பென்ஸ் ஏ கிளாஸ் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

பென்ஸ் தலையெழுத்தை மாற்றி எழுத வந்திருக்கிறது ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார். சொகுசு கார் மார்க்கெட்டில் தற்போது குறைந்த விலை காராக அறியப்படும் ஏ கிளாஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு சமீபத்தில் டிரைவ்ஸ்பார்க் டீமிற்கு கிடைத்தது.

பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைத்து 750 கிலோமீட்டர் வரை பென்ஸ் ஏ கிளாஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த அனுபவங்களின் அடிப்படையில் பென்ஸ் ஏ கிளாஸ் காரில் இருக்கும் சாதக, பாதகங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்திய பிரவேசம்

இந்திய பிரவேசம்

கடந்த மே மாதம் 30ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது பென்ஸ் ஏ கிளாஸ் கார். மார்க்கெட்டில் குறைந்த விலை சொகுசு கார் என்ற முத்திரையுடன் வாடிக்கையாளர்களிடமும் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றதுடன், மூன்றாம் இடத்திலிருந்து பென்ஸ் முதலிடத்தை நோக்கி வந்ததற்கு காரணமாக காராக மாறியுள்ளது.

டிசைனர்

டிசைனர்

பென்ஸ் டிசைனர் மார்க் ஃபெதர்ஸ்டன் கைவண்ணத்தில்தான் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. சொகுசு ஹேட்ச்பேக் காருக்கான டிசைன் தாத்பரியங்களை மிக நேர்த்தியாக வழங்கியுள்ளனர் பென்ஸ் டிசைன் டீம். குறிப்பாக, பென்ஸ் ஏ கிளாஸ் காரின் ஏரோடைனமிக்ஸ் டிசைன் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. இந்த ரகத்தில் பென்ஸ் ஏ கிளாஸ் காரின் டிராக் எஃபிசியன்ட் திறன் 0.26 என்பது குறிப்பிடத்தக்கது.

முகப்பு

முகப்பு

சரியான நீளத்துடன் கூடிய பரந்து விரிந்த பானட், கற்கள் பதிக்கப்பட்ட பின்னணி கொண்ட கிரில், அதன் முன்பு ஒற்றை குரோம் பட்டையில் தாங்கி நிற்கும் கம்பீரமான பென்ஸ் நட்சத்திர சின்னம் ஆகியவை மிகச் சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது. இந்த பிரத்யேக கற்கள் பதிக்கப்பட்ட கிரில்லுடன் மொத்தம் 400 கார்களை மட்டுமே விற்பனை செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

பின்னிருந்து முன்னோக்கி பயணிக்கு ஹெட்லைட் மிக அசத்தலாக இருப்பதையும் கூற வேண்டும். எல்இடி ஹெட்லைட்டுடன், பகல்நேர ரன்னிங் விளக்குகளும் வசீகரத்தை கூட்டுகிறது.

பக்கவாட்டு தோற்றம்

பக்கவாட்டு தோற்றம்

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்குரிய பிரத்யேக கிரீஸ் லைன்களுடன், மிக தாழ்வாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, இது ஹேட்ச்பேக் காராக இருந்தாலும், ஃபோக்ஸ்வேகன் ஜெட்டாவைவிட கூடுதல் வீல் பேஸ் கொண்டது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை புகைபோக்கி குழல்கள் என சொகுசு காராக தன்னை பரைசாற்ற முயல்கிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

ஏ கிளாஸ் காரின் கருப்பு நிற இன்டிரியர் மிகச் சிறப்பான தரம் மற்றும் அலங்காரத்துடன் பிரிமியமாக காட்சி தருகிறது. கேபினும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளதால் காரை ஓட்டும்போது கூடுதல் நம்பிக்கையை தருகிறது. சன்ரூஃப், பென்ஸின் பிரத்யேக டிசைன் கொண்ட ஏசி வென்ட்டுகள் மனதை நிறைக்கிறது.

