விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்த மாருதி வேகன் -ஆர்: வெற்றி ரகசியம்?!

By Saravana

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றான மாருதி வேகன் ஆர் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட தினத்திலிருந்து இதுவரை 15 லட்சம் வேகன் ஆர் கார்கள் விற்பனையாகியுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பல முன்னணி கார் மாடல்கள் தடுமாறிய நிலையில், வழக்கத்தைவிட சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து மாருதிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. மாருதிக்கு மட்டுமல்ல, வாடிக்கையாளர்களிடத்தும் நன்மதிப்பை பெற்ற இந்த கார் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்வதற்கான ஒரு சில காரணங்கள் மற்றும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்த்தியை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்

அறிமுகம்

2000ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட வேகன் ஆர் மாடலை அவ்வப்போது மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகிறது மாருதி. கடந்த 2013- 14 நிதி ஆண்டில் 1,56,300 லட்சம் வேகன் ஆர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 93,000 வேகன் ஆர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. வேகன் ஆர் காரை குறிவைத்து பல புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், நெருக்கடிகளை தகர்த்து தொடர்ந்து வெற்றிகரமான மாடலாக உலா வருகிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் மாருதி வேகன் ஆர் காரின் சிறப்பம்சங்களை காணலாம்.

டால்பாய் டிசைன்

டால்பாய் டிசைன்

உயரமானவர்களுக்கு சிறந்த இடவசதி கொண்ட பட்ஜெட் விலையிலான கார். ஓட்டுனருக்கு சிறந்த ஹெட்ரூம் மற்றும் லெக்ரூமை வழங்குவதால் உயரம் ஒரு பிரச்னை இல்லை. 5 பேர் செல்வதற்கான இடவசதி கொண்ட மாடல். ஆனால், பின்புறத்தில் இருவர் அமர்ந்து சென்றால் நெருக்கடி இல்லாமல் இருக்கும்.

 ஓட்டுவது எளிது

ஓட்டுவது எளிது

அடக்கமான டிசைன் கொண்டிருப்பதால், போக்குவரத்து நெரிசலில் மிக எளிதாக ஓட்டிச் செல்வதற்கும், அலுவலகம் மற்றும் இதர இடங்களில் பார்க்கிங் செய்வதற்கும் ஏற்ற மாடல். வீட்டில் நெருக்கடியான பார்க்கிங் இடவசதி உள்ளவர்களும் பிற மாடல்களை தவிர்த்து இந்த காரை வாங்க தேர்வு செய்கின்றனர்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்த காரில் அலுமினியம் மூலப்பொருளாக கொண்டு வடிவமைக்கப்பட்ட 1.0 லிட்டர் (998சிசி) 3 சிலிண்டர் கேபி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க்கையும் அளிக்கும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

எரிபொருள் வகை

எரிபொருள் வகை

மூன்று விதமான எரிபொருள் வகைகளில் கிடைக்கிறது. பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி மாடல்களிலும் கிடைக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது. எல்பிஜி, சிஎன்ஜி மாடல்கள் சிறந்த எரிபொருள் சிக்கனம் தருவதோடு, எரிபொருள் செலவீனமும் குறைவு என்பதும் முக்கியம்.

 மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் நெடுஞ்சாலையில் 17- 18 கிமீ மைலேஜையும், நகர்ப்புறத்தில் 14- 15 கிமீ மைலேஜையும் தருகிறது. சராசரியாக லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தரும். இதன்காரணமாக தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற சிறந்த பெட்ரோல் மாடலாக இருக்கிறது. இந்த காரில் 35 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் டேங்க் இருக்கிறது. ஒருமுறை முழுமையாக நிரப்பினால் 500 கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதுவே சிஎன்ஜி மற்றும் எல்பிஜி மாடல்கள் கூடுதலாக 300கிமீ தூரம் செல்ல முடியும்.

பூட்ரூம்

பூட்ரூம்

இந்த காரில் 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பின்புற இருக்கை 60: 40 அளவில் மடக்கி வைத்து பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். பார்சல் ட்ரேவும் வழங்கப்படுகிறது. சிறிய குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை இதில் அடக்கிவிடலாம். கூடுதலாக பொருட்களை வைப்பதற்கு கேரியர் கூட பொருத்திக் கொள்ளலாம்.

பராமரிப்பு

பராமரிப்பு

குறைவான பராமரிப்பு செலவீனம் கொண்ட மாடல் என்பதும் இதற்கு வலுசேர்க்கிறது. முதல் சில ஆண்டுகளுக்கு சில ஆயிரங்களில் சர்வீஸ் செய்துவிட முடியும். பெரிய அளவில் பராமரிப்பு செலவீனம் இருக்காது.

வசதிகள்

வசதிகள்

புஷ் டூ ஓபன் கப் ஹோல்டர், பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், சைல்டு லாக், ஏசி, ஈகிள் விங் ஆடியோ சிஸ்டம் என பல அடிப்படை வசதிகளை தரும் பட்ஜெட் விலையிலான மாடல். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 6 விதமான வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ள முடியும். ரியர் வைப்பர், டீஃபாகர், வாஷர் போன்ற வசதிகளும் விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் கிடைக்கிறது. டில்ட் ஸ்டீயரிங், இருக்கைக்கு கீழே பார்சல் டிரேவும் உள்ளது.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

டாப் வேரியண்ட்டில் ஓட்டுனருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட்பெல்ட் இண்டிகேட்டர் மற்றும் அலாரம் வசதியுடன் கூடிய சென்டர் லாக்கிங் போன்ற பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு பிரேக் பிடிப்பது தெளிவாக ஹை மவுண்ட் பிரேக் லைட், பனி விளக்குகள் போன்றவை உள்ளன

 விலை

விலை

ரூ.5 லட்சத்தில் நிறைவான வசதிகளுடன் கூடிய ஓர் பட்ஜெட் கார் வாங்க விரும்புவர்களுக்கு சரியான சாய்ஸ். பெரும்பாலான டீலர்களில் இந்த காருக்கு சிறப்பான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

 பெயரை கெடுத்த ஸ்டிங்ரே

பெயரை கெடுத்த ஸ்டிங்ரே

மாருதி வேகன் ஆர் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இதன் பிரிமியம் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்டிங்ரே விற்பனையில் சொதப்பி வருகிறது. அதற்கு அதன் விலையே எதிரியாகிவிட்டது. தோற்றத்திலும் வாடிக்கையாளர்களை கவரவில்லை. இந்த நிலையில், செலிரியோ, ஆல்ட்டோ கே10 கார்களை தொடர்ந்து வேகன் ஆர் ஸ்டிங்ரே மாடலிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் வந்தாலும் ஸ்டிங்ரே விற்பனையில் ஏற்றம் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாருதி வேகன் ஆர் முழு விபரம்

மாருதி வேகன் ஆர் முழு விபரம்

மாருதி வேகன் ஆர் காரின் முழு விபரங்களையும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Maruti Wagon R car sales has crossed 15 lakh mark in domestic market, Company said in statement.
Story first published: Wednesday, November 26, 2014, 12:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X