புதிய டாடா ஸெஸ்ட் ஏஎம்டி மாடல் - டெஸ்ட் டிரைவ் அனுபவம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் கார் விற்பனைக்கு வந்தது. புத்தம் புதிய டிசைன் என்பதுடன், ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(ஏ.எம்.டி.,) என்ற புதிய வகை தானியங்கி கியர் பாக்ஸுடன் இந்த கார் விற்பனைக்கு வந்திருப்பதால், காற்று வாங்கி கொண்டிருந்த டாடா ஷோரூம்கள் தற்போது காற்று புக முடியாத அளவு கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

குறிப்பாக, ஏஎம்டி டிரான்ஸ்மிஷனில் வந்திருக்கும் டீசல் மாடலை டெஸ்ட் டிரைவ் செய்ய அதிக ஆர்வம் காணப்படுகிறது. இந்த நிலையில், டாடா ஸெஸ்ட் காரின் ஏஎம்டி டீசல் மாடலின் XMA டாப் வேரியண்ட்டை சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் டீம் பெற்றது. அதில் கிடைத்த சாதக, பாதகங்கள் குறித்த தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.


டெஸ்ட் டிரைவ் மாடல் விபரம்

டெஸ்ட் டிரைவ் மாடல் விபரம்

கார்: டாடா ஸெஸ்ட்

மாடல்: ஏஎம்டி டீசல்

வேரியண்ட்: XMA டாப் வேரியண்ட்

விலை: ரூ.6.99 லட்சம்

டிசைன்

டிசைன்

காம்பேக்ட் செடான்களில் சிறப்பான டிசைன் கொண்ட மாடலான ஹோண்டா அமேஸுக்கு அடுத்ததாக தற்போது ஓர் சிறப்பான டிசைன் கொண்ட காராக ஸெஸ்ட் காரை கூறலாம். முகப்பில் ஹனிகோம்ப் டிசைனிலான கிரில், புரொஜெடர் ஹெட்லைட்டுகள், குரோம் வேலைப்பாடுகள், தாழ்வான ஏர்டேம். பனிவிளக்குகள் என அட்டகாசமாக இருக்கிறது முகப்பு.

 பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

இந்த செக்மென்ட்டில் அதிக உயரம் கொண்ட மாடல் இது. இதனால், சிறப்பான கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்ட காம்பேக்ட் செடான். கூரை மிக அழகாக பின்புறத்துடன் இணைக்கப்பட்டிருப்பது அழகு சேர்க்கிறது. கருப்பு நிற பி பில்லர், கவர்ச்சியான 15 இஞ்ச் அலாய் வீல், புடைப்பான பாடி லைன்கள் என பக்கவாட்டிலும் சிறப்பாக இருக்கிறது.

பின்புற டிசைன்

பின்புற டிசைன்

ஹோண்டா அமேஸ் காரை போன்று மிக அழகான பின்புற டிசைன் கொண்ட காராக குறிப்பிடலாம். குரோம் பூட் லிட், டெயில் லைட் டிசைன் கவர்கிறது. டிஃபியூசருடன் கூடிய பம்பரும் கம்பீரத்தை கொடுக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

டாடா ஸெஸ்ட் காரில் 4,000ஆர்பிஎம்.,மில் 89 பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் அளிக்கும் 1,248சிசி ஃபியட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஃபியட் புன்ட்டோ எவோ மற்றும் லீனியா கார்களில் 2,000 ஆர்பிஎம்.மில் அதிகபட்ச டார்க்கை அளிக்கும் இந்த எஞ்சின் ஸெஸ்ட் இன்னும் குறைவான ஆர்பிஎம்மில் அதிகபட்ச டார்க்கை வழங்குகிறது. இதனால், நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலையில் அடிக்கடி கியர் மாற்றும் அவசியம் இல்லை. குறிப்பாக, ஓவர்டேக் செய்வதற்கு எளிதாக இருக்கிறது.

