ரெனால்ட் க்விட் Vs மாருதி செலிரியோ ஆட்டோ மேடிக்... முந்தப் போவது யார்?

By Meena

இப்போதெல்லாம் கார் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் புதிதாக ஒரு கேள்வியை ஷோ ரூமில் எழுப்புகின்றனர். ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் இந்த காரில் இருக்கிறதா? என்பதுதான் அது... முன்பெல்லாம் ஆரம்ப நிலை கார்களையோ அல்லது நடுத்தரக் கார்களையோ வாங்கும்போது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பல அம்சங்கள் இப்போது அனாயசமாக அறிமுகமாகிவிட்டன.

ரூ.3 லட்சம் விலையுடைய கார்களில் கூட ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன், ஏர்-பேக், இன்ஃபோயின்மென்ட் சிஸ்டம் என சொகுசு கார்களில் உள்ள அம்சங்கள் எல்லாம் வந்துவிட்டன. அந்த அடிப்படையில் ஆரம்ப நிலைக் காரான ரெனால்ட் க்விட்டிலும் தற்போது ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன் அறிமுகமாகியுள்ளது. அந்த மாடலுக்கும், அதே வசதியைக் கொண்ட மற்றொரு ஹேட்ச்பேக் காரான மாருதி செலீரியோக்கும் இடையேயான ஒப்பீடைப் பார்க்கலாம்...

 செலிரியோ டிசைன்

செலிரியோ டிசைன்

மாருதி செலிரியோவைப் பொருத்தவரை பக்கா பாக்ஸி டைப் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதைத்தவிர முகப்பு விளக்குள் மற்றும் பின்புற விளக்குகள் (டெய்ல் லேம்ப்ஸ்) ஆகியவை வித்தியாசமான டிசைனில் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

 க்விட் டிசைன்

க்விட் டிசைன்

க்விட் மாடலின் டிசைன், ரெனால்ட் டஸ்டரைப் போல உள்ளது. எஸ்யூவி ரக வடிவமைப்புடன் அந்த மாடல் இருப்பதால், அதற்கென தனி ஆடியன்ஸ் உருவாகியிருக்கிறார்கள்.

 செலிரியோ இன்டீரியர்

செலிரியோ இன்டீரியர்

இன்டீரியரை எடுத்துக் கொண்டால் செலிரியோ மாடலில் கிளாஸாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. டூயல் கலரில் வடிவமைக்கப்பட்டிருப்பது ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இதைத் தவிர ஏசி, கண்ட்ரோல் சிஸ்டத்தின் ஸ்ட்ரக்ச்சர் யு வடிவில் உள்ளது.

க்விட் இன்டீரியர்

க்விட் இன்டீரியர்

க்விட்டின் உள்புற வடிவமைப்பு, மாடர்னான தோற்றத்தை அளிக்கிறது. ஏசி கண்ட்ரோல் வட்ட வடிவில் உள்ளது. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த இரு மாடல்களின் கேபின்களிலும் அதிக இடவசதிகள் இருப்பது வாடிக்கையாளர்களைக் கவரும் முக்கிய அம்சமாகும்.

செலிரியோ எஞ்சின்

செலிரியோ எஞ்சின்

மாருதி செலிரியோ காரில் இருக்கும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின், 67 பிஎச்பி திறன், 90 என்எம் டார்க்கை அளிக்கும்.

 க்விட் எஞ்சின்

க்விட் எஞ்சின்

க்விட் - 1.0 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின், 65 பிஎச்பி திறன், 72 என்எம் டார்க்கை வழங்கும். இந்த இரண்டு கார்களிலுமே 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

மைலேஜை எடுத்துக் கொண்டால், மாருதி செலீரியோவைக் காட்டிலும் கூடுதல் கிலோ மீட்டர்களை க்விட் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுகிறது. அதாவது, மாருதி செலிரியோ ஏஎம்டி மாடல் லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், க்விட் ஏஎம்டி மாடல் நிச்சயம் இதே அளவு மைலேஜ் தரும் என்று நம்பலாம். மைலேஜில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது.

பூட் ரூம்

பூட் ரூம்

உடைமைகளை எடுத்துச் செல்லும் பூட்ஸ்பேஸ் வசதி க்விட்டில் 300 லிட்டரும், செலீரியோவில் 235 லிட்டரும் உள்ளன. மிக முக்கியமான இந்த அம்சத்தில் க்விட் முன்னிலை பெறுகிறது. அதுமட்டுமில்லை, கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் சாலைக்கும், காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி க்விட்டில் 180 மில்லி மீட்டரும், செலீரியோவில் 165 மில்லி மீட்டரும் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இதைத் தவிர சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், சைல்ட் லாக் சிஸ்டம், பவர் விண்டோஸ் ஆகியவை இந்த இரு மாடல்களிலும் உள்ளன. க்விட்டில் டிரைவர் சைடு ஏர்-பேக் உள்ளது. செலீரியோவில் அந்த வசதி இல்லை. பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்களில் க்விட் 8 மதிப்பெண்களும், செலிரியோ 7.5 மதிப்பெண்களும் பெறுகின்றன.

இறுதி ஒப்பீடு

இறுதி ஒப்பீடு

மிகச்சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க், நம்பகத்தன்மை போன்றவற்றில் மாருதி மாடல்களுக்கே முதலிடம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும், அசத்தல் டிசைன், மாடர்னான இன்டீரியர், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் என புதுமையான வசதிகள் என க்விட் முன்னிலை பெறுகிறது. கியர் லிவருக்கு பதிலாக மின் விசிறியின் வேகத்தை மாற்றுவதற்கான ரொட்டேட்டர் போன்று கியர் ஆஃப்ஷனை எளிதாக தேர்ந்தெடுப்பதற்கான சிறிய கியர் நாப் கொடுக்கப்பட்டிருக்கிறது புதுமையிலும் புதுமை.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று குறைந்ததில்லை என்பதை இந்த ஒப்பீட்டின் மூலம் அறியலாம். அதேநேரத்தில், செலிரியோவைவிட க்விட் காரின் ஏஎம்டி மாடல் விலை குறைவாக வரும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், டிரைவர் பக்கத்திற்கான ஏர்பேக் பெற்றிருப்பதும் க்விட்டை சிறந்த சாய்ஸ் என்று கூறலாம்.

Most Read Articles
English summary
Battle For Supremacy — Renault Kwid AMT vs Maruti Celerio AMT.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X