ஆஃப் ரோடில் ஜமாய்த்த போர்ஷே கேயேன், மசான் எஸ்யூவி கார்கள்..!!

Written By:

ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு அங்கமான போர்ஷே நிறுவனம், பந்தயக் கார்கள் தயாரிப்பில் உலகளவில் பிரபலமான நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது.

சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், இந்தியாவில் கேயேன் மற்றும் மசான் என இரண்டு எஸ்யூவிக்களை விற்பனை செய்து வருகிறது.

மதிப்புமிகு பிராண்டான போர்ஷேவின் கேயேன் மற்றும் மசான் எஸ்யூவிக்களை நமது டிரைவ் ஸ்பார்க் குழுவினர் அண்மையில் பெங்களூருவில் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளனர். இந்த இரு எஸ்யூவிக்களின் திறனை அலசி ஆராய்கிறது இந்த தொகுப்பு.

போர்ஷே கேயேன் எஸ்யூவியில் அதிகபட்சமாக 242 பிஹச்பி ஆற்றலையும், 550 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல 3.0 லிட்டர் டர்போ டீசல் இஞ்சின் உள்ளது.

இதே போல போர்ஷே மசான் எஸ்யூவியில் அதிகபட்சமாக 248.5 பிஹச்பி ஆற்றலையும், 350 என்எம் டார்க்கையும் வழங்கவல்ல 2.0 லிட்டர் டர்போசார்ஜூடு பெட்ரோல் இஞ்சின் உள்ளது.

இரண்டு எஸ்யூவிக்களிலுமே ஆக்டிவ் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. மேலும் இரண்டிலுமே பிரத்யேக ஆஃப் ரோட் மோட் உள்ளது. மசான் எஸ்யூவியில் டச் பட்டனும், கேயேன் எஸ்யூவியில் ஸ்விட்ச் மூலமும் ஆஃப் ரோட் மோடில் இயக்கலாம்.

ஆஃப் ரோட் மோட் பயன்பாட்டிற்கு தகுந்த வகையில் போர்ஷேவின் ‘வெக்டரிங் பிளஸ்' மற்றும் ‘ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட்' தொழில்நுட்பங்கள் தங்களின் செட்-அப்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன.

ஆக சிறந்த ஆஃப் ரோடிங் அனுபவத்தை வழங்கவல்ல தொழில்நுட்பங்கள் அடங்கிய இந்த இரு எஸ்யூவிக்களையும் பரிசோதனை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. களத்தில் நாம் பரிசோதித்ததை இங்கு விரிவாக காணலாம்.

இந்தப் பரிசோதனையின் முதல்கட்டமாக கேயேன் மற்றும் மசான் கார்களை முதலில் கரடுமுரடான பாறைகள் நிறைந்த செங்குத்தான கீழ்நோக்கு பாதையில் செலுத்தினோம்.

பாறைகள் நிறைந்த சாலையை எந்தவித அலட்டலும் இல்லாமல் இரண்டு கார்களும் கடந்து தங்களின் திறமையைக் காட்டின.

 

இந்தப் பரிசோதனையின் முதல்கட்டமாக கேயேன் மற்றும் மசான் கார்களை முதலில் கரடுமுரடான பாறைகள் நிறைந்த செங்குத்தான கீழ்நோக்கு பாதையில் செலுத்தினோம்.

பாறைகள் நிறைந்த சாலையை எந்தவித அலட்டலும் இல்லாமல் இரண்டு கார்களும் கடந்து தங்களின் திறமையைக் காட்டின.

 

அடுத்ததாக ஒரு சுவாரஸ்யமான பரிசோதனைக்கு இந்த எஸ்யூவிக்களை நாம் உட்படுத்தினோம்.

அதிகமான மேடு பள்ளங்கள் நிறைந்த ஒரு ஒழுங்கற்ற சாலையில் இந்த கார்களை ஓட்டிச் சென்றோம். இதர கார்களை இந்த சாலையில் ஓட்டிச் சென்றால் நிச்சயம் அது ஆக்ஸிலை பதம் பார்த்து விடும். ஆனால் போர்ஷே கார்கள், ஏதோ சிறிய சாலைப்பள்ளத்தை கடப்பது போன்ற நேர்த்தியாக கடந்து சென்றது.