கவனம் தேவை

கவனம் தேவை

இந்த காரில் இடம்பெற்றிருக்கும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(ஏஎம்டி) ஸ்மூத்தாக இல்லை. ஏனெனில், இரட்டை கிளட்ச் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் கியர் மாறுவது மிக தெரியாத அளவு மிக மென்மையாக இருக்கும். ஆனால், இதில் கம்ப்யூட்டர் மூலம் இயங்கும் ஒற்றை கிளட்ச் தொழில்நுட்பம் குறைவான வேகத்தில் அல்லது சரிவான பாதையில் செல்லும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிதாக ஓட்டுபவர்கள் சரிவான பாதையில் கிளப்பும்போது கார் பின்னோக்கி வருவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. எனவே, பழகும் வரை கவனமாக ஓட்டுவது அவசியம். ஆனால், எஞ்சினை ஆஃப் செய்யும்போது டிரான்ஸ்மிஷன் லாக் ஆகி சரிவான இடத்தில் கூட கார் நகராமல் நிற்கிறது.

ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்

ஏஎம்டி டிரான்ஸ்மிஷன்

மேக்னெட்டி மரெல்லி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் இந்த ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் இந்திய சாலைநிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஆட்டோ, ஸ்போர்ட் மற்றும் ட்ரிப்ட்ரோனிக் ஆகிய மூன்று டிரைவிங் ஆப்ஷன்களில் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. நகர்ப்புறத்தில் ஆட்டோ டிரைவிங் ஆப்ஷன் சிறப்பாக இருக்கும். நெடுஞ்சாலைகளில் ஓட்டுவதற்கு ஸ்போர்ட் ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளலாம்.

ட்ரிப்ட்ரோனிக் ஆப்ஷன்

ட்ரிப்ட்ரோனிக் ஆப்ஷன்

மேனுவல் டிரான்ஸ்மிஷன் அனுபவத்தை பெற விரும்புபவர்களுக்கு ட்ரிப்ட்ரோனிக் ஆப்ஷன் சிறந்ததாக இருக்கும். பெரும்பாலும் ட்ரிப்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் கியரை குறைப்பதற்கு முன்னோக்கி லிவரை தள்ளவேண்டியிருக்கும். ஆனால், ஸெஸ்ட் ட்ரிப்ட்ரோனிக் மாடலில் கியரை குறைக்க பின்னோக்கியும், அதிகரிக்க முன்னோக்கியும் நகர்த்த வேண்டும். இந்த மாடலை வாங்குபவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் டிரைவிங் ஆப்ஷன் இதுவாக இருக்கும் என்றும் கூறலாம்.

கையாளுமை

கையாளுமை

இதன் சஸ்பென்ஷன் கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரத்தை மையமாக வைத்து ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், வளைவுகளில் திரும்பும்போது லேசான பாடி ரோல் தெரிகிறது. இது கார் பிரியர்களை இது சமசரம் செய்யாது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் ட்விஸ்ட் பீம் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்வுகளை எளிதாக உள்வாங்கி கொள்வதோடு, மோசமான சாலைகளை கண்டு அச்சப்பட வேண்டியதில்லை. இதன் பிரேக்குகள் செயல்பாடு சிறப்பாக இருப்பதால், நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

உட்புற வடிவமைப்பு அசத்தலாக இருக்கிறது. அதேவேளை, ஹூண்டாய் எக்ஸ்சென்ட் அளவுக்கு ஃபிட் அண்ட் ஃபினிஷ் இல்லை. டேஷ்போர்டின் மேல் சரிவான அமைப்பு, அதையொட்டி அமைக்கப்பட்டிருக்கும் ஏசி வென்ட்டுகள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சென்டர் கன்சோல் அமைப்பு கவர்கிறது. ஸ்டீயரிங் வீல் சுவிட்சுகள், பவர் விண்டோ சுவிட்சுகளை இயக்க எளிதாக இருக்கிறது.