 தொடுதிரை

தொடுதிரை

நேவிகேஷன் மற்றும் தகவல் தொடர்புக்கான திரை தனியாக டேஷ்போர்டின் நடுநாயகமாக அமர்ந்திருக்கிறது. அதன் கீழே ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு கீழே படிப்படியாக மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளுடன் மெல்ல இறங்குகிறது சென்ட்ரல் கன்சோல்.

 டிரைவிங் பொஷிசன்

டிரைவிங் பொஷிசன்

டிரைவிங் பொஷிசன் நன்றாக இருப்பதுடன், ஸ்டீயரிங் வீலும் கைக்கு லாவகமாக இருக்கிறது. கன்ட்ரோல் சுவிட்சுகள் ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டுள்ளன. பேடில் ஷிப்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இருக்கைகள்

இருக்கைகள்

ஏ கிளாஸ் காரின் இருக்கைகள் சிறப்பாக இருக்கிறது. டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. அதனுடனேயே ஹெட்ரெஸ்ட் இணைக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இளைய சமுதாயத்தினருக்கான காராக நிலைநிறுத்துவதாக பென்ஸ் அறிவித்த நிலையில், நாம் டெஸ்ட் டிரைவ் செய்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1,595 சிசி பெட்ரோல் எஞ்சின் போதிய பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாக இல்லை. நகர்ப்புறத்தில் பென்ஸ் ஏ கிளாஸ் காரின் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை. ஆனால், இதன் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் கியர் பாக்ஸ் மிக ஸ்மூத்தாக இருக்கிறது.

இடவசதி

இடவசதி

டிரைவிங் பொசிஷன் நன்றாக இருந்தாலும், உயரமானவர்களுக்கு இது சவுகரியமான காராக இருக்காது. பெரிய ஹேட்ச்பேக் காராக புகழ்ந்தாலும் இடவசதியில் சிறப்பான கார் இல்லை ஏ கிளாஸ். குறிப்பாக, மிக குறைவான லெக்ரூமை கொண்டிருக்கிறது.

 மைலேஜ்

மைலேஜ்

எங்களது கடினமான நிலைகளில் வைத்து சோதனை செய்ததில் லிட்டருக்கு 8.06 கிமீ மைலேஜ் கொடுத்தது. (அராய் மைலேஜ் கொடுத்த சான்றுபடி லிட்டருக்கு 15.5 கிமீ.)

டிரைவிங்கில் கவனம்

டிரைவிங்கில் கவனம்

மோசமான சாலைகளில் செல்வதற்கு ஏ கிளாஸ் என்று சொல்ல முடியாது. நல்ல சாலையாக இருந்தால் ஏ கிளாஸ் எஞ்சினை தட்டிவிட்டு பார்க்கலாம். இதன் கிரவுன்ட் கிளியரன்ஸ் நம்மை டிரைவிங்கின்போது அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு 200 கிமீ.,க்கும் அதிகம் என்றாலும், அதனை சோதித்து பார்க்க விரும்பாத அளவுக்கு மிகவும் கவனமாக ஓட்ட வேண்டியிருக்கிறது.

சாதகங்கள்

சாதகங்கள்

சிறப்பான இன்டிரியர்

தொழில்நுட்ப வசதிகள்

சிறந்த 7 ஸ்பீடு கியர்பாக்ஸ்

பாதகங்கள்

பாதகங்கள்

பவர் வெளிப்பாடு சிறப்பாக இல்லை

ஹெட்ரூம் குறைவு

4 சீட்டர் கார்

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

குறைவான விலை, தொழில்நுட்ப சிறப்பம்சங்கள், டிசைன் என அனைத்திலும் சிறப்பானதாக இருந்தாலும், இடவசதி, பெர்ஃபார்மென்ஸ் போன்றவற்றில் சமரசம் செய்து கொண்டால் ஏ கிளாஸ் பக்கம் செல்லலாம். எதற்கும் இன்று அறிமுகமாகும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரை ஒரு எட்டு பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Customers are definitely Mercedes's greatest asset. I do not own a Mercedes, however after 750 kilometers and counting, I soon realized I was behind the wheels of a funky and contemporary Mercedes-Benz. The Mercedes I am driving is the baby of the Benz fleet. My first impression of this new baby is far from what I feel now.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X