இன்றைய தேதியில் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்கள்!

அதிகரித்து வரும் எரிபொருள் விலையை முறியடிக்க, அதிக மைலேஜ் தரும் டீசல் கார்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

இதனால், அதிக மைலேஜ் தரும் கார் என்ற பட்டத்தை சுமந்து கொண்டு வரிசையாக கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது. லிட்டருக்கு 25 கிமீ., மைலேஜ் என்பதையெல்லாம் தாண்டி, இன்றைக்கு லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் என்ற நிலையை நோக்கி, கார்களின் மைலேஜ் விபரம் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்றைய தேதியில் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலை ஸ்லைடரில் வழங்கியிருக்கிறோம்.

பட்டியல்

பட்டியல்

அராய் சான்றுபடி, அதிகபட்ச மைலேஜ் தரும் மாடல்களை வரிசைப்படுத்தியுள்ளோம். முதல் ஐந்து இடங்களில் டீசல் மாடல்களே இடம்பெற்றிருக்கின்றன. ஒரு பெட்ரோல் மாடல் கூட இல்லை. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் விபரங்களை காணலாம்.

05. ஹோண்டா அமேஸ் டீசல்

05. ஹோண்டா அமேஸ் டீசல்

மைலேஜ்: 25.8 கிமீ/லி

பெட்ரோல் எஞ்சினுக்கு பெயர்பெற்ற ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் டீசல் கார் மாடல் அமேஸ். வந்தது முதல் இதுவரை சிறப்பான விற்பனையையும் பதிவு செய்து வருகிறது. 4 மீட்டருக்கும் கீழே சுருக்கப்பட்ட செடான் கார் மாடல்களில் சிறப்பான சாய்ஸாக இருந்து வருகிறது. மைலேஜ் மட்டுமென்றில்லை, அதிக செயல்திறன் மிக்க எஞ்சினுடன் கிடைப்பதும் இதன் ப்ளஸ் பாயிண்ட்.

அமேஸ் டீசல் மாடல் தொடர்ச்சி...

அமேஸ் டீசல் மாடல் தொடர்ச்சி...

ஹோண்டா அமேஸ் காரில் இருக்கும் 1.5 லிட்டர் ஐ- டிடெக் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. பேஸ் மாடலிலேயே போதுமான அடிப்படை வசதிகளை கொண்ட காம்பேக்ட் செடான் மாடல் என்பதும், ஹோண்டாவின் நம்பகமான கார் மாடலாக விளங்குவதும் இதன் கூடுதல் சிறப்புகள். சென்னையில், இதன் டீசல் மாடல் ரூ.7.18 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

04. ஹோண்டா சிட்டி டீசல்

04. ஹோண்டா சிட்டி டீசல்

மைலேஜ்: 26.0 கிமீ/லி

இந்திய சந்தையில், ஹோண்டாவின் வெற்றிகரமான கார் மாடலாக வலம் வருகிறது. பெட்ரோல் எஞ்சினை வைத்தே முதலிடத்தை தக்க வைத்து வந்த இந்த காரின் டீசல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்ட பின் விற்பனை படு ஜோராக இருந்து வருகிறது. டிசைன், வசதிகள் என்பதோடு, கவுரவத்தின் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது.

சிட்டி டீசல் எஞ்சின் தொடர்ச்சி...

சிட்டி டீசல் எஞ்சின் தொடர்ச்சி...

அமேஸ் காரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் ஐ- டிடெக் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. சென்னையில் இதன் பேஸ் மாடல் ரூ.10.06 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

03. மாருதி சியாஸ் டீசல்

03. மாருதி சியாஸ் டீசல்

மைலேஜ்: 26.3 கிமீ/லி

மாருதியின் எஸ்எக்ஸ்4 செடான் காருக்கு மாற்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாடல். ஹோண்டா சிட்டி மார்க்கெட்டை உடைக்கும் நோக்குடன், அதன் டிசைன் தாத்பரியங்களை பயன்படுத்தியதோடு, எஞ்சினிலும் ட்யூனிங் செய்து அதைவிட அதிக மைலேஜ் தரும் காராக இதனை நிலைநிறுத்தியது மாருதி கார் நிறுவனம். ஆனாலும், பெர்ஃபார்மென்சில் ஹோண்டா சிட்டி காருடன் போட்டி போட முடியவில்லை.

 மாருதி சியாஸ் டீசல் எஞ்சின்

மாருதி சியாஸ் டீசல் எஞ்சின்

ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் இந்த காரில் உள்ளது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். 43 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. போதுமான வசதிகள், இடவசதியில் சிறப்பாக கார் மாடல். மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த காருக்கு ப்ளஸ் பாயிண்ட்டுகளாக கூறலாம். சென்னையில் இதன் டீசல் மாடல் ரூ.9.98 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.

 02. மாருதி சுஸுகி டிசையர் டீசல்

02. மாருதி சுஸுகி டிசையர் டீசல்

மைலேஜ்: 26.59 கிமீ/லி

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் காரின் டீசல் மாடல் பெற்றிருந்தது. ஆனால், செலிரியோ டீசல் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், இந்த கார் இரண்டாவது இடத்துக்கு சென்றுவிட்டது. காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் நினைத்து பார்க்க முடியாத அளவு விற்பனை எண்ணிக்கையை மாதந்தோறும் பதிவு செய்து வருகிறது. நடுத்தர வர்க்கத்தின் செடான் கார் கனவை பூர்த்தி செய்து வரும் மாடல்.

 டிசையர் டீசல் எஞ்சின் விபரம்

டிசையர் டீசல் எஞ்சின் விபரம்

இந்த காரிலும் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் உள்ளது. ஆனால், கூடுதல் வசதிகள், தோற்றத்தில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டு வந்த புதிய டிசையர் மாடலின் டீசல் எஞ்சின் அதிக மைலேஜ் தரும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டது. இந்த கார் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். 42 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. மைலேஜில் சிறப்பாக இருப்பதுடன், மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க், குறைவான பராமரிப்பு செலவீனம் போன்றவை இந்த காருக்கு கூடுதல் மதிப்பை பெற்றுத் தருகிறது. சென்னையில், ரூ.7.35 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து கிடைக்கிறது.

01. மாருதி சுஸுகி செலிரியோ டீசல்

01. மாருதி சுஸுகி செலிரியோ டீசல்

மைலேஜ்: 27.62 கிமீ/லி

இன்றைய தேதியில் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான மாடல் மாருதி செலிரியோ டீசல்தான். சமீபத்தில் விற்பனைக்கு வந்த இந்த காரில் மாருதி சுஸுகி நிறுவனம் சொந்தமாக தயாரித்த புத்தம் புதிய 800சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. குறைவான விலையில் டீசல் காரை விரும்புபவர்களுக்கு பர்ஃபெக்ட் சாய்ஸ்.

செலிரியோ டீசல் எஞ்சின் விபரம்

செலிரியோ டீசல் எஞ்சின் விபரம்

மாருதி செலிரியோ டீசல் மாடலில் இருக்கும் 2 சிலிண்டர்கள் கொண்ட புதிய 793சிசி டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க்கையும் வழங்கும். 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிக மைலேஜ் தரும் கார் என்பதோடு, மாருதி பிராண்டின் சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் குறைவான பராமரிப்பு உள்ளிட்டவை இந்த காருக்கு ப்ளஸ் பாயிண்டுகள். சென்னையில் ரூ.5.64 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #டாப் 5 #review
English summary
Here is the list of the 10 most fuel-efficient cars in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X