இடவசதி

இடவசதி

பீஜ், சாம்பல் வண்ணத்தில் இரட்டை வண்ண அப்ஹோல்ஸ்டரி மற்றும் டேஷ்போர்டு ஆகியவை நம் நாட்டு வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும். இருக்கைகள் சொகுசாக இருப்பதுடன், அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஹெட்ரெஸ்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் இருக்கையை உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி இல்லாதது பெரும் குறை. டாடா கார்களை போல் இந்த காரிலும் பின்புற இடவசதி மிக சிறப்பாக இருக்கிறது. 5 பேர் பயணிப்பதற்கான இடவசதியை வழங்கும்.

முக்கிய சிறப்பம்சங்கள்- 1

முக்கிய சிறப்பம்சங்கள்- 1

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

ஸெஸ்ட் காரின் முக்கிய அம்சங்களில் ஒன்று ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம். 8 ஸ்பீக்கர்கள் கொண்ட இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இயக்குவது எளிதாக இருக்கிறது. மியூசிக் மற்றும் புளூடூத் வசதிகளை இயக்குவது மிக எளிது. இந்த காரின் மதிப்பை கூட்டும் ஆக்சஸெரீயாக இதனை கூறலாம்.

 குறைவான சப்தம்

குறைவான சப்தம்

இந்த காரின் கேபின் சப்தம் மிக குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டும்போது வியக்க வைத்த சிறப்பம்சமாக இதனை கூறலாம். எஞ்சின் அதிர்வுகள் மற்றும் டயர் சப்தம் கேபினுக்குள் மிக குறைவாக தெரிகிறது. இதனால், ஓட்டும்போது உற்சாகத்தை தொடர்ந்து தக்க வைக்கிறது.

 ஹெட்லைட்

ஹெட்லைட்

அதிக இரவு பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு இந்த கார் சிறப்பான அனுபவத்தை வழங்கும். அதிக பிரகாசத்தை வழங்கும் இதன் ஹெட்லைட்டுகள் இரவில் நம்பிக்கையுடன் பாதுகாப்பாக ஓட்டுவதற்கு துணைபுரியும்

 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பார்ப்பதற்கு தெளிவாக இருப்பதால் கார் ஓட்டும்போது அதிக நெருக்கடியை தராது. எழுத்துக்கள் மற்றும் எண்கள் எளிதாக படிக்க முடிகிறது. ஆர்பிஎம் மற்றும் டாக்கோமீட்டர்களுக்கு இடையில் இருக்கும் டிஜிட்டல் திரையில் மல்டி இன்ஃபர்மேஷன் திரை மூலம் பல எச்சரிக்கை தகவல்களை பெற முடியும்.

சுவிட்சுகள்

சுவிட்சுகள்

இந்த காரில் எமது குழுவினரை வசீகரித்த விஷயங்களில் ஒன்று சுவிட்சுகள். ஸ்டீயரிங் வீல் சுவிட்சுகள் மற்றும் பவர் விண்டோ சுவிட்சுகளை மிக எளிதாக இயக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ் ட்ரே

ஸ்டோரேஜ் ட்ரே

வாட்டர் பாட்டில், பர்ஸ், கண்ணாடி கூடுகள் போன்ற பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக முன் வரிசை பயணி இருக்கையின் கீழே ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

பாதகமான அம்சங்கள்

பாதகமான அம்சங்கள்

பூட் ரூம்

390 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் கொடுக்கப்பட்டிருந்தாலும், வீல் ஆர்ச்சுகளால் பூட்ரூம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உட்புற பூட்லிட்டில் கிளாடிங் கொடுக்கப்படவில்லை என்பதும் மிகப்பெரிய குறை.

