலை இல்லை, அதிக இருக்கை வசதி, சிறப்பம்சங்கள், பாதுகாப்பு வசதிகள் நிரம்பிய மாடல் வேண்டுவோர்க்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் ஆட்டோமேட்டிக் பெஸ்ட். ஆனால், விலை, டிசைன், வசதிகள் என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஹூண்டாய் க்ரெட்டா சிறந்ததாக இருக்கிறது என்பதே எமது கருத்து.

      தொடர்புடைய இதர செய்திகள்

      01. மஹிந்திரா டியூவி 300 Vs ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்: ஒப்பீடு

      02.யமஹா ஆர்3 Vs கவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் ஆர்சி 390: எது வாங்கலாம்!!

      03.தனி ஒருவன்... ரெனோ க்விட் கார் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

Most Read Articles
English summary
Mahindra XUV 500 vs Hyundai Creta Automatic: Comparison.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X