போர்ஷேயின் கேயேன் மற்றும் மசான் கார்களை அடுத்து ஆபத்து நிறைந்த ஒரு பரிசோதனைக்கு நமது குழு உட்படுத்தியது.

30 டிகிரி சாய்வு தளமான பாதையில் இந்த கார்களை ஓட்டிச் சென்றோம், இரண்டு கார்களின் ஆஃப் ரோடிங் தொழில்நுட்பமும் இந்த சமயத்தில் சிறப்பாக வேலை செய்வதை உணர முடிந்தது. சாய்வுதளத்தில் பயணித்த போது எந்த வீல்களில் கிரிப் கிடைக்கின்றதோ அந்த வீல்களுக்கு இஞ்சின் பவர் அதிகமாக செலுத்தப்பட்டு சிறந்த பிடிமானத்துடன் காரை செலுத்த உதவியது.

அடுத்து பாதையில் சில சிறிய சாய்வுதளங்களை சந்தித்த பின்னர் மலை உச்சி போன்ற ஒரு இடத்திற்கு வந்து நின்ற போது, இந்தப் பாதையில் இறங்கினால் கார் சரிந்து விழுமோ என்ற அச்சம் நமக்கு எழாமல் இல்லை.

போர்ஷேவின் ஹில் கண்ட்ரோல் தொழில்நுட்பம் காரின் வேகத்தை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தி, 4 வீல்களையும் பிரேக் செய்தது. மேலும் ஏபிஎஸ் தொழில்நுட்பமானது வீல்கள் லாக் ஆகாமல் தடுத்து நிறுத்தியது. பின்னர் சாதாரண சாலையில் பயணிப்பதை போன்று அலட்டலே இல்லாமல் அந்த மலையில் இருந்து இறங்கி வந்தது மெய்சிலிர்க்க வைத்தது.

அடுத்ததாக சகதி நிறைந்த ஒரு பாதையில் கார் இறக்கி பரிசோதிக்கப்பட்டது, வழவழப்புத்தன்மை அதிகம் நிறைந்த அந்த தண்ணீர் நிரம்பிய குழியை விட்டு வேறு கார்கள் வந்திருக்க முடியாது. இந்த சோதனையின் போது மட் கார்டில் சில கறைகள் ஏற்படுத்தியதே தவிர எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரண்டு கார்களும் மேலே வந்தன.

அதிக விலை கொண்டதாக மதிக்கப்படும் போர்ஷேவின் கேயேன் மற்றும் மசான் கார்கள், உட்புறத்தில் பல சொகுசு அம்சங்களை கொண்டிருந்தாலும், இவற்றின் உண்மையான திறன் எஸ்யூவிக்களின் ஸ்போர்டி அம்சங்களுள் தான் அடங்கியிருக்கிறது என்பது நமக்கு கண்கூடாக தெரிந்தது.

இந்த கரடுமுரடான சோதனையில் ரூ.78.97 லட்சம் ( எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) விலை கொண்ட மசான் பெட்ரோல் கார் தன்னை நிரூபித்த நிலையில், ரூ.1.1 கோடி ( எக்ஸ்-ஷோரூம் பெங்களூரு) விலை கொண்ட கேயேன் டீசல் கார் நம்மை பிரம்மிக்க வைத்தது.

போர்ஷே கேயேன் கார் 0-100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டிப்பிடித்துவிடுகிறது. கேயேன் காரின் உண்மையான ஆற்றல் சாலைகள் அற்ற நிலையில் தான் வெளிப்படுகிறது என்பது நமது தாழ்மையான கருத்து.

Story first published: Wednesday, June 14, 2017, 15:54 [IST]
English summary
Read in Tamil about Porsche cayanne
Please Wait while comments are loading...

Latest Photos