புதிய டாடா ஸெஸ்ட் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

டிரைவர் இருக்கை

டிரைவர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி இல்லை என்பதால், உயரம் குறைவானவர்களுக்கு சிரமமாக இருக்கும். மேலும், டேஷ்போர்டும் உயரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. முன்புற சீட் பெல்ட்டும் அட்ஜெஸ்ட் வசதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பாதக அம்சங்கள்

பாதக அம்சங்கள்

ரியர் வியூ கண்ணாடி

உட்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ரியர் வியூ கண்ணாடி அளவில் சிறியதாக இருக்கிறது. இதனால், முழுமையாக காரின் பின்புறத்தை பார்க்க முடியவில்லை. இதேபோன்று, வெளிப்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ரியர் வியூ கண்ணாடிகளும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று உணர்வை ஏற்படுத்துகிறது.

பாதக அம்சங்கள்

பாதக அம்சங்கள்

டிரைவ் செலக்ட் பட்டன்

ஸ்போர்ட் டிரைவிங் ஆப்ஷனுக்கான பட்டன் கியர்நாபுக்கு பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டிருந்தால் இயக்குவதற்கு சிறப்பாக இருந்திருக்கும்.

பாதக அம்சங்கள்

பாதக அம்சங்கள்

பார்வை திறன்

வைன்ட்ஸ்கிரீன் சிறப்பாக இருந்தாலும், இதன் ஏ பில்லர் அதிக தடிமன் கொண்டிருப்பதால், சில சமயம் போதிய பார்வையை வழங்கவில்லை. குறிப்பாக, வளைவுகளில் திரும்பும்போது சிரமத்தை தருகிறது.

பாதக அம்சங்கள்

பாதக அம்சங்கள்

கப் ஹோல்டர்

முன் பயணி இருக்கைக்கு கீழே உள்ள ட்ரே முழுவதும் நிரம்பி விட்டால், தண்ணீர் பாட்டில் வைப்பதற்கு இடவசதி இல்லை.

எஞ்சின், மைலேஜ்

எஞ்சின், மைலேஜ்

89 பிஎச்பி பவரை அளிக்கும் இந்த டீசல் கார் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எமது டெஸ்ட் டிரைவின்போது சாதாரண நிலைகளில் வைத்து ஓட்டியபோது சராசரியாக 18 முதல் 19 கிமீ மைலேஜ் தந்தது. அதுவே, அதிக வேகத்தில் தொடர்ந்து ஓட்டினால் லிட்டருக்கு 14 கிமீ மைலேஜ் மட்டுமே தருகிறது. 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த காரின் கெர்ப் எடை 1,170 கிலோ.

வெற்றி யார் கையில்?

வெற்றி யார் கையில்?

போட்டியாளர்களைவிட சிறப்பான தோற்றம், டீசல் மாடலில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன், சிறப்பு வசதிகள் என்பதுடன் வாடிக்கையாளர் விரும்பும் ஏராளமான அம்சங்கள் மிகையாகவே உள்ளது. டாடா ஸெஸ்ட் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற சிறப்பான மாடல். ஆனால், டிரைவர் இருக்கை அட்ஜெஸ்ட் வசதி இல்லாதது, உட்புறத்தில் ஆங்காங்கே தென்படும் ஃபிட் அண்ட் ஃபினிஷ் குறைபாடுகள் என்பதுடன் டாடா மோட்டார்ஸ் பிராண்டு ஏற்பட்டுவிட்ட அவப்பெயரும் டாடா ஸெஸ்ட் காரின் வெற்றியை பாதிக்கும் காரணிகளாக இருக்கின்றன. உதிரிபாகங்கள் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றால் நிச்சயம் டாடாவின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக ஸெஸ்ட் வலம் வரும்.

Most Read Articles
English summary
when we got our paws on the wheel of the Tata Zest XMA Diesel, the top-spec diesel variant and the only car in its segment with an AMT unit. Tata is pinning big expectations on this version of the Zest, hoping it will be the compact sedan to make some sense of our mental traffic situations, and impress on the highway too. It looks good on paper, but let's see if it works on tarmac.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X